India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் மார்ச் 20இல் தொடங்கிய நிலையில் மார்ச் 27ஆம் தேதி நிறைவுபெறுகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 25) திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, காங். உள்ளிட்ட முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்கு இந்தியா கூட்டணி வேட்பாளர் சுப்பராயன் போட்டியிடுகிறார். கோபியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அறிமுக கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏ, பேசுகையில் கோவையில் அண்ணாமலை வெற்றி பெற ஒரு ரூபாய் செலவு செய்ய மாட்டார் ஆனால் ஒரு சவரன் கொடுப்பார் என தெரிவித்தார். இதில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு மக்களவைத் தேர்தல் பணியில் 10, 970 அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர். அவர்களுக்கு நான்கு கட்ட பயிற்சி வழங்கப்பட உள்ளது. அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி இன்று ஈரோடு மாவட்டத்தில் நடந்தது. மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் தலா ஓரிடத்தில் முதல் கட்ட பயிற்சி நடந்தது. கோபி சாரதா பள்ளியில் நடந்த பயிற்சியில் மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ராஜகோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டார்.
மக்களவைத் தோதலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி, மாநகராட்சி ஊழியா்கள் வீடுவீடாகச் சென்று வாக்காளா்களிடம் துண்டறிக்கைகளை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும், பிற பகுதியைச் சோந்த வாக்காளா்களை அவா்களது சொந்த ஊா்களுக்குச் சென்று தோதலின்போது வாக்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டாா். இந்நிகழ்வின்போது, சுகாதார ஆய்வாளா் கோபாலகிருஷ்ணன், மாநகராட்சி பணியாளா்கள் உடனிருந்தனா்.
ஈரோடு அரசு மருத்துவமனை சந்திப்பு அருகில் அதிமுக தேர்தல் பணிமனை அமைக்க கால்கோள் விழா நடைபெற்றது. தேர்தல் பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் பலர் பங்கேற்றனர். கொங்கு மண்டலம் அதிமுக கோட்டையாக இருப்பதால் அதிமுக வேட்பாளர் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா நாளை நடைபெற உள்ளது. எனவே இதன் காரணமாக நாளை (26ம் தேதி), ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திட்டமிட்டபடி பள்ளி, கல்லூரி தேர்வுகள் நடைபெறும் எனவும், உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மார்ச் 30ம் தேதி பணி நாளாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதிமுகவை சேர்ந்த ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒருவாரமாக கணேசமூர்த்தி மன அழுத்தத்தில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 இல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. 1951 இல் உருவாக்கப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 135-பி இன் கீழ் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக தேர்தல் தினத்தன்று அனைத்து வகையான நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும். இந்த விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும்.
தமிழ்நாட்டில் 6 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தியது. நேற்று அதிகபட்சமாக ஈரோட்டில் தலா 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது. தமிழகத்தில் வரும் 27 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்கக்கூடும்.
நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, ஈரோட்டில் மருத்துவர் மு.கார்மேகன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் கரும்பு விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.