Erode

News April 3, 2024

4 நாட்கள் பங்குனி தேரோட்டம்

image

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்திரகாளி அம்மன் கோவில் பங்குனி தேரோட்டம் ஏப்.5 முதல் 8ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. இதற்காக 60 அடி உயரம் கொண்ட தேர் அலங்கரிக்கும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகின்றன. வரும் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி அளவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுப்பர் .

News April 3, 2024

காங்கிரஸ் தலைவர் பிரச்சாரம்

image

ஈரோடு மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக மாநில இளைஞரணி துணை செயலாளர் கே.இ பிரகாஷ்க்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று குமாரபாளையத்தில் விவசாய தொழிலாளர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

News April 3, 2024

ஈரோடு: பக்தர்கள் செய்த அதிசயம்

image

அந்தியூர் வட்டம் வெள்ளி திருப்பூர் கிராமத்தில் கலர் காடு என்னும் ஊரில் அமைந்துள்ள அக்னி மாரியம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
பக்தர்கள் அனைவரும் காவேரி ஆற்றுக்கு சென்று தீர்த்தக் குடம் எடுத்து வந்து  அம்மனை அலங்காரம் ,அழகு குத்தியும் , பொங்கல் வைத்து நேத்திக்கடன் செலுத்தினர்.

News April 3, 2024

நாளை முதல் தபால் வாக்கு சேகரிப்பு : ஆட்சியர் தகவல்

image

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில், தேர்தலில் வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று வாக்களிக்க முடியாத 85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கோவிட் வைரஸ் தொற்று பாதிப்பு உள்ளவர்களுக்கு தபால் வாக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவர்களிடம் இருந்து வரும் நாளை (4ம் தேதி) முதல் தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி தொடங்கும் என்று மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News April 3, 2024

ஈரோடு: 1,111 பதற்றமான வாக்குச்சாவடிகள்

image

8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள 2,222 வாக்கு சாவடிகளில் 1,111 வாக்கு சாவடிகள் பதட்டமானவை . இந்த வாக்குச்சாவடிகள் வெப் கேமரா, விடியோ கேமரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. மேலும் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பவானிசாகா் ஆகிய தொகுதிகளுக்கு கூடுதலாக கண்காணிப்பு குழு அமைத்து கண்காணிக்கப்படும் என ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News April 3, 2024

மாற்றுத்திறனாளிகள் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

image

ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், அனைவரும் 100% வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற இருசக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பேரணி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதனை ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

News April 2, 2024

ஈரோடு வேளாளர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை

image

ஈரோடு வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் இயந்திரவியல் துறையைச் சேர்ந்த மாணவர்கள், எஸ்ஏஇ இந்தியா சதரன் பிரிவு ஆல் நடத்தப்பட்ட தேசிய அளவிலான மின் இருசக்கர வாகன வடிவமைப்புப் போட்டியில் கலந்துகொண்டனர். இதில், இக்கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய புதிய பேட்டரி மூலம் இயங்கும் மின் இருசக்கர வாகனத்திற்கு தேசிய அளவில் மூன்றாவது பரிசு கிடைத்தது. 

News April 2, 2024

6 ஆண்டுகளுக்கு பிறகு குறைந்த நீர்மட்டம்

image

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்றைய நிலவரப்படி 48.94 அடியாக குறைந்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 15ஆம் தேதி பவானிசாகர் அணை நீர்மட்டம் 48.20 அடியாக குறைந்து இருந்தது. அதன் பின்னர் தற்போது தான் 48 அடிக்கு கீழ் குறைந்துள்ளது. கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 1,700 கனஅடியாக நீர் திறக்கப்பட்டு வருகிறது. காளிங்கராயன் பாசனத்திற்கு என மொத்தம் 2,300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

News April 2, 2024

ஈரோடு அருகே விபத்து: 2 பேர் பலி

image

பவானிசாகர் அருகேயுள்ள அக்கரை தடப்பள்ளியை சேர்ந்தவர் ஆறுமுகம் (58), கூலி தொழிலாளி. இவரது மனைவி ஜோதிமணி (48) .கணவன் மனைவி இருவரும் கள்ளிப்பட்டி அருகே உறவினர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நேற்று மொபட்டில் வீடு திருப்பிக் கொண்டிருந்தனர். டி.என்.பாளையம் தனியார் கல்லூரி அருகே கார் மோதியதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News April 2, 2024

சுட்டெரிக்கும் கோடை வெயில்

image

ஈரோட்டில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் நேற்று (ஏப்.1) வெப்ப அளவு 104.72 டிகிரி ஃபாரன்ஹீட் ஆக பதிவாகி உள்ளது. கடந்த காலங்களை காட்டிலும் தற்போது வெயில் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. எனவே பொதுமக்கள் பகல் வேளைகளில் வெளியே செல்வதை தவிர்க்குமாறும், பழச்சாறு போன்று குளிர்ச்சியான இயற்கை பானங்களை எடுத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!