Erode

News April 11, 2024

ஈரோடு: லாரி கவிழ்ந்து விபத்து

image

சத்தியமங்கலம் உக்கிரன் பகுதியில் விவசாயத் தோட்டத்தில் இருந்து குச்சி கிழங்குகளோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சேலம் மாவட்டம் மல்லூருக்கு சென்றது.  அத்தியப்ப கவுண்டன் புதூர் பிரிவு அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. லாரியின் பயணித்த 7 பேரும் காயங்களுடன் உயிர் தப்பினர். 

News April 11, 2024

அழுகிய நிலையில் ஆண் சடலம்

image

கொடுமுடி அருகே தளுவம்பாளையம் பகுதியில் உள்ள டீக்கடை அருகே அழுகிய நிலையில் 55 வயது மதிக்கதக்க ஆண் சடலம்  கிடப்பதாக நேற்று கொடுமுடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின் இறந்த நபர் குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 11, 2024

ஈரோட்டில் 11 பேர் இறப்பு

image

திருப்பூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட கோபி சட்டமன்ற தொகுதியில், 85 வயதுக்கு மேற்பட்ட மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர் 860 பேருக்கு தபால் ஓட்டு அளிக்கப்பட்டது. இதில் 827 பேர் ஓட்டு பதிவு செய்தனர். 22 பேர் வெளியூர் மற்றும் சிகிச்சைக்கு சென்று விட்டனர். மற்ற 11 பேர் மார்ச் 25ம் தேதி முதல் ஏப்ரல் 8ம் தேதிக்குள் வயது முதிர்வால் இறந்துள்ளனர் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News April 11, 2024

ஈரோட்டில் 39 பேர் கைது போலீஸார் அதிரடி

image

தாளவாடி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தாளவாடி மரூர் குருபுருன்டி பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட மகேந்திரா(26), மாதவசாமி (46), நாகராஜப்பா(35), குருசித்தச்சாரை, வசந்த்(24), மாதப்பா(54), சங்கரப்பா (64) உள்ளிட்ட 39 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்த ரூ.1.30 லட்சத்தை பறிமுதல் செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 11, 2024

சூடுபிடிக்கும் தேர்தல் பிரச்சாரம்

image

அம்மாபேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட, ஊமாரெட்டியூர், குருவரெட்டியூர், சென்னம்பட்டி ஆகிய பகுதிகளில், திருப்பூர் மக்களவைத் தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியின் சார்பாக போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்புராயன் நேற்று மாலை பிரச்சாரம் செய்தார். இதில் அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம், அம்மாபேட்டை திமுக ஒன்றிய செயலாளர் சரவணன் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

News April 10, 2024

ரயில் நிலையத்தில் குவிந்த வடமாநில தொழிலாளர்கள்

image

ஈரோடு மாவட்டத்தில் மாநகர் மட்டுமின்றி புறநகர், சிப்காட் உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இந்நிலையில், 19ஆம் தேதி பல்வேறு மாநிலங்களில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நூற்றுக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள், ஜனநாயக கடமை ஆற்ற தங்களது சொந்த ஊருக்கு செல்ல, ஈரோடு இரயில் நிலையத்தில் இன்று குவிந்தனர்.

News April 10, 2024

ஈரோடு: தீவிர பிரச்சாரம் செய்த அமைச்சர்

image

ஈரோடு மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து அமைச்சர் சு.முத்துசாமி ஈரோடு மாநகர், சூரம்பட்டி பேருந்து நிறுத்தம், பாரதிபுரம், வ. ஊ.சி வீதி, அண்ணா வீதி,திரு. வி. க வீதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்களிடம் தீவரமாக வாக்கு சேகரித்தார். திமுக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் இருந்தனர்.

News April 10, 2024

ஈரோடு: 2 இடங்களில் அதிரடி நடவடிக்கை

image

கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொளப்பலூர் சோதனை சாவடி பகுதிகளில் நிலையான கண்காணிப்பு குழுவினர் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.80,000, பாரியூர் தொட்டிபாளையம் பிரிவு அருகில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.57,000 பறக்கும் படை குழுவினரால் கைப்பற்றப்பட்டது.

News April 10, 2024

ஈரோடு : தேர்தல் புறக்கணிப்பு பேனரால் பரபரப்பு

image

ஈரோடு அருகே சூரம்பட்ட, திரு.வி.க. வீதியில் டாஸ்மாக் கடை (கடை எண் : 3561) உள்ளது. இந்நிலையில் இந்த டாஸ்மாக் கடையை கண்டித்தும், டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தியும் அப்பகுதியினர் அதிகாரிகளிடம் பல முறை தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. எனவே இதனை கண்டித்து வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அப்பகுதியில் மக்கள் பேனர் வைத்துள்ளனர்.

News April 10, 2024

ஈரோட்டுக்கு தனி இரயிலில் வந்த 2000 டன் நெல்

image

ஈரோடு மாவட்ட பொது வினியோக திட்டத்துக்காக நாகப்பட்டினத்தில் இருந்து 2000 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 42 பெட்டிகள் கொண்ட தனி சரக்கு ரயில் மூலம் ஈரோடு இரயில் நிலையத்திற்கு நேற்று வந்தது. பின் நெல் மூட்டைகளை சுமைதூக்கும் தொழிலாளர்கள் இரயிலில் இருந்து இறக்கி லாரிகளில் ஏற்றினர். இந்த நெல் அரவைக்கு அனுப்பப்பட்டு, அரிசியாக்கப்பட்டு ஈரோடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

error: Content is protected !!