India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு, சென்னிமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1749 அடி உயர மலையின் மீது கம்பீரமாக அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக சுப்பிரமணியர் வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் திருமணத் தடை அகலும், குழந்தை பாக்கியம் கைகூடும், தீராத நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்துணவு மையங்களில், காலியாக உள்ள 139 (51+6+82) சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நிரப்பப்பட உள்ளன. இதற்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை erode.nic.in என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, ஏப்.,28 மாலை 5.45 மணிக்குள், தொடர்புடைய நகராட்சி, ஊராட்சி அலுவலகங்களில் சமர்பிக்கலாம். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு இதை SHARE செய்யவும்.
ஈரோடு சூரியம்பாளையத்தை சேர்ந்தவர் மதன்ராஜ். இவரது மனைவி சினேகா. இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இந்நிலையில் மதன்ராஜ் அடிக்கடி சந்தேகப்பட்டு சினேகாவிடம் பிரச்சனை செய்து வந்தார். சம்பவத்தன்று, மதன்ராஜ் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து பிரச்னையில் ஈடுபட, அதனை வாங்கி சினேகாவும் குடித்துள்ளார். இருவரும் மருத்துவமனையில் அனுமதிகப்பட்ட நிலையில் சினேகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஈரோடு, ஞானிபாளையம், தண்ணீர்பந்தலை சேர்ந்தவர் குருவன் (80). இவர் கடந்த 8-ம் தேதி வெள்ளோடு செல்வதற்காக வீட்டில் இருந்து வெளியேறினார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இந்நிலையில் வேப்பிலை பிரிவு குன்னாங்காட்டுவலசு பகுதியில் செல்லும் வாய்க்காலில் குருவன் பிணமாக கிடந்தார். சென்னிமலை காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் அட்டை திருத்த முகாம் நாளை (ஏப்ரல் 12) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் நீக்கம், திருத்தம், சேர்த்தல், முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்ற அப்டேட்களைச இலவசமாக செய்து கொள்ளலாம் கட்டணம் இல்லை.
ஈரோடு, கொங்கம்பாளையம், ஈரோடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், பகுதிநேர நகை மதிப்பீடு, அதன் நுட்பங்கள் குறித்த பயிற்சி, வரும் ஏப்.15ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் ஏப்.,13 வரை ஈரோடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் வழங்கப்படும். மேலும் தகவலுக்கு 0424-2998632 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த பயிற்சியை பெற நினைக்கும் உங்களது நண்பர்களுக்கு இத SHARE பண்ணுங்க.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து மளிகை கடைகளிலும் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என தொழிலாளர் நல ஆணையாளர் கோ. ஜெயலட்சுமி உத்தரவிட்டுள்ளார். மாவட்டத்திலுள்ள அனைத்து உணவகங்கள், மளிகை கடைகள் வணிகம் நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும், மேலும் இதற்கு அனைத்து தொழிற்சங்கங்களும் வணிக நிறுவனங்களும் ஒத்துழைப்பு மற்றும் உறுதி தர வேண்டும் எனவும் கூறினார்.
ஈரோடு மாவட்டத்தில் 2025-26ஆம் ஆண்டு அக்னி வீர் திட்டத்தின் கீழ் 10,12 ஆம் வகுப்பு படித்த இளைஞர்களுக்கு பொதுப்பணி, டெக்னிக்கல், கிளார்க், டிரேட்ஸ்மென் பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. இதில் விண்ணப்பிக்க இன்றே (ஏப்.10) கடைசி நாள். விண்ணப்பிக்க விரும்புவர்கள் <
மகாவீரா் ஜெயந்தியை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் முழுவதும் இன்று (ஏப்.10) இறைச்சி விற்பனைக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. அதனை மீறி செயல்பட்டு வரும் ஆடு, கோழி, மீன், பன்றி ஆகிய இறைச்சிக் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பெருந்துறை அடுத்துள்ள நிச்சயம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் காமராஜர். ஓட்டுநரான இவர், தற்போது ஆர்.எஸ்.ரோடு, அசோக் நகர் பகுதியில் வசித்து வருகிறார். இவர் நேற்று மாலை பைக்கில், கடைவீதி சென்றுள்ளார். ஆர் எஸ் ரோடு பகுதியில் வந்தபோது, அந்த வழியாக பெருந்துறை நோக்கி வந்த மற்றொரு பைக், அவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த காமராஜர் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.