Erode

News October 10, 2024

பண்ணாரி கோவிலில் இலவச திருமணம்: பதிய அழைப்பு

image

சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியில் உள்ள மாரியம்மன் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கீழ் உள்ளது. இக்கோவிலில் இலவச திருமண திட்டத்தில், மணமக்களுக்கு 4 கிராம் தங்கம் உள்பட ரூ.60,000 செலவில் சீர்வரிசை வழங்கப்பட உள்ளது. இதில் வரும் அக்டோபர் 21ஆம் தேதி, இலவச திருமணம் நடக்கவுள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர், கோவில் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்படது.

News October 10, 2024

திருப்பணிகளால் அம்பு சேர்வை விழா ரத்து

image

ஈரோடு, புஞ்சைபுளியம்பட்டி அருகே கோவில்புதூரில் பிரசித்தி பெற்ற கரிவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் விஜயதசமி பண்டிகைக்கு அடுத்த நாள், அம்புசேர்வை நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெறும். இந்நிலையில் நடப்பாண்டு கரிவரதராஜ பெருமாள் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருவதால் அம்புசேர்வை விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

News October 10, 2024

பள்ளி மாணவர்களுக்கு கலைபோட்டி

image

ஈரோடு, பி.பெ.அக்ரஹாரத்தில் உள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளியில், ஈரோடு மாவட்ட பள்ளி மாணவ, மாணவியருக்கான குரலிசை, பரத நாட்டியம், நாட்டுப்புற நடனம், ஓவியம் என 4 பிரிவுகளில் கலைப் போட்டி வரும் அக்டோபர் 13ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும் விபரங்களுக்கு 0424-2610290, 99946-61754 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். போட்டி அன்று பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் அட்டை நகல் உடன் முன்பதிவு செய்ய வேண்டும்.

News October 10, 2024

ஈரோட்டில் ரேஷன் கடை ஊழியர்கள் மூவர் சஸ்பெண்ட்

image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் ஏற்படும் முறைகேடுகளைத் தடுக்க கூட்டுறவு துறை அலுவலர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் லதா, இந்திராணி, பிரபு ஆகியோர் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. மூவரையும் சஸ்பெண்ட் செய்து, ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ராஜ்குமார் உத்தரவிட்டார்.

News October 9, 2024

ஈரோடு ரேஷன் கடையில் வேலை வாய்ப்பு

image

ஈரோடு மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவு சங்க நியாய விலைக் கடைகளில் 90 விற்பனையாளர், 9 கட்டுநர் பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். இப்பணி நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்கு உரிய ஆவணங்களுடன் https://drberd.in/ என்ற இணையதளம் மூலமாக நவம்பர் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆள் சேர்ப்பு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 9, 2024

ஈரோட்டில் இலக்கிய திறனறித்தேர்வு

image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 37 மையங்களில், பிளஸ் 1 மாணவ, மாணவிகளுக்கு, தமிழ் மொழி இலக்கிய திறனறித்தேர்வு வரும் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் அரசு, அரசு நிதியுதவி, தனியார் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளி என 9,443 மாணவ-மாணவியர் தேர்வு எழுத உள்ளனர். இதில் சிறந்த மதிப்பெண் பெறும் 1,500 பேருக்கு, மாதந்தோறும் ரூ.1,500 கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News October 9, 2024

உயிரிழந்த பெண்ணின் அடையாளம் தெரிந்தது

image

திருப்பூரில் வீட்டில் வைத்து சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் போது ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த பெண்ணின் அடையாளம் தெரிந்தது. அவர் நம்பியூர் பகுதியைச் சேர்ந்த விஜயா (35) என்பதும், பட்டாசு தயாரிக்கும் பணிக்காக திருப்பூர் வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும், போலீசார் வீட்டின் உரிமையாளர் கார்த்திக் மற்றும் வெடி மருந்துகளை பதுக்கிய சரவணகுமார் இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News October 9, 2024

ஈரோட்டில் வேலைவாய்ப்பு முகாம்

image

ஈரோடு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் அக்.19 தேதி வேளாளர் பொறியியல் (ம) தொழில்நுட்பகல்லூரியில் நடைபெறவுள்ளது. இதில், 8, 10, 12, டிப்ளமோ, டிகிரி, ஐடிஐ படித்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், விபரங்களுக்கு 86754-12356, 94990-55942 என்ற எண்ணை அழைக்கவும்.

News October 9, 2024

ஈரோட்டில் உரங்கள் போதிய இருப்பு

image

ஈரோடு மாவட்டத்தில் நெல், கரும்பு, மஞ்சள், நிலக்கடலை, மக்காச்சோளம், எள், காய்கறிகள், வாழை, மரவள்ளி ஆகிய பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. விவசாயிகள் பயிர் சாகுபடி மேற்கொள்ள ஏதுவாக யூரியா, பொட்டாஸ், சூப்பர் பாஸ்பேட் உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் போதிய அளவு தட்டுப்பாடு இல்லாமல் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண் இணை இயக்குநர் அறிவித்துள்ளார்.

News October 9, 2024

ஈரோடு ரயில் சேவையில் மாற்றம்

image

ஈரோடு-செங்கோட்டை இடையே ரயில்வே பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே ஈரோட்டில் இருந்து செங்கோட்டைக்கு மதியம் 2 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில் நாளை அக்.9 திண்டுக்கல் வரை மட்டும் இயக்கப்படும். செங்கோட்டையில் இருந்து நாளை காலை 5 மணிக்கு ஈரோடு வரும் பயணிகள் ரயில் ரத்து செய்யப்படுகிறது. மேலும் இந்த ரயில் திண்டுக்கல்லில் இருந்து ஈரோடு வரை மட்டும் இயக்கப்படும் என ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டது.