India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் தொடக்க கல்வி பட்டயத்தேர்வு, ஜூன் மற்றும் ஜூலை மாதம் நடைபெற உள்ளது. எனவே இத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தகுந்த மதிப்பெண் சான்றிதழ்களுடன், ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதிக்குள் பெருந்துறை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நேரடியாக சமர்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்ணாரி அம்மன் பண்டிகை முன்னிட்டு மார்ச்.28 இல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதை ஈடு செய்யும் விதமாக இன்று ம்(மார்ச்.30) அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் எனவும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கார ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி இன்று அனைத்து பள்ளிகளும் வழங்கும் போது இயங்கும்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள கொங்கு பொறியியல் கல்லூரியின் 40 ஆவது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. சுவிட்சர்லாந்து நாட்டைச் சோ்ந்த ஏபிபி பிராசஸர் ஆட்டோமேஷன் நிறுவனத்தின் சா்வதேச டிஜிட்டல் அதிகாரி ராஜேஷ் ராமசந்திரன், இந்திய ராணுவத்தின் இஎம்ஐ படைப்பிரிவு கார்னர் ஆா். விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனா்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ். இளங்கோவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தேர்தல் ஆணையம் மோடியின் கொத்தடிமை கைப்பாவையாக செயல்படுகிறது. ஈரோடு அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் வாக்களர்களுக்கு கொடுக்க பல கோடி ரூபாய் சேலைகளை குடோனில் பதுக்கியுள்ளார். எனவே ஈரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என தெரிவித்தார்.
ஈரோடு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.இ பிரகாஷ் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு தெரிவித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமலஹாசன் இன்று ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது இந்தியா கூட்டணி கட்சியின் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் நாளை (மார்ச் 30) மற்றும் நாளை மறுநாள் (மார்ச் 31) ஆகிய நாட்களில் ஈரோட்டில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். எனவே இந்த 2 நாட்களில் ஈரோடு மாவட்ட காவல் எல்லையில், ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க விட தடை விதித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து மநீம தலைவர் கமல்ஹாசன் இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார். தேர்தல் பரப்புரைக்காக இன்று ஈரோடு வருகை தந்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, திமுக வேட்பாளர் பிரகாஷ் உள்ளிட்ட பலரும் இருந்தனர்.
2024 மக்களவை தேர்தலையொட்டி முதல்வர் ஸ்டாலின் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாநிலம் முழுவதும் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, மார்ச் 31ஆம் தேதி ஈரோடு வருகை தரும் முதல்வர் ஸ்டாலின்; திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து சின்னியம்பாளையத்தில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் கோயில் திருவிழாக்களுக்கு தேர்தல் பிரிவு அலுவலகத்தில் அனுமதி பெற்று நடத்திட தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில்களின் திருவிழா உள்ளிட்ட 80 மத வழிபாட்டு தலங்களில் விழாக்கள் நடத்திட அனுமதி வேண்டி விண்ணப்பிக்கப்பட்டதில் 80 மத வழிபாட்டு தலங்களிலும் விழாக்கள் நடத்திட அனுமதி வழங்கப்பட்டது.
ஈரோடு மக்களவைத் தொகுதியில் மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட 52 வேட்பு மனுக்களில் கூடுதல் மனுக்கள், வயது குறைவு, பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாதது என 7 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மீதமுள்ள 45 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. நாளை இறுதி நாளாகும் .
Sorry, no posts matched your criteria.