India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஈரோட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோடு மற்றும் குமாரபாளையத்தில் நாளை பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல், “மானமும் அறிவும் மனிதருக்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஒன்றிய செயல்வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் பெருந்துறை தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசும் போது மண்வெட்டியால் துண்டான போதிலும் இரண்டு துண்டுகளும் தனித்தனி புழுவாகி அதற்கு உண்டான வேலையை செய்வது போல் நமது கட்சி நிர்வாகிகள் அனைவரும் வேட்பாளரின் வெற்றிக்காக செயல்படுவார்கள் என்றார்

தமிழகத்தில் வரும் மக்களவை தேர்தலையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ஈரோடு மாவட்டம் சிவகிரி திமுக நாடாளுமன்ற வேட்பாளர் பிரகாசை ஆதரித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தீவிர பரப்புரை மேற்கொண்டார்.

ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி கடந்த தினங்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்றார். இவர் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனை சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். இந்நிலையில் அவரது பூத உடல் பூந்துறைக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு வந்த தூத்துக்குடி எம்.பி.கனிமொழி நேரில் வருகை தந்து அஞ்சலி செலுத்தினார்.

ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது பிரிவால் வாடும் மதிமுக தொண்டர்களுக்கும், திராவிட இயக்கப் பற்றாளர்களுக்கும், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மக்களவை உறுப்பினரும், மதிமுகவின் மூத்த தலைவருமான கணேசமூர்த்தி உயிரிழந்த செய்திகேட்டு துயருற்றேன். அன்னாரை இழந்துவாடும் அவரது குடும்பத்தாருக்கும், மதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அ.கணேசமூர்த்தியின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஈரோடு மக்களவைத் தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. ஈரோடு ஆட்சியர் அலுவலகம் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் வேட்புமனு தாக்கல் கடைசி நாளான நேற்று மாலை வரை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள், தேசிய கட்சிகள்,அங்கிகாரம் பெற்ற மற்றும் பெறாத கட்சிகள்,சுயேட்சை வேட்பாளர்கள் என 44 பேர் ஈரோடு மக்களவை தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

ஈரோடு 2024 மக்களவை தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக கே.இ.பிரகாஷ் போட்டியிடுகிறார். இந்நிலையில அவர் தனது ஆதரவாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியினருடன் ஈரோடு திண்டல் பகுதியில் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் அனுமதியின்றி பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் உட்பட 60 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஈரோடு எம்.பி யாக தற்போது பதவி வகித்து வருபவர் கணேசமூர்த்தி(77). கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் கணேசமூர்த்தி வெற்றி பெற்றார். மதிமுக சார்பில் ஈரோடு தொகுதியில் வெற்றி பெற்ற இவர், ம.தி.மு.க வின் தீவிர விசுவாசியும், வைகோவின் நெருங்கிய நண்பரும் ஆவார். தற்கொலைக்கு முயன்று கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் இன்று அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தார்.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஈரோடு தொகுதி வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள மார்ச் 29ஆம் தேதி வருகை தரவுள்ளார். வீரப்பன்சத்திரம், காந்தி சிலை, குமாரபாளையம் ஆகிய மூன்று இடங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.