India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அதிகாரியை மிரட்டிய வீடியோவிற்கு டி.ஆர்.பி.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். ‘அதிகார போதையில் பாஜகவினர் அதிகாரிகள் மட்டுமல்ல, மக்களையே மதிப்பதில்லை. இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்களின் நிலைமை,அதிகாரிகளின் நிலைமை என்னவாகும்? எனது வாகனம் தினந்தோறும் சோதிக்கப்படுகிறது. அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பது நமது கடமை. எந்த அதிகாரியையும் இப்படி மிரட்டுவது ஒருபோதும் சரி அல்ல’ என x தளத்தில் பதிவு செய்துள்ளார்.
கோபிசெட்டிபாளையத்தில் தனது காரை சோதனை செய்த தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகளுக்கு திருப்பூர் பாஜக வேட்பாளர் ஏ.பி. முருகானந்தம் மிரட்டல் விடுத்த வீடியோ வெளியாகி இருந்தது. இதையடுத்து, திருப்பூர் மாவட்டம் குன்னாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களுக்கு தெரியும்படி முன் பகுதியில் வேட்பாளர் பெயர் சின்னங்களுடன் கூடிய பேலட் பேப்பர் பார்வைக்கு வைக்க வேண்டி உள்ளதால், 40 ஆயிரம் பேலட் பேப்பர்கள் அச்சடிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 50 சதவீதம் பேலட் பேப்பர்கள் அச்சடிக்கப்பட்டுவிட்டதாகவும், முழுமையாக அச்சடிக்கப்பட்ட பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பொருத்தும் பணி தொடங்கும் என தெரிவித்தனர்.
ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகள் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி நீங்களாக 5 தொகுதிகளில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து
தபால் வாக்கு சேகரிக்கும் பணி நேற்று தொடங்கியது. முதல் நாளில் 775 முதியவர்கள், 191 மாற்றுத்திறனாளிகள் என 966 பேர் தபால் வாக்குகளை பதிவு செய்தனர். இவை ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்குப்பதிவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் ஏப்ரல் 17 முதல் ஏப்ரல் 19ஆம் தேதி வரை மூடப்படுகிறது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கருதி இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேட்டூரை சேர்ந்த டாக்டர் மாதப்பன் அவரது மனைவி டாக்டர் பத்மினி ஆகியோர் நேற்று காரில் ஈரோடு சென்று விட்டு மீண்டும் மேட்டூர் திரும்பி வந்த போது ஊராட்சி கோட்டை அருகே எதிரே வந்த லாரி மீது கார் மோதியது. பலத்த காயமடைந்த அவர்களை பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர்களை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பவானி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெருந்துறை சட்டமன்றத் தொகுதி, பெருந்துறை டவுன் பகுதியில் வாக்காளர்கள் அனைவரும் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் பெருந்துறை போலீசாரின் விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. பெருந்துறை போலீஸ் ஸ்டேஷனில் தொடங்கிய பேரணியை பெருந்துறை டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். பெருந்துறை நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்த இந்த ஊர்வலம் அண்ணா சிலை பகுதியில் நிறைவு பெற்றது.
திருப்பூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கவுந்தப்பாடியில் இன்று காலை பாஜக தலைவர் அண்ணாமலை திருப்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் முருகானந்தத்திற்கு ஆதரவு தெரிவித்து திறந்தவெளி வாகனத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வலிமையான நாட்டை மோடி அரசு உருவாக்கி உள்ளது. தீவிரவாதம் இல்லை, குண்டு வெடிப்பு, கலவரம், வெளிநாட்டு கூலிப்படை இல்லாத வகையில் மோடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே SST 3’A’ Team இன்று மாலை மேட்டூர் டானி சன்னியாசிப்பட்டி ரைஸ் மில் மேடு அருகில் பறக்கும் படை அதிகாரிகள் ஜீப்பில் சென்றனர். அப்போது, எதிரே வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில், படுகாயமடைந்த உதவி இயக்குனர் பழனிசாமி உட்பட ஆறு பேர் பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு தொகுதியில் 2201 முதியவர்களும், 800 மாற்றுத்திறனாளிகளும் தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். விருப்பம் தெரிவித்த 3001 பேரிடம் தபால் வாக்குகளை சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஏப்.6 வரை 3 நாட்களுக்கு காலை 7மணி முதல் மாலை 6மணி வரை வீடு வீடாகச் சென்று தபால் வாக்கு சேகரிக்கப்பட உள்ளது. தபால் வாக்குகளை செலுத்த முடியாதவர்களுக்கு ஏப்.8 ஆம் தேதி மீண்டும் ஒருமுறை வாய்ப்பு வழங்கப்படும்.
Sorry, no posts matched your criteria.