Erode

News April 2, 2024

ஈரோடு அருகே விபத்து: 2 பேர் பலி

image

பவானிசாகர் அருகேயுள்ள அக்கரை தடப்பள்ளியை சேர்ந்தவர் ஆறுமுகம் (58), கூலி தொழிலாளி. இவரது மனைவி ஜோதிமணி (48) .கணவன் மனைவி இருவரும் கள்ளிப்பட்டி அருகே உறவினர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நேற்று மொபட்டில் வீடு திருப்பிக் கொண்டிருந்தனர். டி.என்.பாளையம் தனியார் கல்லூரி அருகே கார் மோதியதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News April 2, 2024

சுட்டெரிக்கும் கோடை வெயில்

image

ஈரோட்டில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் நேற்று (ஏப்.1) வெப்ப அளவு 104.72 டிகிரி ஃபாரன்ஹீட் ஆக பதிவாகி உள்ளது. கடந்த காலங்களை காட்டிலும் தற்போது வெயில் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. எனவே பொதுமக்கள் பகல் வேளைகளில் வெளியே செல்வதை தவிர்க்குமாறும், பழச்சாறு போன்று குளிர்ச்சியான இயற்கை பானங்களை எடுத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 2, 2024

காலபைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி 

image

தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு அறச்சலூர் அருகில் உள்ள ராட்டைசுற்றிபாளையத்தில் அமைந்துள்ள சொர்ணபைரவர் கோயிலில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் மக்கள் கலந்து கொண்டு காலபைரவரின் ஆசியை பெற்றனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

News April 1, 2024

காவலர் அணிவகுப்பு

image

ஈரோடு மாவட்டம் நகர உட்கோட்ட பகுதியில் வருகின்ற மக்களவை தேர்தலையொட்டி பொதுமக்கள் பாதுகாப்புக்காக வாக்களிப்பதை உறுதிசெய்யும் வகையில் ஈரோடு மாவட்ட காவல்துறை மற்றும் துணை ராணுவத்தினரின் அணி வகுப்பு இன்று நடைபெற்றது. ஈரோடு காவல் கண்காணிப்பாளர் ஜகவர் தலைமையில் அணிவிப்பு நடைபெற்றது.

News April 1, 2024

ஈரோடு: மாணவர்களுக்கு விழிப்புணர்வு படிவம்

image

ஈரோடு எஸ்கேசி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் இன்று மாணவ மாணவியர்களிடம் மக்களவைத் தேர்தலுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின்னர், மாணவ, மாணவிகளிடம் உறுதிமொழி படிவம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தேர்தல் விழிப்புணர்வு அலுவலர் மற்றும் கூடுதல் ஆட்சியர் கலந்து கொண்டனர்

News April 1, 2024

ஈரோடு: பாஜக வேட்பாளர் மீது வழக்கு

image

திருப்பூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் முருகானந்தம் தற்காலிக தேர்தல் கட்சி அலுவலகத்தை அனுமதி பெற்ற தேதிக்கு முன்பாக திறந்து வைத்ததாக தேர்தல் அதிகாரி பூபாலன் அந்தியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத்தொடர்ந்து பாஜக வேட்பாளர் முருகானந்தம் மற்றும் தெய்வசிகாமணி ஆகியோர் மீது அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

News April 1, 2024

ஈரோட்டில் ரூ.2.60 கோடி பறிமுதல்

image

ஈரோடு மாவட்டத்தில் மக்களவை தேர்தலுக்காக அமைக்கப்பட்ட பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் இன்று காலை வரை ரூ.2 கோடியே 60 லட்சத்து 97 ஆயிரத்து 386-ஐ தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதில் உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டு , 1 கோடியே 71 லட்சத்து 89 ஆயிரத்து 595 ரூபாய் திருப்பி வழங்கப்பட்டுள்ளது.

News April 1, 2024

ஈரோடு அருகே விபத்து: ஒருவர் பலி

image

பெருந்துறையை அடுத்த எலையாம்பாளையத்தை சேர்ந்தவர் லோகநாதன் (58). இவர் சேலம் ரயில்வேயில் சுமைத்தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். பெருந்துறை அருகே ஓலப்பாளையம் பிரிவு பகுதியில் இருசக்கர வாகனத்தில் நேற்று சென்று கொண்டிருந்தபோது அவ்வழியே வந்த கார் லோகநாதன் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் லோகநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

News April 1, 2024

பழனிச்சாமியின் ஊழல் குடுமி பா.ஜ.க கையில்

image

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையத்தில் ஈரோடு, நாமக்கல்,கரூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது மோடி தேர்தல் பயத்தில் சிலிண்டர் விலையைக் குறைத்துள்ளார். ஊழல் ஆட்சி நடத்தி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் ஊருக்கு உபதேசம் செய்யலாமா?. பழனிச்சாமியின் ஊழல் குடுமி பா.ஜ.க கையில் உள்ளது. அதிமுக வின் ஊழல் கன்னித்தீவு கதை என பேசினார்.

News March 31, 2024

ஈரோடு: வானத்தில் பறந்த மாணவர்கள்

image

ஈரோடு மாவட்டம் அரசு பள்ளிகளை நோக்கி மாணவர்கள் மாணவியர்கள் சேர்க்கை அதிகரிக்கும் மேற்கொள்ளும் வகையில் அந்தியூர் மலைப்பகுதியில் அரசு பள்ளியில் பயிலும் பழங்குடி இன மாணவ, மாணவியர்கள் 22 பேர் கோவையில் இருந்து சென்னைக்கு விமான மூலம் கல்வி சுற்றுலா சென்றனர். அவர்களை அரசு பள்ளி ஆசிரியர் நவநீதன் அழைத்துச் சென்றார்.

error: Content is protected !!