India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஈரோடு தொகுதி கடந்த முறை மதிமுக-வுக்கு அளிக்கப்பட்டிருந்தது. தற்போது மதிமுக-விற்கு திருச்சி தொகுதி அளிக்கப்பட்டிருப்பதால், திமுக-வே இத்தொகுதியில் போட்டியிடுகிறது. இந்தத் தொகுதியில் திமுக-வின் சார்பில் பிரகாஷ் போட்டியிடுகிறார். மாநில இளைஞரணியின் துணைச் செயலாளரார் ஆவார். இந்தத் தேர்தலில் தி.மு.க. இளைஞரணியிலிருந்து போட்டியிடும் ஒரே வேட்பாளரும் இவர்தான்.

சத்தியமங்கலம் அடுத்த அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில் குண்டம் பெருந்திருவிழா மார்ச் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

ஈரோடு அதிமுக கட்சி அலுவலகத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் இன்று நடந்தது. மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் கே வி ராமலிங்கம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். அப்போது ஆற்றல் அசோக்குமார் செய்தியாளர் சந்திப்பில், நான் போராளி அல்ல மக்கள் சேவை செய்யவே அரசியலுக்கு வந்துள்ளேன். ஈரோடு மாவட்டத்தில் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு காணவும் இழந்த தமிழக உரிமைகளை மீட்கவும் பாடுபடுவேன் என்றார்.

ஈரோடு அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ராஜமாணிக்கம் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை மனுக்களை வழங்கினார்.
மனுவில், “நிலைகட்டணம் திரும்பபெற வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை உயர்த்த உள்ள மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும். சோலாருக்கான கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தார்.

ஈரோடு மாவட்டம் ஆசனூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த கர்நாடக அரசு பேருந்தை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் பயணி ஒருவர் ரூ.35 லட்சம் பணம் வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் கர்நாடக மாநிலம் தாவணிகரையை சேர்ந்த ஹரிஷ் என்பதும் கோவையில் இடம் வாங்கிய நபருக்கு பணம் கொடுப்பதற்காக கொண்டு சென்றதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19இல் நடைபெறவுள்ள நிலையில், முதியோர்கள் (85 வயதிற்கு மேற்பட்ட) / மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பகுதி வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 12D-ஐ பெற்று பூர்த்திசெய்து மார்ச் 24 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமாரிடம் நேற்று (மார்ச்.20) ரங்கம்பாளையம் இரணியன் வீதியை சேர்ந்த மின்னல் முருகேஷ் (55) என்பவர் ஈரோடு நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட முதல் நபராக வேட்பு மனு தாக்கல் செய்தார். தேர்தலில் போட்டியிட ஆட்டோ, சிலிண்டர் அல்லது பிரஷர் குக்கர் ஆகிய சின்னங்களில் ஏதேனும் ஒன்றை வழங்கிட கேட்டுக்கொண்டார்.

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த ஜீர்கள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட காமைன்புரம் கிராமத்தில், விவசாயி துரைசாமி என்பவரின் தோட்டத்தில் நிறுத்தி வைத்திருந்த டிராக்டரை நேற்றிரவு வனப்பகுதியில் இருந்து வந்த ஒற்றைக் காட்டு யானை சேதப்படுத்தி உள்ளது. இதில் டிராக்டர் முற்றிலும் சேதமடைந்தது. இதுகுறித்து ஜீர்கள்ளி வனத்துறையினர் சம்பவயிடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற தொகுதிகளில் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனா உள்ளவர்கள் வீடுகளுக்கு, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மார்ச் 24ஆம் தேதிக்குள் நேரில் சென்று படிவம் 12டி வழங்க உள்ளனர். இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் வாக்கு அளிக்கலாம் என ஈரோடு கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்திரகாளி அம்மன் கோவில் கடந்த 14ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. முதல் நிகழ்ச்சியான மகிஷாசுரமர்த்தினி என்கிற எருமை கிடாவை பலி கொடுக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. முன்னதாக செம்பூர் அம்மன் குதிரை வாகனத்தில் பக்தர்கள் மேளதாளங்கள் முழங்க அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு அழைத்து வந்தனர். அவற்றை தொடர்ந்து பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
Sorry, no posts matched your criteria.