India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு மக்களே, தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1483 கிராம ஊராட்சி செயலாளர் (Panchayat Secretary) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு 10ம் வகுப்பு படித்தால் போதுமானது. சம்பளம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் நவ.09ம் தேதிக்குள் <
ஈரோடு மக்களே, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (மருத்துவமனை பட்டியல்) <
ஈரோடு மாவட்டத்தில் நாளை அக்.11 ரேஷன் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இதில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய ரேஷன் அட்டை விண்ணப்பித்தல், செல்போன் எண் பதிவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனு அளிக்கலாம். மேலும் நியாய விலை கடைகளின் செயல்பாடுகள் குறித்தும் புகார் அளிக்கலாம் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். முகாம் நடைபெறும் இடங்கள் அறிய <
ஈரோடு, உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதியோர் ஓய்வூதியத் திட்டம் செயல் பாட்டில் உள்ளது. இந்தத் திட்டம் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உறுப்பினர் அட்டை வைத்திருக்கும் வயதான விவசாயிகள் மற்றும் ஆதரவற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு ரூ.1,000/- ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் அருகில் உள்ள இ சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்! மேலும் விபரங்களுக்கு <
ஈரோடு மக்களே தமிழகம் முழுவதும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை அக்.11 கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெறுகின்றது. இந்நிலையில் கிராம சபைக் கூட்டத்தில் உங்கள் ஊராட்சியின் வரவு செலவு கணக்கு வாசிக்கப்படும், எனவே ஊராட்சி வரவு செலவு கணக்கில் பிழை (அ) மாற்றம் இருப்பதை கண்டறிய இந்த <
சென்னிமலை காட்டூர் ரோடு ராஜீவ் நகரைச் சேர்ந்த கோபி இவருடைய மகன் சரண் வயது (14) இவர் சென்னிமலை காமராஜர் உயர்நிலைப் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வருகின்றார். கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாத மாணவர் நேற்று பசுவட்டி கணபதி பாளையம் கீழ் பவானி வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். சென்னிமலை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தாளவாடி அருகே உள்ள திம்பம் மலைப்பாதை 1வது கொண்டை ஊசி வளைவில், கர்நாடகா சாம்ராஜ்நகர் இருந்து கோவைக்கு பழம் பாரம் ஏற்றி வந்த பிக்கப் வேன் மாலை நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. விபத்து காரணமாக திம்பம் மலைப்பாதையில் சிறிது நேரம் போக்குவரத்து தற்காலிகமாக பாதிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்தியமங்கலம் அடுத்த தாசரிபாளையம் பகுதியில் ரோந்து பணியில் இருந்த பங்களாப்புதூர் போலீசார் சந்தேக வாகனத்தை நிறுத்தி
சோதனையிட்டதில், வாகனத்திற்குள் மூட்டைகளில் மறைத்து வைத்திருந்த, 519 கிலோ சந்தன மரக்கட்டைகள் இருப்பதை கண்டுபிடித்தனர். விசாரணையில் கேரளா மாநிலம் வித்யா நகரை சேர்ந்த டிரைவர் ஜெய்னுள் அபுதீன் (49), அப்துல் ரஷாக் (50) என தெரிய வந்தது . இருவரையும் சத்தி வனத்துறையினரும் ஒப்படைத்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் இன்று (09.10.2025) இரவு ரோந்து பணிக்கு, காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை முடிவடைந்த நிலையில், ஈரோடு மாவட்டத்தில் சில இடங்களில், கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று, ஈரோடு மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.
Sorry, no posts matched your criteria.