India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஈரோட்டில் ரேஷன் அரிசி கடத்தல் குறித்து புகார் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 18005995950, ஈரோடு சரக காவல் துணை கண்காணிப்பாளர் 9498168363, ஈரோடு மாவட்ட காவல் ஆய்வாளர் 8072628234, ஈரோடு மாவட்ட காவல் உதவி ஆய்வாளர் 9498175888 ஆகிய எண்ணில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பான தகவல் தெரிவிக்கலாம்.

ஈரோடு, அம்மாபேட்டை பகுதியில் பாலமலை உள்ளது. இந்த மலை சேலம் மாவட்டம், மேட்டூர் வனசரகத்திற்கு உட்பட்டது. இந்நிலையில், இம்மலையில் உள்ள சிவன் கோவிலுக்கு சித்தரை மாத சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.எனவே மலை ஏறும் பக்தர்கள் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழையவோ, மது அருந்தவோ, புகை பிடிக்கவோ, குப்பைகளை போடவோ கூடாது என வனத்துறை சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு நகர் பகுதியில் இந்து சமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் பிரசித்தி பெற்ற கொங்கலம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமாக 46 கடைகள் உள்ளன. இதில் 39 கடை ஒப்பந்ததாரர்கள் ரூ.4 கோடியே 70 லட்சம் வாடகை செலுத்தாமல், பாக்கி வைத்துள்ளனர். எனவே கடந்த 3 மாதமாக வாடகை நிலுவை தொகை செலுத்தக்கோரி நோட்டீஸ் வழங்கி, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈரோட்டில் அடுத்த 4 நாட்களுக்கு (மே.6) இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ஈரோடு மாவட்டத்தில் மே.7 ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரோட்டில் உட்சபட்ட வெப்ப அலையின் தாக்கம் இருந்து வந்த நிலையில் இச்செய்தியைத் தெரிவித்துள்ளது.

சென்னிமலை பகுதியில் உள்ள பழக்கடைகளில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ப.நீலமேகம், சென்னிமலை பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் ஆகியோர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 90 கிலோ மாம்பழங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் செயற்கையாக பழுக்கவைக்கப்பட்ட மாம்பழங்களை உணவு மாதிரி எடுத்து அதிகாரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அடுத்த கோனேரிப்பட்டி காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை நீர் தேக்க மின் நிலையம் உள்ளது. இந்த கதவணையில் தற்போது பராமரிப்பு பணிகள் தொடங்கியுள்ளது. இதனால் அணை பகுதியில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது. இதன்காரணமாக நீர் மின் நிலையத்தில் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. இதானல் காவிரி ஆறு தண்ணீரின்றி பாறை திட்டுகளாக காட்சியளிக்கிறது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் ஆதி ரெட்டியூர் ஸ்ரீ மாரியம்மன் லோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று சிறப்பு அபிஷேக பூஜை, மாவிளக்கு, திருவிழா சிறப்பாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து இரவு கொங்கு நாட்டின் பெருமைக்குரிய வள்ளி கும்மியாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த வள்ளி கும்மியாட்டம் நிகழ்ச்சியில் சிறுவர் முதல் பெரியவர் வரை நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

ஈரோடு மாவட்டத்தில், மே.1ஆம் தேதி தொழிலாளா் தினத்தன்று , ஈரோடு மாவட்ட தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், தொழில் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், ஈரோடு, பவானி, பெருந்துறை, கோபி, சத்தி ஆகிய பகுதிகளில் உள்ள தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் 100 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில், மே 1ஆம் தேதி தொழிலாளா் தினத்தன்று , ஈரோடு மாவட்ட தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், தொழில் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் ஈரோடு, பவானி, பெருந்துறை, கோபி, சத்தி ஆகிய பகுதிகளில் உள்ள தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் 100 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

வடமாநிலங்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு வந்த வெப்ப அலைக்கான ஆரஞ்சு அலர்ட் தற்போது முதன்முதலாக தமிழகத்தில் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படிஈரோட்டிற்கு இன்று (மே.02) ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
Sorry, no posts matched your criteria.