India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விடுதலைப் போராட்ட வீரர் திருப்பூர் குமரனின் 121வது பிறந்தநாளை முன்னிட்டு அவர் பிறந்த இடமான சென்னிமலை கிழக்கு வீதியில் உள்ள அவரது இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட படத்துக்கு தமிழக அரசு சார்பாக கலெக்டர் ராஜகோபால் சங்கரா தலைமையில் அதிகாரிகள் மரியாதை செலுத்தினார்கள். இதில் பி.டி.ஓ.,பாஸ்கர் பாபு , பாலமுருகன், செயல் அலுவலர் மகேந்திரன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் வணிகர்கள் தீபாவளிக்கு தற்காலிக பட்டாசு கடைகளை அமைக்க, அக்.12-க்குள் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாவட்டம் முழுவதும் 62 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்ந விண்ணப்பங்கள் விண்ணப்ப தேதி நிறைவடைந்த பின் மாவட்ட வருவாய் அலுவலர், தீயணைப்பு துறை, போலீஸ் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, உரிய பாதுகாப்பு முறைகள் இருந்தால் மட்டுமே தற்காலிக பட்டாசு கடைக்கு அனுமதி அளிக்கப்படும்.
தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் கோபி நகர கிழக்கு மற்றும் மேற்கு கிளைகள் சார்பாக தியாகி திருப்பூர் குமரன் 121வது பிறந்தநாள் விழா கோபி பேருந்து நிலையம் முன்பு இன்று நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ கலந்துகொண்டு திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தினார். இதில் கோபி கிழக்கு கிளை தலைவர் காளீஸ்வரன், மேற்கு கிளை தலைவர் கேசவன் உட்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த, கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண்களுக்கு நாட்டின கோழிக்குஞ்சுகள் 50% மானியத்தில் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பயனாளி சொந்த செலவில் ரூ.3200 கொள்முதல் செய்ய திறன் பெற்றிருக்க வேண்டும். தகுதியானோர் அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு 9443941443, 9842759545 எண்களை தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பத்து அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களை பணியமர்த்தி உள்ள, ஜூலை 2ம் தேதிக்கு பின்னர் புதிதாக தொடங்கப்பட்ட கடைகள், நிறுவனங்களின் உரிமையாளர்கள் தொழிலாளர் துறையில் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பத்தை https://labour.tn.gov.in-ல் ‘படிவம் Y’ல் பதிவு கட்டணம் ரூ.100 செலுத்தி 6 மாதத்துக்குள் விண்ணப்பிக்குமாறு ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையாளர் திருஞானசம்பந்தம் அறிவித்துள்ளார்.
பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வராக வள்ளி சத்தியமூர்த்தி இருந்தார் பணி ஓய்வு பெற்றதை தொடர்ந்து டாக்டர்.செந்தில்குமார் பொறுப்பு முதல்வராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இன்று புதிய முதல்வராக கோவை ஈஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி முதல்வர் ரவிக்குமார் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோபி அடுத்த பாரியூர், கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் இலவச திருமணம் நடத்துதல் குறித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரின் சட்டப்பேரவை அறிவிப்பின்படி, திருக்கோயில் மூலம் ரூ.60,000 (4 கிராம் தங்கம்) திட்ட செலவில் வரும் 21ஆம் தேதி திருமணம் நடத்தப்பட உள்ளது. இத்திட்டப்படி திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் திருக்கோயில் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் தற்போது BSNL 4 ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் 4 ஜி சேவைகளைப் பெறுவதற்கு 2 ஜி, 3 ஜி சிம் கார்டுகளை 4 ஜி சிம் கார்டாக மாற்றிக்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஈரோடு BSNL அலுவலகம் (டெலிபோன் பவன்) முன் ‘I ❤️ BSNL’ என செல்பி பாயிண்ட் வைக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்களின் பிரச்சனைகளை களைந்து அவர்களுக்கு கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, தொழில் பயிற்சி, சமூக பாதுகாப்புடன் வாழ, கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்றோர் நலவாரியம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே <
ஈரோடு மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு விடுமுறை நாளான இன்று பல்வேறு நிறுவனங்கள் ஊழியர்களுக்கு விடுப்பு வழங்கப்பட்டுள்ளதா என தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்காத 82 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் புகாரின் பேரில் 82 நிறுவனங்களின் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.