Erode

News April 18, 2024

ஈரோட்டில் வெளுத்து வாங்கும் வெயில்

image

தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கி வெயில் வெளுத்து வாங்கு வரும் நிலையில், நேற்று(ஏப்.17) மட்டும் 14 மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்துள்ளது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில் நேற்று 106.52 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்தாலும், பல இடங்களில் வெயிலின் தாக்கல் அதிகரித்தே காணப்படுவதால் முதியவர்கள், குழந்தைகள் பெரும் சிரமமடைந்து வருகின்றனர்.

News April 18, 2024

தமிழக – கர்நாடகா எல்லையில் தீவிர சோதனை

image

தமிழகத்தில் ஏப்.19ம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையடுத்து வாக்காளர்களுக்கு கொடுக்க பணம், பரிசு பொருள் கொண்டு செல்வதை தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் வரும் வாகனங்களில் தீவிர சோதனை நடத்தி வருகினர்.

News April 17, 2024

தமிழக – கர்நாடகா எல்லையில் தீவிர சோதனை

image

தமிழகத்தில் ஏப்.19ம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையடுத்து வாக்காளர்களுக்கு கொடுக்க பணம், பரிசு பொருள் கொண்டு செல்வதை தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் வரும் வாகனங்களில் தீவிர சோதனை நடத்தி வருகினர்.

News April 17, 2024

ஈரோடு வெப்பநிலை விவரம்

image

தமிழகத்தின் நேற்றைய (ஏப்ரல்.16) வானிலை அறிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் வெப்பநிலையை விட அதிகமாக இருந்தது, அதன் படி, ஈரோட்டில் அதிகபட்ச வெப்பநிலையாக 40.4 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

News April 17, 2024

விடுதியில் தாய், குழந்தை தற்கொலை

image

ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள தனியார் விடுதியில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கோகிலவாணி (25) மற்றும் அவரது 3 வயது மகள் கடந்த 13 ஆம் தேதி தங்கியுள்ளனர்.  2 நாட்களாகியும் அறையில் இருந்து வெளியே வராததால் விடுதியாளர் பவானி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின் அறையின் கதவை உடைத்து பார்த்த போது கோகிலவாணி மற்றும் குழந்தை தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 17, 2024

தேர்தல் பொதுக்கூட்டங்கள் நடத்த தடை

image

ஈரோட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கு 2 நாட்களே உள்ள நிலையில் இன்று மாலை முதல் ஒலிப் பெருக்கிகள் பயன்படுத்த கூடாது. தங்கும் விடுதிகள் மற்றும் சமுதாய கூடங்களில் பிறநபர்கள், வெளியூர் நபர்கள் தங்குவது, கூட்டங்கள் கூடுவதற்று தடைவிதிக்கப்படுகிறது. தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டங்கள், ஊர்வலம் நடத்தக்கூடாது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார்.

News April 17, 2024

ரூ.6.87 லட்சத்திற்கு ஏலம்

image

அந்தியூர் அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேளாண் விளை பொருட்கள் ஏலம் நேற்று நடைபெற்றது. இதில் 1,690 தேங்காய்கள் ரூ.14,704க்கும், 70 மூட்டை தேங்காய் பருப்பு ரூ.2,19,008க்கும் ஏலம் போனது. 34 மூட்டை நெல் ரூ.50,205க்கும், 129 மூட்டை நிலக்கடலை ரூ.8,02,329க்கும், 8 மூட்டை எள் ரூ.60,397க்கும், 34 மூட்டை மக்காச்சோளம் ரூ.41,247க்கும் என வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.6,87,890க்கு ஏலம் போனது.

News April 16, 2024

ஈரோடு: இன்று கடைசி நாள்

image

ஈரோடு மாவட்டத்தில், மக்களவை தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு, ஈரோடு கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டடத்தில் கடந்த 13 மற்றும் 14ஆம் தேதி தபால் வாக்கு பதிவு நடந்தது. இதில் 2,181 பேர் தபால் வாக்களித்தனர். இந்நிலையில், தபால் வாக்களிக்காமல் விடுபட்டவர்களுக்காக இன்று (16ம் தேதி), ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் தபால் வாக்கு பதிவுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு தபால் வாக்கு செலுத்தி வருகின்றனர்.

News April 16, 2024

ஈரோடு: 75 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

மக்களவை தேர்தலை முன்னிட்டு, ஈரோட்டில் சொந்த ஊர்களுக்கு மக்கள் சென்று வாக்களிக்க 75 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதன்படி, ஈரோட்டில் இருந்து நாளை (17ஆம் தேதி) மற்றும் 18ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் நாமக்கல், கரூர், சேலம், கோவை, திருச்சி, மதுரை, போன்ற ஊர்களுக்கு 75 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஈரோடு மண்டல பொதுமேலாளர் சொர்ணலதா தெரிவித்துள்ளார்.

News April 16, 2024

ஈரோடு: அனைத்தும் தயார்

image

ஈரோடு மக்களவை தொகுதியில் 146 மண்டலங்களில் 1,688 வாக்குச்சாவடிகள் உள்ளன. மொத்தம் 15.38 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் பணிக்காக 2,325 மத்திய பாதுகாப்பு படையினரும், 1,571 உள்ளூர் போலீசாரும் என மொத்தம் 3 ஆயிரத்து 896 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது என  ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!