India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோட்டில், காந்திஜி ரோட்டில் பிரபு என்பவருக்கு சொந்தமான பார்வதி பண்ணை முட்டை கடை உள்ளது. நேற்று முன் தினம் இரவு வழக்கம் போல் பிரபு கடையை பூட்டி சென்றார். நேற்று காலை வந்தபோது, கடையின் முன்புற கதவு பூட்டு உடைக்கப்பட்டு கடையில் இருந்த ரூ.9,000 பணம் திருட்டு போனது தெரிந்தது. எனவே பிரபு அளித்த தகவலின்படி ஈரோடு – சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை காவல் நிலைய பகுதிகளில் உள்ள உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருப்பவர்கள் வரும் பாராளுமன்ற தேர்தலையொட்டி காவல் நிலையத்தில் துப்பாக்கிகளை ஒப்படைக்க காவல்துறையினர் அறிவுறுத்தினர். இந்நிலையில் அம்மாபேட்டையை சுற்றி உள்ள உரிமம் பெற்ற துப்பாக்கிகள் வைத்திருந்த 68 பேர் அம்மாபேட்டை காவல் நிலையங்களில் துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளனர்.
ஈரோடு நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளராக பிரகாஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல்-2024 தமிழகத்தில் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதைமுன்னிட்டு மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று (மார்ச் 20) அக்கட்சியின் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் சற்றுமுன் வெளியிட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தல்-2024 தமிழகத்தில் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று (மார்ச்.20) அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சற்றுமுன் வெளியிட்டார். அதன்படி ஈரோடு தொகுதியில் வேட்பாளராக ஆற்றல் அசோக்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.
மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும். இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம் மே 13 – 24. விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள். தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே. விண்ணப்பிக்க: jigyasa.iirs.gov.in/yuvika
ஈரோட்டில் உள்ள மின்வாரிய ஆய்வு மாளிகையில் இந்த ஆண்டு முதலாம் காலாண்டுக்கான மின்வாரிய ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் மார்ச் நடைபெற உள்ளது. எனவே மின் வாரியத்தில் இருந்து ஓய்வுபெற்ற அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களின் குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெறலாம் என ஈரோடு மின் மண்டல தலைமைப் பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 20 ஆம் தேதி தொடங்குகிறது. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் ஈரோடு கலெக்டர் அலுவலகம், ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலகம் ஆகிய 2 இடங்களில் நடக்கிறது. பகல் 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழா மார்ச் 25,26 இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இதையொட்டி மார்ச் 25ஆம் தேதி மதியம் 2 மணி முதல் மார்ச் 26ஆம் தேதி இரவு 9 வரை பண்ணாரி, திம்பம், ஆசனூர் வழியாக மைசூர் செல்லும் காய்கறி மற்றும் அனைத்து வாகனங்களும், மாற்று பாதையில் செல்ல ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே குட்டை மேடு பகுதியில் இன்று காலை தமிழக அரசு அனுமதியின்றி 58 மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்த தாண்டாம்பாளையம் பகுதியை சேர்ந்த அம்மாவாசை என்பவரை வெள்ளித்திருப்பூர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 58 மதுபாட்டில் மற்றும் விற்பனை செய்த தொகை ரூ. 7 ஆயிரத்து 80 மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை, கோபிசெட்டிபாளையம் ஆகிய இடங்களில் 4 பகுதியில் மஞ்சள் ஏலம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் வாரந்தோறும் அரசு விடுமுறை நாட்கள் தவிர திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை ஏலம் நடக்கிறது. இந்நிலையில் ஹோலி பண்டிகையான 25 ஆம் தேதி, பண்ணாரி அம்மன் திருவிழா 26 ஆம் தேதி, புனித வெள்ளியை முன்னிட்டு வரும் 29 ஆம் தேதி மஞ்சள் மார்க்கெட்டுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.