India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெருந்துறை சட்டமன்றத் தொகுதி, பெருந்துறை டவுன் பகுதியில் வாக்காளர்கள் அனைவரும் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் பெருந்துறை போலீசாரின் விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. பெருந்துறை போலீஸ் ஸ்டேஷனில் தொடங்கிய பேரணியை பெருந்துறை டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். பெருந்துறை நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்த இந்த ஊர்வலம் அண்ணா சிலை பகுதியில் நிறைவு பெற்றது.

திருப்பூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கவுந்தப்பாடியில் இன்று காலை பாஜக தலைவர் அண்ணாமலை திருப்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் முருகானந்தத்திற்கு ஆதரவு தெரிவித்து திறந்தவெளி வாகனத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வலிமையான நாட்டை மோடி அரசு உருவாக்கி உள்ளது. தீவிரவாதம் இல்லை, குண்டு வெடிப்பு, கலவரம், வெளிநாட்டு கூலிப்படை இல்லாத வகையில் மோடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே SST 3’A’ Team இன்று மாலை மேட்டூர் டானி சன்னியாசிப்பட்டி ரைஸ் மில் மேடு அருகில் பறக்கும் படை அதிகாரிகள் ஜீப்பில் சென்றனர். அப்போது, எதிரே வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில், படுகாயமடைந்த உதவி இயக்குனர் பழனிசாமி உட்பட ஆறு பேர் பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஈரோடு தொகுதியில் 2201 முதியவர்களும், 800 மாற்றுத்திறனாளிகளும் தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். விருப்பம் தெரிவித்த 3001 பேரிடம் தபால் வாக்குகளை சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஏப்.6 வரை 3 நாட்களுக்கு காலை 7மணி முதல் மாலை 6மணி வரை வீடு வீடாகச் சென்று தபால் வாக்கு சேகரிக்கப்பட உள்ளது. தபால் வாக்குகளை செலுத்த முடியாதவர்களுக்கு ஏப்.8 ஆம் தேதி மீண்டும் ஒருமுறை வாய்ப்பு வழங்கப்படும்.

தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில், பள்ளியில் ‘மாணவர் மனசு’ பெட்டி வைக்கப்பட்டு அதில் பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு போக்சோ சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portalஇல் பதிவேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

சிவகிரியில் பழமை வாய்ந்த ஶ்ரீ பொன்காளியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறும். இந்நிலையில் நேற்று பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் பெண்கள் மாவிளக்கு எடுத்து பூஜை செய்து அம்மனை வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து நள்ளிரவில் குதிரை துள்ளல் நிகழ்ச்சியும், அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது. இன்று அதிகாலை 4 மணியளவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீப்பந்தம் ஏந்தி அம்மனை வழிபட்டனர்.

நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளரும் மத்திய இணையமைச்சருமான முருகன் போட்டியிடுகிறார். சில நாட்களுக்கு முன் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில், தேர்தல் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். இந்த கூட்டத்திற்கு உரிய அனுமதி பெறவில்லை என உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் உமாசங்கர் அளித்த புகாரின்படி, சத்தியமங்கலம் போலீசார், முருகன் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அல்லது வேட்பாளரின் முகவர் ஆகியோர் தங்களது தேர்தல் வரவு செலவு கணக்கு ஒத்திசைவு கூட்டமானது இன்று (4ம் தேதி) நடைபெற உள்ளது. இதற்கு தேர்தல் செலவின பார்வையாளராக லட்சுமி நாராயணா முன்னிலை வகிக்க உள்ளார் என ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

இந்து அறநிலைத்துறை ஈரோடு சிறகுகள் மற்றும் தனியார் நிறுவனம் சேர்ந்து சென்னிமலை முருகன் கோயிலில் ஸ்கிரீன் டெம்பிள் ப்ராஜெக்ட் என்னும் பெயரில் மக்கும் குப்பைகளை சேகரிக்க நான்கு பெரிய ட்ரம் சென்னிமலை முருகன் கோயிலுக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து பூக்கள் மற்றும் எலுமிச்சம் பழங்களை வைத்து குங்குமம் மற்றும் ஊதுபத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்திரகாளி அம்மன் கோவில் பங்குனி தேரோட்டம் ஏப்.5 முதல் 8ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. இதற்காக 60 அடி உயரம் கொண்ட தேர் அலங்கரிக்கும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகின்றன. வரும் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி அளவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுப்பர் .
Sorry, no posts matched your criteria.