India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விழுப்புரத்தில் தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் சமூக நலத்துறை, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் மிஸ் கூவாகம் 2024 நிகழ்ச்சி நடந்தது. இதில் திருச்சி, சேலம், சென்னை, துாத்துக்குடி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, ஈரோடு, கோவை பகுதிகளை சேர்ந்த 27 திருநங்கைகள் பங்கேற்றனர். இதில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த, ரியா மிஸ் கூவாகமாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது.

ஈரோடு மாநகராட்சியின் 2023-2024 நிதியாண்டுக்கான சொத்து வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரிகள் மற்றும் நிலுவை வரிகளை கடந்த மார்ச் 31ம் தேதிக்குள் வசூலிக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் நாடாளுமன்ற தேர்தலால், வரி செலுத்த மக்களை கட்டாயப்படுத்தவில்லை. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் நிறைவின் காரணமாக தற்போது மாநகராட்சி அலுவலர்கள், வரி பாக்கி வைத்துள்ள வீடுகளில் வரி வசூலிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் ஒவ்வொரு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.அதன்படி நேற்றைய வெயில் நிலவரத்தை இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டது.அதில் 109 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்துடன் இந்தியாவிலேயே அதிகபட்ச வெப்பநிலை பதிவான இடங்களில் ஈரோடு 3ஆம் இடத்தை பிடித்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் வரும் 26ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு – கர்நாடகா எல்லையான, ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட தாளவாடியில் உள்ள அரசு மதுபான கடை (கடை எண் : 3948) மற்றும் அதனுடன் இயங்கும் பார் ஏப்ரல் 24, 25 மற்றும் 26 ஆகிய 3 நாட்கள் மூடப்படும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தீரன் சின்ன மலை என்று எழுத்துகளால் பொறிக்கப்பட்டு பெருத்துறை சாலையில் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகம் என்ற வரிகளில் உள்ள எழுத்துகள் காணாமல் போனதாக புகார் எழுந்துள்ளது. சரியான எழுத்துகளை அமர்த்தி ஆட்சியர் அலுவலகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மெட்ரிக், சுயநிதி, துவக்க மற்றும் மழலையர் பள்ளியில், குழந்தைகளுக்கான இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதற்காக இன்று (ஏப்ரல் 22ஆம் தேதி) முதல் மே 20ஆம் தேதிக்குள் rte.tnschools.gov.in என்ற இணைய தளத்தில், தகுந்த ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம் என ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலம், சம்பல்பூரிலிருந்து மே 1 முதல் ஜூன் 26ஆம் தேதி வரை வாரந்தோறும் புதன்கிழமை காலை 11.35 மணிக்கு புறப்படும் இரயில் (எண்:08311) மறுநாள் இரவு 8.30 மணிக்கு ஈரோடு வந்தடையும். பின் மறுமாா்க்கமாக இந்த இரயில் (எண்:08312) மே 3 முதல் ஜூன் 28 வரை வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 11.15 மணிக்கு சம்பல்பூா் சென்றடையும் என தெற்கு இரயில்வே சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், புஞ்சைபுளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் (27). இவர் நேற்று மாலை நண்பர்களுடன், முடுக்கன்துறை – பவானி ஆற்றில் குளித்த போது நந்தகுமார் தண்ணீரில் மூழ்கி இழுத்து செல்லப்பட்டார். உடனடியாக தகவல் அறிந்த பவானிசாகர் தீயணைப்புதுறையினர் நந்தகுமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவாகியும் நந்தகுமார் கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்று காலையும் நந்தகுமாரை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

கோபி அடுத்த டி.என்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி பூமணி (29). கர்ப்பிணியான பூமணிக்கு நேற்று இரவு பிரசவ வலி ஏற்பட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பூமணிக்கு பிரசவ வலி அதிகமானது. எனவே 108 வாகனத்தை சாலை ஓரம் நிறுத்தி மருத்துவ உதவியாளர் பூமணிக்கு பிரசவம் பார்த்தார். இதில் பூமணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இந்நிலையில் நேற்று முதல் தேர்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவை தேர்தல் ஆணையம் கலைத்தது. ஆனால், கர்நாடகாவில் இன்னும் தேர்தல் முடியாததால் தமிழக எல்லையான அந்தியூர் அடுத்த பர்கூர் மற்றும் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபடுவார்கள் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.