India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கர்நாடக மாநிலத்தில் முதல் கட்டமாக இன்று ஏப்ரல் 26ஆம் தேதி மற்றும் இரண்டாம் கட்டமாக மே 6 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அந்தியூர் அடுத்த வரட்டுபள்ளம், பர்கூர் பகுதியில் பறக்கும்படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று தட்டக்கரை வன அலுவலகம் முன்பு தேர்தல் நிலை கண்காணிப்புக் குழுவின் செயல்பாடு குறித்து மாவட்ட எஸ்.பி. ஜவகர் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு, பெருந்துறை தாலுக்கா உட்பட்ட சிப்காட்டில் உள்ள தொழிற்சாலையில் கர்நாடக மாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் நாளை நடைபெறக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்கும் வகையில் அவர்களுக்கு விடுமுறை வழங்கி உள்ளனர். அதேபோல பனியன் கம்பெனிகளில் வேலை செய்யக்கூடிய கர்நாடக மாநில தொழிலாளர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கோவையில் சில மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இது தொடர்பாக உமர் பரூக், அப்துல்லா ஆகியோரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் கடம்பூர் அடுத்த சின்னசாலப்பட்டியை சேர்ந்த குப்புசாமி என்பவருடன் அவர்களுக்கு பழக்கம் இருந்ததுள்ளது. இதனையடுத்து என்.ஐ.ஏ அதிகாரிகள் 2 வது நாளாக குப்புசாமியிடம் இன்றும் விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு, பங்களாப்புதூரைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). இவர் திருவிழாவிற்கு சென்று விட்டு இன்று அதிகாலை 2 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அஜித்குமார் இருசக்கர வாகனத்தை ஓட்ட பின்னால், கோபிநாத், சரவணன் அமர்ந்து இருந்தனர். அப்போது சத்தி – அத்தாணி சாலையில் பயாட்டிக் பேருந்து நிறுத்தம் அருகே டிராக்டர் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் அஜித் உயிரிழந்தார்.
ஈரோட்டில், கோடை காலம் தொடங்கும் முன்பே 100 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடந்த சில நாட்களாக 109 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. எனவே வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கும் தர்பூசணி விற்பனை தொடங்கி உள்ளது. ஈரோட்டில் பி.பெ.அக்ரஹாரம், கருங்கல்பாளையம், சோலார், திண்டல், க.குளம், சி.என்.கல்லூரி, சூளை, லட்சுமிநகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் தற்காலிக தர்பூசணி கடை அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் இன்று (ஏப்.25) வெப்பம் அதிகரித்து காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் ஈரோடு மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, ஈரோடு மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்தியூர் அடுத்த செம்புளிச்சாம்பாளையம் செல்லியாண்டியம்மன் கோவிலில் குண்டம் விழா நேற்று விமர்சையாக நடந்தது. இதில் ஒரு தீர்த்தக்குடம் ஏலம் விடப்பட்டது. இதனை பக்தர்கள் போட்டிபோட்டு ஏலம் எடுத்தனர். இதில் தீர்த்தக்குடம் ரூ.4 லட்சத்து 17 ஆயிரத்துக்கு ஏலம் போனது. மேலும் கோவிலுக்கு கொண்டு வரப்பட்ட தீர்த்த தண்ணீரில் விளக்கு எரிய வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் தற்போதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. கர்நாடக மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி ஈரோடு மாவட்டம் சத்தி அடுத்துள்ள தமிழக – கர்நாடக எல்லையில் அமைந்துள்ள காரப்பள்ளம் சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் கர்நாடக மாநிலம் நோக்கி செல்லும் வாகனங்களை நிறுத்தி தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் கோழிகளை தாக்கும் பறவை காய்ச்சல் உறுதியானதால், தமிழகத்தில் தொற்று பரவாமல் தடுக்க தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தி உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் 50 அதிவிரைவு செயலாக்க குழுக்கள் மூலம் அனைத்து கோழி பண்ணைகள், புறக்கடை,கோழிகளை நேரில் ஆய்வு செய்து மாதிரிகள் சேகரித்து கண்காணிக்கப்படுகிறது என ஈரோடு மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் பழனிவேல் தெரிவித்துள்ளார்.
கோபிச்செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த சிலர் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளனர். தொடர்ந்து கடன் தொகையை அவர்கள் செலுத்தி வந்த நிலையில் சில தவணைகள் செலுத்தவில்லை. இதனால் நிதி நிறுவனத்தினர் பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து விளக்கம் கேட்ட வழக்கறிஞர் சென்னியப்பன் என்பவரையும் நிதி நிறுவனத்தினர் மிரட்டியுள்ளனர். இதனையடுத்து கார்த்திக், நடராஜனை போலீஸார் இன்று கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.