Erode

News March 30, 2024

கல்லூரி ஆண்டு விழா

image

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள கொங்கு பொறியியல் கல்லூரியின் 40 ஆவது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. சுவிட்சர்லாந்து நாட்டைச் சோ்ந்த ஏபிபி பிராசஸர் ஆட்டோமேஷன் நிறுவனத்தின் சா்வதேச டிஜிட்டல் அதிகாரி ராஜேஷ் ராமசந்திரன், இந்திய ராணுவத்தின் இஎம்ஐ படைப்பிரிவு கார்னர் ஆா். விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனா்.

News March 29, 2024

மோடியின் கொத்தடிமையாக செயல்படும் தேர்தல் ஆணையம்

image

 ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ். இளங்கோவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தேர்தல் ஆணையம் மோடியின் கொத்தடிமை கைப்பாவையாக செயல்படுகிறது. ஈரோடு அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் வாக்களர்களுக்கு கொடுக்க பல கோடி ரூபாய் சேலைகளை குடோனில் பதுக்கியுள்ளார். எனவே ஈரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என தெரிவித்தார்.

News March 29, 2024

ஈரோட்டில் நடிகர் கமலஹாசன் பிரச்சாரம்

image

ஈரோடு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.இ பிரகாஷ் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு தெரிவித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமலஹாசன் இன்று ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது இந்தியா கூட்டணி கட்சியின் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

News March 29, 2024

ஈரோட்டில் 2 நாட்களுக்கு தடை

image

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் நாளை (மார்ச் 30) மற்றும் நாளை மறுநாள் (மார்ச் 31) ஆகிய நாட்களில் ஈரோட்டில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். எனவே இந்த 2 நாட்களில் ஈரோடு மாவட்ட காவல் எல்லையில், ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க விட தடை விதித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டுள்ளார்.

News March 29, 2024

ஈரோடு வந்த கமல்ஹாசன்

image

ஈரோடு மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து மநீம தலைவர் கமல்ஹாசன் இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார். தேர்தல் பரப்புரைக்காக  இன்று ஈரோடு வருகை தந்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, திமுக வேட்பாளர் பிரகாஷ் உள்ளிட்ட பலரும் இருந்தனர்.

News March 29, 2024

ஈரோடு வருகை தரும் முதல்வர்

image

2024 மக்களவை தேர்தலையொட்டி முதல்வர் ஸ்டாலின் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாநிலம் முழுவதும் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, மார்ச் 31ஆம் தேதி ஈரோடு வருகை தரும் முதல்வர் ஸ்டாலின்; திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து  சின்னியம்பாளையத்தில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது. 

News March 29, 2024

ஈரோடு: 80 கோயில்களில் திருவிழா

image

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் கோயில் திருவிழாக்களுக்கு தேர்தல் பிரிவு அலுவலகத்தில் அனுமதி பெற்று நடத்திட தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில்களின் திருவிழா உள்ளிட்ட 80 மத வழிபாட்டு தலங்களில் விழாக்கள் நடத்திட அனுமதி வேண்டி விண்ணப்பிக்கப்பட்டதில் 80 மத வழிபாட்டு தலங்களிலும் விழாக்கள் நடத்திட அனுமதி வழங்கப்பட்டது.

News March 29, 2024

ஈரோடு தொகுதியில் 45 மனுக்கள் ஏற்பு

image

ஈரோடு மக்களவைத் தொகுதியில் மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட 52 வேட்பு மனுக்களில் கூடுதல் மனுக்கள், வயது குறைவு, பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாதது என 7 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மீதமுள்ள 45 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. நாளை இறுதி நாளாகும் .

News March 29, 2024

ஈரோடு: தேர்தல் திருவிழா அழைப்பிதழ்

image

அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கள்ளிப்பட்டி பகுதியில் 100 % வாக்குப்பதிவை வலியுறுத்தி திருமண அழைப்பிதழை போல் தேர்தல் திருவிழா அழைப்பிதழை பொதுமக்களுக்கு கொடுத்து நூதன பிரச்சாரம் மற்றும் விழிப்புணர்வு பேரணியில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டனர். தேர்தல் விழிப்புணர்வு பேரணியில் மேளம் இசைத்தபடியும் , பொம்மை வேடமிட்டும் 50-க்கும் மேற்பட்ட வருவாய் துறையினர் விழிப்புணர் ஏற்படுத்தினர்.

News March 29, 2024

ஈரோட்டில் பிரேமலதா விஜயகாந்த் இன்று பிரசாரம்

image

பெருந்துறையில் தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அருணாச்சலத்துக்கு ஆதரவாக  இன்று மாலை 6 மணி அளவில் பிரசாரம் செய்ய உள்ளார். தொடர்ந்து இரவு 7 மணி அளவில் ஈரோடு கனிராவுத்தர் குளம் பகுதியில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அசோக்குமாருக்கு ஆதரவு கேட்டு பிரச்சாரம் செய்ய உள்ளதாக அ.தி.மு.க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!