Erode

News January 22, 2025

விஜயை கூட்டணிக்கு அழைக்கவில்லை: செல்வபெருந்தகை

image

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை எம்எல்ஏ ஈரோட்டில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், நடிகர் விஜய் அம்பேத்கர், பெரியார், காமராஜரை பற்றியே பேசி வருகிறார். எங்களது கொள்கையுடன் இணைந்து அவர் செயல்படுவதால் இந்தியா கூட்டணியில் வந்து சேர்ந்து விடலாம் என்று ஏற்கனவே கூறியிருந்தேன். ஆனால் கூட்டணிக்கு அழைப்பு விடுக்கவில்லை. ஒரே கொள்கையுடன் இருப்பதால் அவ்வாறு கூறினேன் என்றார்.

News January 22, 2025

தேர்தல் அலுவலர் திடீர் மாற்றம்: காரணம் என்ன?

image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்.5ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் 46 பேர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், தேர்தல் நடத்தும் அதிகாரி மனிஷ் திடீரென மாற்றப்பட்டார். அதற்கு பதிலாக ஓசூர் மாநகராட்சி ஆணையராக இருந்த ஸ்ரீகாந்த் தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டார். இதற்கான காரனம் என்ன? (அடுத்த பக்கம்)

News January 22, 2025

தேர்தல் அலுவலர் மாற்றம் (2/2)

image

இடைத்தேர்தலில் கர்நாடாகவைச் சேர்ந்த பத்மாவதியின் வேட்புமனு ஏற்கப்பட்டது. அது எப்படி அவரது மனுவை ஏற்கலாம் என சுயேச்சை வேட்பாளர் கேள்வி எழுப்பினார். இது பெரும் சர்சையான பிறகு அவரது வேட்புமனு ரத்து செய்யப்பட்டது. வேறு மாநிலத்தில் வாக்குரிமை வைத்திருப்பவர், மற்றொரு மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முடியாது என விதியுள்ளது. இதனையடுத்து பணியில் கவனக்குறைவாக இருந்ததால், தேர்தல் அதிகாரி மாற்றப்பட்டார்.

News January 22, 2025

ஈரோடு: தேர்தல் அதிகாரியாக ஸ்ரீகாந்த் பொறுப்பேற்றார்

image

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், பெங்களூருவை சேர்ந்தவரின் வேட்புமனு ஏற்கப்பட்டது சர்ச்சையான நிலையில், தேர்தல் அதிகாரியாக இருந்த மணிஷ் மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு மாற்றாக, ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் ஸ்ரீகாந்த்தை தேர்தல் ஆணையம் நியமித்தது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அதிகாரியாக ஸ்ரீகாந்த், ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். 

News January 22, 2025

ஈரோட்டில் ரயில் மோதி தொழிலாளி பலி!

image

ஈரோடு,கொல்லம்பாளையம் காட்டு தெருவில் வசித்த தொழிலாளி மூர்த்தி 56. பொங்கல் பண்டிகைக்காக சகோதரி வீட்டுக்கு வந்துள்ளார். மது குடிக்கும் பழக்கம் இருந்தது. எட்டு ஆண்டுகளாக காது கேட்காது. நேற்று மதியம் ஊஞ்சலுார்-பாசூர் ரயில்பாதையை கடக்க முற்பட்டார். அப்போது ஈரோடு-செங்கோட்டை பாசஞ்சர் ரயில் மோதியதில், தலை துண்டாகி பலியானார். ஈரோடு ரயில்வே போலீசார் உடலை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News January 22, 2025

ஈரோடு கிழக்கு தேர்தல் அதிகாரி மாற்றம்

image

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அதிகாரியாக இருந்த மணிஷ் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய தேர்தல் அதிகாரியாக ஸ்ரீகாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பெங்களூருவை சேர்ந்தவரின் வேட்புமனு ஏற்கப்பட்டது சர்ச்சையான நிலையில், தேர்தல் அதிகாரி மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

News January 22, 2025

பவானி: சிங்கம்பேட்டையில் பிடிபட்ட மலைப்பாம்பு

image

பவானி, சிங்கம்பேட்டை கேட், காட்டூா் அருகே, காவிரிக் கரையோரப் பகுதியில், மலைப்பாம்பு மெதுவாக ஊர்ந்து சென்றுள்ளது. இதைக் கண்ட அப்பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள், மலைப்பாம்பை லாவகமாக பிடித்ததோடு, சென்னம்பட்டி வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த வனத்துறையினா் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை, கூண்டில் அடைத்துச் சென்று, சென்னம்பட்டி வனப் பகுதியில் பாதுகாப்பாக விடுவித்தனா்.

News January 22, 2025

ஈரோட்டில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

image

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின், முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டம் நடைபெற்றது. திடீரென ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், 72 மாற்றுத்திறனாளிகளை கைது செய்தனர்.

News January 21, 2025

ரயில் பயணிகள் கவனத்திற்கு 

image

ஈரோடு, ஜோலார்பேட்டையில் சிக்னல் உள்கட்டமைப்பு பணிக்காக ஈரோட்டில் 6 மணிக்கு புறப்படும் ரயில் எண்.56108 ஈரோடு–ஜோலார்பேட் ரயில் 21, 28ஆம் தேதி திருப்பத்தூர்–ஜோலார்பேட் இடையில் பகுதியளவில் ரத்து செய்யப்படும்.  ஜோலார்பேட்டையில் இருந்து 14.45 மணிக்கு புறப்படும் ரயில் எண்.56107 ஜோலார்பேட்– ஈரோடு ரயில் 21, 28 தேதி ஜோலார்பேட்டை–திருப்பத்தூர் இடையில் பகுதியளவில் ரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளது.

News January 21, 2025

ஈரோடு வரும் சீமான் 

image

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் அடுத்த மாதம் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக சீதாலட்சுமி “மைக்” சின்னத்தில் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வரும் 24ம் தேதி முதல் பிப்.3 தேதி வரையில் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக வேட்பாளர் சீதாலட்சுமி தெரிவித்தார்.

error: Content is protected !!