Erode

News November 14, 2024

ஈரோடு: நெல் பயிருக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

image

ஈரோடு மாவட்டத்தில் நெல் பயிருக்கு காப்பீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு எதிா்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதி உதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிப்பதை ஊக்குவிக்கவும், பிரதமரின் பயிா் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News November 13, 2024

இந்திய குடிமை பணி தேர்வு கற்றல் வழிகாட்டல் நிகழ்ச்சி

image

ஈரோடு, கருங்கல்பாளையம் – காமராஜர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், ஈரோடு மாநகராட்சி இளைஞர் மேம்பாட்டு மையம் சார்பில், இந்திய குடிமை பணி தேர்வுக்கு கற்றல் வழிகாட்டுதல் மற்றும் பகுப்பாய்வு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி இலவசமாக நவம்பர் 16ஆம் தேதி நடைபெறுகிறது. விருப்பமுள்ளவர்கள் https://www.erodesmartcity.org/participant.registration/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

News November 13, 2024

இந்திய குடிமை பணி தேர்வு கற்றல் வழிகாட்டல் நிகழ்ச்சி

image

ஈரோடு, கருங்கல்பாளையம் – காமராஜர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், ஈரோடு மாநகராட்சி இளைஞர் மேம்பாட்டு மையம் சார்பில், இந்திய குடிமை பணி தேர்வுக்கு கற்றல் வழிகாட்டுதல் மற்றும் பகுப்பாய்வு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி இலவசமாக நவம்பர் 16ஆம் தேதி நடைபெறுகிறது. விருப்பமுள்ளவர்கள் https://www.erodesmartcity.org/participant.registration/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

News November 13, 2024

ஈரோடு மாவட்டத்தில் மழை

image

ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை பரவலாக மிதமான மழை பெய்தது. இதில் மேட்டுக்கடை, வேப்பம்பாளையம், நஞ்சனாபுரம், பவளத்தான்பாளையம், சாணார்பாளையம், வள்ளிபுரத்தான்பாளையம், ராயபாளையம் ஆகிய பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. பின்னர் காலை 6:30 மணி வரை ஒரு சில இடங்களில் தூரல் மழை பெய்து வந்தது. இதேபோல் மாவட்டத்தில் அநேக இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்துவருகிறது.

News November 13, 2024

ஈரோட்டில் தொடரும் வெடிகுண்டு மிரட்டல்

image

ஈரோடு சத்தி ரோட்டில் தனியார் ஹோட்டல் உள்ளது. நேற்றிரவு 7 மணிக்கு ஹோட்டல் நிர்வாகத்திற்கு மிரட்டல் மின்னஞ்சல் வந்தது. அதில் ஹோட்டலுக்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது, அது 10 மணி அளவில் வெடிக்கும் என்று கூறப்பட்டிருந்தது. உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சோதனை செய்ததில் அது பொய்யான மிரட்டல் என்பது தெரியவந்தது. இதனால் சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.

News November 12, 2024

ஏறு முகத்தில் தேங்காயின் விலை இல்லத்தரசிகள் கவலை

image

ஈரோட்டில் தேங்காயின் விலை ஏறு முகமாகவே உள்ளது, கடந்த வாரம் கிலோ ரு 35 விற்பனையான தேங்காயின் விலை இந்த வாரம் கிலோ ரூ 55 க்கு விற்பனையானது, நேற்று ஈரோடு சம்பத் நகர் உழவர் சந்தையில் கிலோ ரூ 55 க்கு விற்பனையானதால் இல்லத்தரசிகள் கவலையடைந்தனர். இதைப் பற்றி வியாபாரி ஒருவர் கூறும்போது குறைவால் வரத்து இந்த விலை ஏற்றம் என தெரிவித்தார்.

News November 12, 2024

ஈரோடு போலீசார் எச்சரிக்கை..!

image

மோசடி செய்பவர்கள் தங்கள் பெயருக்கு வந்த, ஒரு கூரியர் பார்சலில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக கூறி மக்களை அழைத்து ஏமாற்றுகிறார்கள். எனவே தங்கள் மீது வழக்கு சிக்கலை தவிர்க்க பணம் செலுத்துமாறு போலி போலீஸ் அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்களிடம் இருந்து உங்களுக்கு அழைப்புகள் வரலாம். அத்தகைய மோசடி செய்பவர்களுக்கு ஒருபோதும் பணம் அனுப்ப வேண்டாம் என ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.

News November 12, 2024

BREAKING ஈரோடு: பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

ஈரோடு அடுத்த செட்டிபாளையத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு (ஜேசீஸ்) இன்று காலை பள்ளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. எனவே வெடிகுண்டு மிரட்டலால் பள்ளிக்கு தற்போது விடுமுறை அறிவிக்கப்பட்டது.பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின்படி, ஈரோடு மாவட்ட போலீசார் பள்ளியில் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதேபோல் செப்டம்பர் மாதம் இதே பள்ளிக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.

News November 12, 2024

நெல் பயிர் காப்பீடு நவம்பர் 15 கடைசி நாள்

image

ஈரோடு மாவட்டத்தில், சம்பா (ரபி) பருவத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்கு பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில், 1 ஏக்கருக்கு ரூ.573 செலுத்தி எதிர்பாராத மகசூல் இழப்புகளில் இருந்து பயன்பெறலாம். எனவே விவசாயிகள் ஆவணங்களுடன் அரசு பொது சேவை மையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில், நவம்பர் 15க்குள் பயிர் காப்பீட்டு செய்யலாம் என ஈரோடு மாவட்ட வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.

News November 12, 2024

அம்மாபேட்டை: ரூ.3.50 கோடியில் புதிய அலுவலகம் திறப்பு

image

ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டட திறப்பு விழா இன்று நடைபெற உள்ளது. இதனை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று காலை 10 மணிக்கு காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். இந்நிகழ்வில் அமைச்சர் சு.முத்துச்சாமி, அந்தியூர் தொகுதி திமுக எம்எல்ஏ வெங்கடாசலம் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.