India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாக மறுசீரமைப்பு – 2024 ஒருங்கிணைப்புக் குழுவினை தொகுதி வாரியாக நியமித்து, அக்கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார். இந்நிலையில், ஈரோடு கிழக்கு – அர.அப்துர்ரஹ்மான், ஈரோடு மேற்கு – கி.கிள்ளிவளவன், மொடக்குறிச்சி – அ.வசந்த், பெருந்துறை – வீர.ஆதித்தியன், பவானி – தனலட்சுமி, கோபி – சுசி.கலையரசன், பவானிசாகர், அந்தியூர் – ஆல்டிரின் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு எல்லாம்பாளையம் குழந்தைகள் நல மையத்தில் இன்று சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் ஊட்டச்சத்தை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு. முத்துசாமி கலந்து கொண்டு ஊட்டச்சத்து மிக்க பொருள்களை குழந்தைகளுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சி தலைவர் ராஜகோபால் சுன்கரா உடன் இருந்தார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 1.1.2025-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் செய்தல் போன்றவற்றை வாக்காளர்கள் மேற்கொள்வதற்கு வசதியாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளை (நவ.16) மற்றும் 17ஆம் தேதி நடைபெற உள்ளது.
பவானி கோணவாய்க்கால் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியின் முன்பு, சித்தோடு பகுதியைச் சேர்ந்த பரமேஸ்வரன் (30), இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த காமராஜ் (29) ஆகிய இருவர் மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்து கொண்டிருந்தனர். தகவலின் அடிப்படையில் பவானி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 350 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.
தேசிய அளவிலான சப்-ஜூனியர் தரவரிசை பாட்மின்டன் போட்டி ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் தமிழ்நாடு அணி சார்பில் ஈரோட்டைச் சேர்ந்த அனன்யா அருண் மற்றும் மதுரையைச் சேர்ந்த சச்சின் ஆகியோர் 17 வயதுக்குள்பட்ட கலப்பு இரட்டையர் பிரிவில் பங்கேற்றனர். இறுதி ஆட்டத்தில் 21-18, 21-14 என்ற புள்ளி கணக்கில் தில்லி அணியை வீழ்த்தி தமிழக அணி வீரர்கள் அனன்யா, சச்சின் ஆகியோர் தங்கம் வென்றனர்.
சத்தி பேருந்து நிலையத்திற்கு இன்று காலை தாளவாடியில் இருந்து ஈரோடு செல்வதற்காக அரசு பேருந்து ஒன்று வந்தது. அப்போது பூ மார்க்கெட்டில் பூ வாங்கிக்கொண்டு பஸ் ஏறுவதற்காக நடந்து சென்ற புளியம்பட்டியை சேர்ந்த சாவித்திரி என்பவர் மீது பஸ்சின் முன் சக்கரம் ஏறியதில் படுகாயமடைந்தவர். இந்நிலையில் சத்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து சத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், இன்று (நவ.14) குழந்தைகள் தின விழாவினை முன்னிட்டு, குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு உறுதி செய்தல் தொடர்பான நடைபயணம் துவக்கி வைக்கப்பட்டது. இதனை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா கொடியசைத்து துவங்கி வைத்தார். இதில் குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த வாசகங்களுடன் மாணவர், மாணவிகள் பங்கேற்றனர்.
ஈரோடு, கொல்லம்பாளையத்தில் உள்ள கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில், கம்பியூட்டர் டேலி இலவச பயிற்சி வகுப்பு நவம்பர் 21ஆம் தேதி முதல் டிசம்பர் 26ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பயிற்சி, சீருடை, உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவா்கள் 0424-2400338, 8778323213, 7200650604 என்ற எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள கணக்காளர், சமூக பணியாளர், புறத்தொடர்பு பணியாளர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில், தொகுப்பூதியத்தில் நிரப்பப்பட உள்ளது. இதற்கு erode.nic.in என்ற ஈரோடு மாவட்ட இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தகுந்த ஆவணங்களுடன் நாளை (நவ.15) மாலை 5:30 மணிக்குள் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் நெல் பயிருக்கு காப்பீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு எதிா்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதி உதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிப்பதை ஊக்குவிக்கவும், பிரதமரின் பயிா் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.