Erode

News March 23, 2024

காவிரி ஆற்றில் குவிந்த முருக பக்தர்கள்

image

பங்குனி உத்திரவிழா நாளை கொண்டாடப்படுவதையொட்டி கொடு முடிகாவிரி ஆற்றில் தீர்த்தம் எடுக்க, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் இன்று திரண்டனர். படித்துறை, வட்டக்கொம்மனை மற்றும் மணல்மேடு பகுதிகளில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்டோர் பலர் தீர்த்தம் முத்தரித்தனர். மேளதாளம் அரோகரா முழங்க கோஷத்துடன் மகுடேஸ்வரர், வீரநாராயணப்பெருமாளை தரிசனம் செய்து, பாதயாத்திரையாக பழநி மலை கோவிலுக்கு புறப்பட்டனர்.

News March 23, 2024

பெண் பணியாளா்களுக்கு விலக்கு

image

சத்தியமங்கலத்தில் குன்றி கடம்பூா், குத்தியாலத்தூா், தாளவாடி மற்றும் பா்கூா் உள்ளிட்ட மலைக் கிராமங்களில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு தேர்தலுக்கு முந்தையநாள் அங்கு பெண்கள் தங்கவேண்டிய சூழல் இருப்பதால் அப்பகுதியில் பெண்கள் பணியாற்றுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். பெண்களுக்கு மாற்றாக ஆண்களை அங்கு பணியமா்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா்.

News March 23, 2024

ஈரோடு: 3 ஆடுகளை கொன்ற சிறுத்தை

image

தாளவாடி அருகே கும்டாபுரம் கிராமத்தில் முகமது இம்ரான்(37)
என்பவருக்கு சொந்தமான மூன்று ஆடுகளை விவசாயத் தோட்டத்துக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று பட்டப் பகலில் கடித்துக் கொன்றது. இந்த சம்பவத்தால் அப்பகுதி விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர். கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தையை தாளவாடி வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

News March 23, 2024

100% வாக்குப்பதிவு வலியுறுத்தி கோலமிட்டு விழிப்புணர்வு

image

ஈரோடு மாநகராட்சி இரண்டாவது மண்டலம் 29ஆவது வார்டு சம்பத்நகர் பகுதியில் குறைந்த வாக்கு சதவிகிதம் உள்ள பகுதியில் உள்ள வாக்காளர்களிடம் 100 % வாக்குகள் பெற விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் விழிப்புணர்வு கோலங்கள் வரைந்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்வில் மாநகராட்சி செயற்பொறியாளர் மற்றும் வாக்கு சாவடி நிலை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News March 22, 2024

ஈரோடு: 2 நாள் போக்குவரத்து மாற்றம்

image

சத்தியமங்கலம் அடுத்த மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் குண்டம் திருவிழா மார்ச் 26 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால் மார்ச் 25 மதியம் 2 மணி முதல் மார்ச் 26 இரவு 9 மணி வரை பண்ணாரி-ஆசனூர் வழியாக மைசூர் செல்லும் அனைத்து வாகனங்களும் டி.ஜிபுதூர் நால்ரோடு-கடம்பூர்-ஆசனூர் வழியாக மைசூர் செல்லலாம் என சத்தியமங்கலம் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 22, 2024

தேர்தல்: தா.மா.கா வேட்பாளர் அறிவிப்பு

image

தமிழக மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க கூட்டணி சார்பில் ஈரோடு தொகுதி தா.மா.க வேட்பாளராக விஜயகுமார் சற்று முன் அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் 2024 வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணி சார்பில் தா.மா.கா வுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 2 தொகுதிகளுக்கு தா.மா.கா சார்பில் ஜி.கே.வாசன் தற்போது வேட்பாளர்களை அறிவித்தார்.

News March 22, 2024

ஈரோடு : ரூ.96.34 லட்சம் பறிமுதல்

image

ஈரோடு மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம் முழுவதும் இதுவரை ரூ.96 லட்சத்து 34 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதில் உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டு ரூ.22 லட்சத்து 66 ஆயிரம் திருப்பி வழங்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News March 22, 2024

பத்திரகாளி அம்மன் கோவில் திருவிழா ஆலோசனைக் கூட்டம்

image

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் தேர் திருவிழா அடுத்த மாதம் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. கோயில் திருவிழா நிகழ்ச்சி தினந்தோறும் நடைபெற்று வருகின்றது. அவற்றின் பாதுகாப்பு பற்றி நேற்று அந்தியூர் பத்திரகாளி அம்மன் கோவில் வளாகத்தில் கோவில் செயல் அதிகாரி சீதாராமன் தலைமையில், அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பேரூராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News March 21, 2024

புகார் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு

image

ஈரோடு மாவட்டத்தில், ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டது. எனவே வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் கொடுப்பதை தடுக்க கண்காணிப்பு குழுக்கள், பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறல் குறித்த புகார்களை 9655220100 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 21, 2024

ஈரோடு தொகுதியின் புதிய திமுக வேட்பாளர்

image

ஈரோடு தொகுதி கடந்த முறை மதிமுக-வுக்கு அளிக்கப்பட்டிருந்தது. தற்போது மதிமுக-விற்கு திருச்சி தொகுதி அளிக்கப்பட்டிருப்பதால், திமுக-வே இத்தொகுதியில் போட்டியிடுகிறது. இந்தத் தொகுதியில் திமுக-வின் சார்பில் பிரகாஷ் போட்டியிடுகிறார். மாநில இளைஞரணியின் துணைச் செயலாளரார் ஆவார். இந்தத் தேர்தலில் தி.மு.க. இளைஞரணியிலிருந்து போட்டியிடும் ஒரே வேட்பாளரும் இவர்தான்.

error: Content is protected !!