India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு மாவட்டத்தில், யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ், காம்ப்ளக்ஸ், சூப்பர் பாஸ்பேட் போன்ற உரங்கள் வேளாண் பயன்பாட்டிற்கு மானிய விலையில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில், யூரியா 45 கிலோ மூட்டை, மானிய விலையில் ரூ.266.50க்கு வழங்கப்படுகிறது என ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் தமிழ்செல்வி தெரிவித்துள்ளார்.
சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அம்மாபாளையம், பசுவட்டி, முகாசிப்பிடாரியூர், எக்காடம் பாளையம், குமராபுரி, ராமலிங்கபுரம், உப்பிலிபாளையம் பகுதிகளில் இன்று மதியம் சுமார் 10 நிமிடம் வீடுகளில் உள்ள ஜன்னல்கள் மற்றும் கதவுகள், கூரைகள் லேசாக அதிர்ந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும், இதற்கான காரணம் தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.
ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் பகுதியில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் நிலை கண்காணிப்புக் குழு அலுவலா், தனபிரனேஷ் தலைமையிலான குழுவினா், நேற்று மாலை வாகன தணிக்கை மேற்கொண்டனா். அப்போது ஏடிஎம் இயந்திரங்களுக்கு பணம் நிரப்பும் வாகனத்தில், உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச்செல்லப்பட்ட, ரூ.1.50 கோடியை தோ்தல் அலுவலா்கள் பறிமுதல் செய்து, ஈரோடு மாநகராட்சி அலுவலகத்துக்கு கொண்டுச் சென்றனா்.
ஈரோடு மாவட்டத்தில் நாளை பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. இதில் ஈரோடு தாலுகா தவிர்த்து, பெருந்துறை, மொடக்குறிச்சி, கொடுமுடி, கோபி, பவானி, சத்தி உள்ளிட்ட 9 தாலுகாவிலும் உள்ள ரேஷன் கடைகளில், நடக்கும் முகாம்களில், அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். ரேஷன் கார்டு புதுப்பித்தல், பெயர் நீக்கம், திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்கு மனு வழங்கலாம் என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.
பொதுமக்கள் ஏடிஎம் பயன்படுத்தும் போது எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட போலீசார் எச்சரித்துள்ளனர். உங்கள் பின் எண்ணை யாருடனும் பகிர வேண்டாம். ஒவ்வொரு பரிவர்த்தனைக்கு பிறகும் உங்கள் ரசீதுகளை எப்போதும் வைத்திருங்கள். உங்கள் பரிவர்த்தனையின் போது உங்களுக்கு உதவ யாரும் முன்வர அனுமதிக்காதீர்கள் என, ஈரோடு மாவட்ட போலீசார் எச்சரித்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அடுத்த மாதம் நடக்கிறது அதை ஒட்டி ஐந்து பறக்கும் படையில் அமைக்கப்பட்டு தேர்தல் பட்டுவாடாவுக்கு பணம் கொண்டு செல்லப்படுகிறதா என கண்காணித்து வருகின்றனர். பணம் ஆவணங்களுடன் எடுத்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்ட நிலையில் இன்று தனியார் ஏடிஎம் நிறுவனத்தார் உரிய ஆவணம் இல்லாமல் ₹ 1.50 கோடி எடுத்துச் சென்றதை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமிக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்வதற்காக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நாளை (ஜன.24) ஈரோட்டுக்கு வருகை தருகிறார். மாலையில் கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் தனது பிரச்சாரத்தை தொடங்க இருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஈரோடு அடுத்த சித்தோடு அரசினர் பொறியியல் கல்லூரி சாலையில், வாசவி கல்லூரி அருகே, கனரா வங்கி கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு இலவசமாக எலக்ட்ரிக்கல் ஒயரிங் & மின்சாதன பொருட்கள் பழுது நீக்குதல் பயிற்சி வரும், 29-01-2025 முதல் 05-03-2025 வரை நடைபெற உள்ளது. இலவச பயிற்சி, சீருடை, உணவு, சான்றிதழ் வழங்கப்படும். மேலும் தொடர்புக்கு : 0424-2400338, 8778323213, 7200650604.
அந்தியூர், எண்ணமங்கலம், விராலி காட்டுப்புதூர் கிராமங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முந்தினம் இரவு ஒரு மணி அளவில், வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை ஒன்று, விராலி காட்டுப்புதூர் கிராமத்துக்குள் புகுந்தது. சிறுத்தை நடமாட்டம் அங்கு ஒரு வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி கேமரா காட்சியில் பதிவாகி இருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
ஈரோடு (கிழக்கு) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்-2025ஐ முன்னிட்டு, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா இன்று (22.01.2025) ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பி.பெ.அக்ரஹாரம், மாவட்ட அரசு இசைப்பள்ளியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடியினை ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் மற்றும் பலர் உடன் இருந்தார்.
Sorry, no posts matched your criteria.