Erode

News November 10, 2024

தேசிய அளவிலான அட்யா பட்யா போட்டி பரிசளிப்பு விழா

image

தேசிய அளவிலான அட்யா பட்யா ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டி நேற்று முன்தினம் ஈரோடு கொங்கு நேஷனல் பள்ளியில் துவங்கியது. அதன் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. மாணவர்கள் மற்றும் மாணவிகள் இரண்டு பிரிவிலும் பாண்டிச்சேரி அணியினர் வெற்றி பெற்றனர். பரிசளிப்பு விழாவில் சிந்து ரவிச்சந்திரன் கலந்து கொண்டு பரிசு கோப்பையை வழங்கினார்.துணை தலைவர் கவின் சங்கர் நன்றி தெரிவித்தார்.

News November 10, 2024

தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

image

ஈரோடு, மேட்டூர் சாலையில் உள்ள ஜெம் நகை தொழில்நுட்ப பயிற்சி மையத்தில், மத்திய அரசின் ஸ்கில் இந்தியா அமைப்பு சார்பில், நாளை (நவ.11) முதல் 20ஆம் தேதி வரை தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி நடைபெற உள்ளது. இதில் தங்கத்தின் விலை கணக்கிடும் முறை, கொள்முதல் செய்யும் முறை, தங்கத்தின் தரம் அறிதல், கடன் தொகை வழங்கும் முறை போன்ற பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சி முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும்.

News November 10, 2024

மருத்துவமனைக்கு படையெடுக்கும் மக்கள்

image

ஈரோட்டில் கடந்த சில நாட்களாகவே பருவ நிலை மாற்றம் மற்றும் மழை காரணமாக காய்ச்சல் மற்றும் சளி அதிகரித்து வருவதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. மக்கள் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் படை எடுத்த வண்ணம் அதிகாலையில் இருந்தே வருகின்றனர். மக்கள் போதிய அளவில் விழிப்புணர்வு இருக்க வேண்டும் எனவும். நீர் தேங்கா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.

News November 10, 2024

ஆய்வக நுட்புநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

image

ஈரோடு மாநகராட்சியில், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 4 ஆய்வக தொழில்நுட்ப அதிகாரி காலிப்பணியிடங்கள் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்கு தகுதியான நபர்கள் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை நவம்பர் 25ஆம் தேதிக்குள் ஆணையாளர், ஈரோடு மாநகராட்சி அலுவலகம், மீனாட்சி சுந்தரனார் சாலை, ஈரோடு என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என ஈரோடு ஆணையாளர் என்.மனிஷ் தெரிவித்துள்ளார்.

News November 10, 2024

மனுநீதி நாள் முகாம்

image

பெருந்துறை, காஞ்சிக்கோயில் உள் வட்டம் கந்தம்பாளையம் கிராமம் அம்மன் திருமண மண்டபத்தில் வரும் 13-ஆம் தேதி புதன்கிழமை காலை 11 மணிக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் அனைத்து துறை அலுவலர்களும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிகளும் கலந்து கொண்டு பொதுமக்கள் மனுக்கள் மீது தீர்வு காண உள்ளனர். இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

News November 9, 2024

ஈரோடு: உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு

image

பெருந்துறை பகுதியில் செயல்பட்டு வரும் பால் சார்ந்த பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தில் தயாரிக்கப்படும் பொருளின் தயாரிப்பு முறை மற்றும் தரம் குறித்து ஆய்வு இன்று (9/11/24) மேற்கொள்ளப்பட்டது. இதனை உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் மாநில ஆணையாளர் லால்வேனா ஆய்வு செய்தார். உடன் ஈரோடு மாவட்ட நியமன அலுவலர் தங்க விக்னேஷ் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

News November 9, 2024

ஈரோடு பஸ் நிலையத்தில் அட்ராசிட்டி செய்த வாலிபர்

image

ஈரோடு பேருந்து நிலையத்தில் இன்று போக்குவரத்து போலீசார் பஸ் நிலையத்திற்கு வரும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர். இந்நிலையில் இருசக்கரத்தில் அத்துமீறி நுழைந்த வாலிபருக்கு போக்குவரத்து போலீசார் ரூ.3500 அபராதம் விதித்து மூன்று வழக்குகள் பதிவு செய்தனர். ஆத்திரத்தில் மற்ற வாகனங்களையும் வழி மறித்து அபராதம் விதிக்கச் சொல்லி இளைஞர் தொந்தரவு செய்த கூறப்படுகிறது. 

News November 9, 2024

சமையல் செய்துகொண்டிருந்த பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு

image

தளவாய்பேட்டை வினோபா நகரில் புதுவீடு கிரகப்பிரவேசத்திற்காக சித்ரா (38) சமையல் வேலைக்கு சென்றிருந்தார். அப்போது, தக்காளி வெட்டும் இயந்திரத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனையடுத்து, அங்கே இருந்தவர்கள் அவரை மீட்டு பவானி அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

News November 9, 2024

ஈரோடு: அரசுப் பேருந்தும், காரும் மோதி விபத்து

image

இன்று (09.11.2024) காலை சத்தியிலிருந்து சுமார் 35 பயணிகளுடன் கோவை நோக்கி சென்ற அரசுப் பேருந்தும், கோவையிலிருந்து சத்தி நோக்கி வந்த காரும் எதிரெதிரே மோதிக்கொண்டன. இச்சம்பவத்தில் இரு வாகனங்களும் பெரிதும் சேதமடைந்த போதிலும் பயணிகளும், காரில் வந்த இருவரும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

News November 9, 2024

ஈரோட்டில் சாதித்த கோவை வீராங்கனைகள்

image

மாநில அளவிலான தடகள போட்டி ஈரோடு வஉசி பூங்காவில் கடந்த 6ஆம் தேதி துவங்கியது. இதில் மாணவிகளுக்கு நடைபெற்ற தடகளப்போட்டியில் 2 ஆயிரத்து 518 வீராங்கனைகள் பங்கேற்றனர். 43 வகையான போட்டிகள் நடைபெற்றன. நேற்று தடகளப் போட்டிகள் நிறைவடைந்தன. இதில் கோவை மாவட்ட அணி 54 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. இன்று ஆண்களுக்கான தடகளப் போட்டி துவங்குகின்றன.