India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஈரோடு மாவட்டத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத, படிக்க தெரியாதவர்களுக்கு அடிப்படை கல்வி வழங்கும் வகையில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. எனவே தங்கள் பகுதியில் எழுத, படிக்க தெரியாதவர்கள் இருப்பின் அருகில் உள்ள தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் தெரிவிக்கலாம் என ஈரோடு கலெக்டர் ராஜ கோபால் சுங்கரா தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் இன்று (மே.24) மாலை 4 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஈரோட்டில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சமீபத்தில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதை 27 அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகளை கொண்டதாகும். இந்த மலைப்பாதை தமிழக கர்நாடகத்தை இணைக்கும் முக்கிய வழித்தடம் ஆகும் இரவு நேரத்தில் போக்குவரத்திற்கு தடை இருப்பதால் காலை 6 மணிக்கு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வாகனங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் திம்பம் மலைப்பாதையில் அணிவகுத்து செல்வதால் கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

தாளவாடி அடுத்த கரளவாடி கிராமத்தில் குமாரசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் முட்டைகோஸ் பயிரிட்டுள்ளார். இன்று தோட்டத்திற்குள் புகுந்த 3 காட்டு யானைகள் அறுவடைக்கு தயாரான முட்டைகோஸ் பயிர்களை சேதப்படுத்தியது. இதனால் கவலை அடைந்த குமாரசாமி அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

தாளவாடி அடுத்த திங்களூர், கேர்மாளம் ஊராட்சிக்குட்பட்ட 100க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் 3 வது நாளாக மின்சாரம் இல்லாததால் இருளில் மூழ்கியது. மலைக்கிராமங்களில் தொடரும்
மின்தடையால் பொதுமக்கள் குடிநீர் இல்லாமல் மக்கள் கடும் அவதிபட்டு வருகின்றனர். துண்டிக்கப்பட்ட மின்கம்பியை விரைந்து சீர்செய்து மின்சாரம் வழங்க கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழகத்தில் கோடை வெப்பம் தணிந்து, தற்போது கோடை மழை பெரும்பாலான மாவட்டங்களில் பெய்து வருகிறது. தமிழகத்தில் இன்று ஒரு சில மாவட்டங்களில் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று மாலை 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோபிசெட்டிபாளையம் அருகே கோயில் திருவிழாவில் ஆட்டு கிடாயை வெட்டி ரத்தம் குடித்த பூசாரி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. பரண் கிடாய் பூஜையில் நல்லகவுண்டன்பாளையம் பாலாஜி நகரை சேர்ந்த பழனிசாமி (45) உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட பூசாரிகள் வாழைப்பழத்துடன் ஆட்டு ரத்தத்தை குடித்தனர். வாந்தி மயக்கம் ஏற்பட்டு மயங்கி விழுநத் பழனிசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணைக்கட்டில் தினந்தோறும் ஈரோடு கோபி திருப்பூர் கோவை சக்தி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள் அவற்றில் குளித்துவிட்டு செல்வார்கள் தற்பொழுது கனமழை பெய்து வருவதால் அணைக்கட்டில் இருந்து அதிகப்படியான தண்ணீர் வெளியேறுவதால் கொடிவேரி அணைக்கட்டு பகுதியில் செல்வதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஆர்.டி. ஒட்டலில் 27ஆம் தேதி, நிதி ஆப்கே நிகட் என்ற பெயரில் ஈ.எஸ்.ஐ.யுடன் இணைந்து மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறுகிறது. இதில், சந்தாதாரர்கள், தொழிலதிபர்கள் மற்றும் விலக்களிக்கப்பட்ட நிறுவனங்கள் நேரடியாக கலந்துகொண்டு பயன்பெறலாம் என ஈரோடு மண்டல வைப்புநிதி ஆணையாளர் வீரேஷ், செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்திற்கு இன்று (மே.22) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஈரோட்டில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.