India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கள்ளிப்பட்டி பகுதியில் 100 % வாக்குப்பதிவை வலியுறுத்தி திருமண அழைப்பிதழை போல் தேர்தல் திருவிழா அழைப்பிதழை பொதுமக்களுக்கு கொடுத்து நூதன பிரச்சாரம் மற்றும் விழிப்புணர்வு பேரணியில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டனர். தேர்தல் விழிப்புணர்வு பேரணியில் மேளம் இசைத்தபடியும் , பொம்மை வேடமிட்டும் 50-க்கும் மேற்பட்ட வருவாய் துறையினர் விழிப்புணர் ஏற்படுத்தினர்.
பெருந்துறையில் தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அருணாச்சலத்துக்கு ஆதரவாக இன்று மாலை 6 மணி அளவில் பிரசாரம் செய்ய உள்ளார். தொடர்ந்து இரவு 7 மணி அளவில் ஈரோடு கனிராவுத்தர் குளம் பகுதியில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அசோக்குமாருக்கு ஆதரவு கேட்டு பிரச்சாரம் செய்ய உள்ளதாக அ.தி.மு.க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய அணையாகும். இதன் மொத்த நீர்மட்ட உயரம்
105 அடி, கொள்ளளவு 32.8 டிஎம்சி ஆகும். இந்நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 53.32 அடி, நீர் இருப்பு 5.27 டி.எம்.சி, நீர் வரத்து வினாடிக்கு 27 கன அடியாக உள்ளது . மேலும் பாசனம் மற்றும் குடிநீருக்கு வினாடிக்கு 3,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட தலமலை வனப்பகுதியில் ஏராளமான யானைகள் அவ்வப்போது சாலையின் நடுவே குறுக்கிட்டு பயணிகளை அச்சுறுத்தி வருவது வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. நேற்று ஒற்றை யானை திடீரென
சாலையில் நடுவே நின்று பேருந்தை வழிமறித்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். சிறிது நேரம் பேருந்து முன் நின்ற காட்டு யானை மீண்டும் வனப்பகுதிக்குள் தானாகவே சென்றது.
சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோவிலில் குண்டம் விழா நிறைவடைந்ததையடுத்து கோயில்களில் வைக்கப்பட்டிருந்த 15 உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. பண்ணாரி அம்மன் கோயில் துணை ஆணையர் ரா.மேனகா, பவானி சங்கமேஸ்வரர் கோயில் துணை ஆணையர் சு.சுவாமிநாதன் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. இதில் ரூ.1 கோடியே 5 லட்சத்துக்கு 96 ஆயிரம், 295 கிராம் தங்கம், 757 கிராம் வெள்ளி கிடைத்துள்ளது.
ஈரோட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோடு மற்றும் குமாரபாளையத்தில் நாளை பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல், “மானமும் அறிவும் மனிதருக்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஒன்றிய செயல்வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் பெருந்துறை தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசும் போது மண்வெட்டியால் துண்டான போதிலும் இரண்டு துண்டுகளும் தனித்தனி புழுவாகி அதற்கு உண்டான வேலையை செய்வது போல் நமது கட்சி நிர்வாகிகள் அனைவரும் வேட்பாளரின் வெற்றிக்காக செயல்படுவார்கள் என்றார்
தமிழகத்தில் வரும் மக்களவை தேர்தலையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ஈரோடு மாவட்டம் சிவகிரி திமுக நாடாளுமன்ற வேட்பாளர் பிரகாசை ஆதரித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தீவிர பரப்புரை மேற்கொண்டார்.
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி கடந்த தினங்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்றார். இவர் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனை சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். இந்நிலையில் அவரது பூத உடல் பூந்துறைக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு வந்த தூத்துக்குடி எம்.பி.கனிமொழி நேரில் வருகை தந்து அஞ்சலி செலுத்தினார்.
ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது பிரிவால் வாடும் மதிமுக தொண்டர்களுக்கும், திராவிட இயக்கப் பற்றாளர்களுக்கும், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.