India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெருந்துறை அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவன், அதே பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவிக்கும் பழகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவன், மானவியை தனது வீட்டுக்கு நேற்று முன்தினம் அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் காசிபாளையத்தில் முத்து வேலாயுதசாமி திருக்கோயில் அமைந்துள்ளது. பழைய ஏட்டுச் சுவடி ஒன்றில் பாடலில் இங்கு வந்து முருகப் பெருமானை வணங்கினால் கொடிய நோய்களும் குணமாகி விடும் என்று சொல்லப்படுகிறது. மேலும், தன்னை நாடி வரும் பக்தர்களின் நாக தோஷம் புத்திர தோஷம் உட்பட சகல தோஷங்களையும், பிரச்சினைகளை உடனுக்குடன் தனது பார்வையாலேயே தீர்த்து வைப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தமிழகம் முழுவதும் 10 போலீஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலர் தீரஜ் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், ஈரோடு மாவட்ட எஸ்பி ஜி.ஜவகர் சிபிசிஐடி வடக்கு மண்டல எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். திருப்பூர் வடக்கு சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் சுஜாதா, ஈரோடு மாவட்ட எஸ்.பியாக பணியமர்த்தப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர் ஈரோடு மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் கோடைகாலம் முன்னரே குடிநீர் கேன்கள் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், குடிநீர் கேன்களை அதிக முறை பயன்படுத்தும்போது அதில் உள்ள மைக்ரோ பிளாஸ்டிக் தண்ணீரில் கலந்து விடும் அபாயம் உள்ளது. எனவே ஒரு குடிநீர் கேனில் 30 முறை மட்டுமே மறுசுழற்சி செய்து குடிநீரை நிரப்ப வேண்டும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் இயல்பை விட 2-3 டிகிரி கூடுதலாக வெப்பம் பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதன் அடிப்படையில் கடந்த 2 நாட்களாக வெயிலின் தாக்கம் சற்று கூடுதலாக இருக்கிறது. அவ்வகையில் ஈரோட்டில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் தாண்டி வெயில் பதிவாகியுள்ளது. ▶ காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே செல்லாதீங்க. உங்க உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க.
மகுடேஸ்வரர் கோயில் – கொடுமுடி. சங்கமேஸ்வரர் கோயில் – பவானி. அமரபணீசுவரர் கோயில் – பாரியூர். புஷ்பவனேஸ்வரர் கோயில் – அவல்பூந்துறை. கருமலையாண்டவர் கோயில் – அந்தியூர். மாதேஸ்வரர் கோயில் – காஞ்சிகோவில். காசிவிஸ்வநாதர் கோயில் – துடுப்பதி. சோழீஸ்வரர் கோயில் – பெருந்துறை. அருள்மலைநாதர் கோயில் – திங்களூர். தான்தோன்றீஸ்வரர் கோயில் – நம்பியூர். இதை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்.
சிவன் திரிபுரத்தை அழிக்க, மேருமலையை வில்லாகப் பயன்படுத்தியபோது, அதிலிருந்து சிதறிய ஒரு சிறுபகுதியே சிவன்மலை எனப்படுகிறது. பார்வதி, அகத்தியர் சிவனை நோக்கித் தவம் செய்த தலம் என்றும், வள்ளியை மணம்முடித்த முருகன் வள்ளியுடன் இங்கு வந்து குடிகொண்டாரம். திருநள்ளாறு சென்று சனீஸ்வரனை தரிசிப்பதும், சூரிய நாராயணர் கோவில் சென்று சூரியனை வழிபடுவதால் ஏற்படும் சிறப்பும், சிவன்மலை முருகனை வழிபட்டால் கிடைக்கும்.
கரூர் இரயில் நிலையத்துக்கு அருகே உள்ள, புகழூா் இரயில்வே பணிமனையில், தண்டவாளப் புதுப்பித்தல் பணிகள் நாளை நடைபெற உள்ளது. எனவே திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து நாளை காலை 7.20 மணிக்குப் புறப்படும். திருச்சி – ஈரோடு பயணிகள் ரயில் கரூர் வரை மட்டுமே இயக்கப்படும். இதேபோல், ஈரோட்டில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்படும். ஈரோடு-செங்கோட்டை ரயில், கரூரில் இருந்து செங்கோட்டை வரை மட்டும் இயங்கும்.
இந்திய ராணுவத்தில் 2025-26ஆம் ஆண்டிற்கான ஜெனரல் டியூட்டி, டெக்னிக்கல், கிளர்க்/ஸ்டோர் கீப்பர், டிரேட்ஸ்மேன் (10வது), டிரேட்ஸ்மேன் (10வது), டிரேட்ஸ்மேன் (8வது) ஆகிய பிரிவுகளில் ஆட்சேர்ப்பிற்கு www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த திருமணமாகாத ஆண்கள் ஏப்.10 வரை விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளராக, திருப்பூரில் காவல் துணை ஆணையர், சட்டம் மற்றும் ஒழுங்கு,வடக்கு பணியில் உள்ள ஏ.சுஜாதா, பணியமர்த்தப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக தற்போது உள்ள ஜி.ஜவகர், சென்னையின் சிபி-சிஐடி காவல்துறையின், வடக்கு மண்டல காவல்துறை கண்காணிப்பாளராக, பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.