India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு-செங்கோட்டை இடையே ரயில்வே பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே ஈரோட்டில் இருந்து செங்கோட்டைக்கு மதியம் 2 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில் நாளை அக்.9 திண்டுக்கல் வரை மட்டும் இயக்கப்படும். செங்கோட்டையில் இருந்து நாளை காலை 5 மணிக்கு ஈரோடு வரும் பயணிகள் ரயில் ரத்து செய்யப்படுகிறது. மேலும் இந்த ரயில் திண்டுக்கல்லில் இருந்து ஈரோடு வரை மட்டும் இயக்கப்படும் என ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடத்தப்படும் இலவச திருமண திட்டத்தின் கீழ், திருமணம் செய்து கொள்ள விரும்புவர்கள் அந்தந்த கோயில்களில் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு நகரில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில்களில் அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு-சென்னிமலை சாலையில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையாளர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில், ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை முகாம் நடைபெறுவது வழக்கம். இம்முகாமில் இணையம் சார்ந்த ‘கிக்’ தொழிலாளர்கள் (ஆனலைன் இயங்குதள தொழிலாளர்கள்) உறுப்பினராக சேர்ந்து பயன்பெறலாம் என ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் தங்களின் புகைப்படங்களை பதிவிட வேண்டாம். பார்டைம் ஜாப் என்று சமூக வளைதளங்களில் வரும் லிங்க்குகள், தங்கள் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது என்று வரும் போலி லிங்க்கை தொட வேண்டாம். சமூக வளைதளங்களில் பணத்தை இழந்தால் உதவி எண் 1930க்கு அழைக்கலாம் அல்லது www.cybercrime.gov.in வெப்சைட்டில் புகாரளிக்கலாம் என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் சாராயம் காய்ச்சினால் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக டி.ஜி.பி சங்கர் ஜிவால் மற்றும் மேற்கு மண்டல ஐ.ஜி செந்தில்குமார் ஆகியோரின் உத்தரவின்பேரில் ஈரோடு மாவட்டத்தை சாராயம் இல்லாத மாவட்டமாக மாற்ற போலீசார் பல்வேறு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில மைய முடிவின்படி, தமிழக அரசு தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று ஆக்.08 மாலை 5:30 மணிக்கு மாலை நேர தர்ணா போராட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெற உள்ளது. மாலை நேர தர்ணா போராட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து அரசு ஊழியர்களும் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கூற உள்ளனர். மேலும் வட்டக்கிளை நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
பெருந்துறை NH 544 தேசிய நெடுஞ்சாலையில் சேலம் முதல் செங்கப்பள்ளி வரையிலான 102.5 கிமீ சாலையை ஆறு வழி சாலையாக்க வேண்டும். பெத்தாம்பாளையம், விஜயமங்கலம் உள்ளிட்ட முக்கிய இணைப்பு சாலை சந்திப்புகளில் மேம்பாலங்கள் அமைக்கவும், சர்வீஸ் ரோடுகள் முழுமையாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூர் தொகுதி எம்.பி., கே.சுப்பராயன் மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் Way2News நிறுவனத்தின் ‘மார்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்’ ஆக பணிபுரிய ஆட்களை தேர்வு செய்ய உள்ளோம். 10ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத ஊதியமாக ரூ.18,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் 9965860996, 9363271089, 9791731249 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும்.
வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்த கலைச்செல்வன் மற்றும் இரு பெண்கள் காரில், ஈரோடு-நசியனூர் சாலையில் இன்று அதிகாலை சென்றுள்ளனர். காரை கலைச்செல்வன் ஓட்டி சென்றுள்ளார். அப்போது வில்லரசம்பட்டி நால்ரோடு பகுதியில் சென்ற போது காரி சாலையின் இடதுபுறம் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கலைச்செல்வன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை நகரில், ஆர்எஸ்எஸ் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பாஜக எம்எல்ஏ சரஸ்வதி மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டு, ஊர்வலத்தை துவங்கி வைத்தனர். பின் ஊர்வலம் நிறைவடைந்ததும் பழைய பேருந்து நிலையம் பகுதியில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. எனவே பெருந்துறை போலீசார் சார்பில் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.
Sorry, no posts matched your criteria.