Erode

News October 12, 2024

தீபாவளி: பட்டாசு கடைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

image

ஈரோடு மாவட்டத்தில் வணிகர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தற்காலிக பட்டாசு விற்பனை செய்ய பட்டாசு விற்பனை உரிமம் பெற வேண்டும். இதற்கு பொது இ-சேவை மையங்களின் மூலம் தகுந்த ஆவணங்களுடன் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு சேவை கட்டணமாக ரூ.600ஐ 0070-60-109-AA-22738 என்ற கணக்கில் செலுத்தியதற்கான ரசீது உடன் இன்று (அக்டோபர் 12) வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

News October 11, 2024

ஆயுத பூஜை கொண்டாடிய டைரக்டர் ராஜகுமாரன்

image

திரைப்பட இயக்குனரும் நடிகை தேவயானியின் கணவருமான ராஜகுமாரன் இன்று அவர் சிறுவயதில் அந்தியூர் தவிட்டுப்பாளையத்தில் வேலை பார்த்த இடத்தில் பழைய நினைவுகளை நினைவு கூறும் வகையில் முதலாளியின் வீட்டில் நடைபெற்ற ஆயுத பூஜை விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டார். இயக்குனருக்கு அவருடன் அப்பொழுது பணியாற்றிய பணியாளர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

News October 11, 2024

ஈரோடு: லஞ்சம் வாங்கிய VAO கைது

image

தாளவாடியில் வாரிசு சான்றிதழ் வழங்க, 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய ஆசனூர் விஏஓவை, லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்தனர். தனது மாமனாரின் தந்தை இறப்புக்கு வாரிசு சான்றிதழ் பெற ஒருவர் ஆசனூர் விஏஓவை அணுகினார். விஏஓ ருத்ரசெல்வன் 50 ஆயிரம் ரூபாய் தர பேரம் பேசி வாங்கினார். அப்போது வளாகத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி ராஜேஷ், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் விஏஓவை கையும் களவுமாக கைது செய்தனர்.

News October 11, 2024

ஈரோடு மஞ்சள் ஏலம்: 3 நாள் விடுமுறை

image

ஈரோட்டில் உள்ள மஞ்சள் வளாகத்திற்கு, ஆயுத பூஜையை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) மஞ்சள் ஏலத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அக்டோபர் 12, 13 தேதிகள் சனி, ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் விடுமுறை தினமாகும். பின்னர் அக்டோபர் 14ஆம் தேதி (திங்கள்கிழமை) வழக்கம்போல மஞ்சள் ஏல விற்பனை நடைபெறும் என ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

News October 11, 2024

ஈரோடு மக்களே ரேஷன் கடையில் வேலை!

image

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவுச் சங்கங்களின்கீழ் இயங்கி வரும் ரேஷன் கடைகளில், விற்பனையாளர் மற்றும் கட்டுநர்கள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தில் 99 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. நேரடி நியமனம் மூலம் இப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பம் உள்ளோர் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம்.

News October 10, 2024

ஈரோடு அருகே விபத்து: ஒருவர் பலி

image

பெருந்துறை அடுத்துள்ள விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகில் பெங்களூர் To கொச்சின் NH-544 தேசிய நெடுஞ்சாலையில் இன்று மதியம் 2 மணியளவில் சுங்கச்சாவடியை அடுத்து வாய்ப்பாடி பிரிவில் பைக்கில் இருவர் அதிவேகத்தில் செல்லும் பொழுது நிலைதடுமாறி பேரி கார்டில் அடித்து கீழே விழுந்ததில் பின்னால் வந்த லாரியின் சக்கரத்தில் சிக்கி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

News October 10, 2024

ஈரோடு அருகே கண்காட்சி

image

தமிழ்நாடு மாநில ஊடகம் மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மகளிர் குழுவினரால் உற்பத்தி செய்யப்பட்ட உற்பத்தி பொருள்கள் விருப்பக் கண்காட்சி ஈரோடு தாலுகா அலுவலகம் முன்பு 9.10.2024 முதல்15.10.2024 வரை பொருள்கள் விருப்பக் கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பொதுமக்கள் அனைவரும் மகளிர் குழுவினரால் தயாரிக்கப்பட்ட பொருள்களைச் வாங்கிச் சென்ற வண்ணம் உள்ளனர்.

News October 10, 2024

ரேஷன் கடையில் வேலை வாய்ப்பு

image

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் கீழ் இயங்கி வரும் ரேஷன் கடைகளில், விற்பனையாளர், கட்டுநர்கள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அவ்வகையில், ஈரோட்டில் 51 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. நேரடி நியமனம் மூலம் இப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கு https://drbtsi.in/how_apply_online.php என்ற இணைதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

News October 10, 2024

ஈரோட்டில் வேலை வாய்ப்பு முகாம்

image

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் வழிகாட்டுதலின்படி தனியார் வேலை வாய்ப்பு நிர்வாகம் சார்பில் வரும் (19.10.2024) சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரியில் நடைபெறுகின்றது. இதில் 8, 10, 12, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இத்தகவலை Share பன்னுங்க.

News October 10, 2024

மாவட்ட அளவிலான எறிபந்து போட்டி

image

ஈரோட்டில் மாவட்ட அளவிலான எறிபந்து போட்டி நேற்று நடைபெற்றது. ஈரோடு சிஎஸ்ஐ பள்ளி மைதானத்தில் நடைபெற்ற போட்டியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு சுபாராவ் தொடங்கி வைத்தார். குறுமைய அளவில் வெற்றி பெற்ற அணிகள் இதில் கலந்துகொண்டு விளையாடினார்கள். இதில் வெற்றி பெரும் அணி மாநில அளவுக்கு தகுதி பெறுவார்கள்.