Erode

News March 31, 2024

மாநில அளவில் முதலிடம் பிடித்த பெண்

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 1 தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வினை சுமார் 6 லட்சம் பேர் எழுதியிருந்தனர். தேர்வு காண முடிவு கடந்த 28 ஆம் தேதி வெளியானது. இதில் விஜயமங்கலம் அருகே உள்ள மச்சான்பாளையமத்தை சார்ந்த மது பிரியா 600 க்கு 587.25 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

News March 31, 2024

மறைந்த எம்பி கணேசமூர்த்திக்கு நினைவேந்தல்

image

ஈரோடு மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட அலுவலகத்தில் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் கணேசமூர்த்தி எம்.பி யின் நினைவேந்தல் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதற்கு ஈரோடு மாவட்ட தலைவர் சண்முகவேல் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் திருமூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கணேசமூர்த்தி எம்.பி யின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

News March 31, 2024

கோயிலில் மலைபோல் குவிந்த விறகுகள்

image

அந்தியூரில் மிகவும் பிரசித்தி பெற்ற பத்திரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா ஏப்.3ஆம் தேதி நடைபெறுகிறது. அதில் குண்டம் இறங்குவதற்கு பக்தர்கள் தினம் தோறும் விறகுகளை காணிக்கையாக வழங்கி வருகின்றனர். அவை கோவில் முன்பு மலை போல் குவிக்கப்பட்டுள்ளன. அவற்றைக் கொண்டு 60 அடி நீளத்திற்கு குண்டம் தயார் செய்யப்படும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்குவர் .

News March 30, 2024

முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

image

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு  நடைபெறுகிறது. இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாளை மொடக்குறிச்சி,  சின்னியம்பாளையத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்த முதல்வர் ஸ்டாலினை அமைச்சர் முத்துசாமி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். 

News March 30, 2024

ஈரோடு: 2000 பேருக்கும் தபால் வாக்கு

image

ஈரோடு மாவட்டத்தில், மக்களவை தேர்தலில் பணியாற்றும் அனைத்து போலீசாருக்கும் மொத்தம் 2,050 பேருக்கும் தேர்தல் ஆணையம் மூலம் தபால் வாக்கு செலுத்தும் படிவம் விநியோகம் செய்யப்பட்டது. இதில் விடுமுறையில் உள்ள 50 பேர் தவிர்த்து மீதமுள்ள 2,000 பேருக்கும் தபால் வாக்கு அளிக்கும் படிவம் வழங்கப்பட்டுள்ளது. இதனை போலீசார் தகுந்த ஆவணத்துடன் பூர்த்தி செய்து தேர்தல் பிரிவு போலீசாரிடம் வழங்கப்பட்டது.

News March 30, 2024

ஈரோடு: நாளை முதல்வர் வருகை

image

ஈரோட்டில் திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் நாளை பிரச்சாரம் மேற்கொள்கிறார். முதல்வர் வருகையால் கூட்டத்தில் கலந்துகொள்ள ஏராளமான மக்கள் வருவர், எனவே திமுக நிர்வாகிகள் தொண்டர்களின் வசதிக்காக கூட்டத்திற்கு வருவதற்குரிய வழித்தடத்தையும் தூரம் குறித்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

News March 30, 2024

24 மணி நேரத்தில் 51 புகாா்

image

ஈரோடு மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் விதிமீறல் குறித்து வியாழக்கிழமை(மார்ச்.28)மட்டும் 51 விதிமீறல் புகாா்கள் வந்துள்ளன. கட்டுப்பாட்டு அறையின் இலவச தொலைபேசி எண்ணுக்கு 34 புகாா்களும, சிவிஜில் செயலி மூலம் 17 புகாா்கள் என மொத்தம் 51 புகாா்கள் வந்துள்ளன. இது தொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினா்.

News March 30, 2024

தேர்தலை புறக்கணிப்பதாக வைத்த பேனரால் பரபரப்பு

image

ஈரோடு மாவட்டம் நம்பியூர் வட்டத்தில் கரட்டுப்பாளையம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் காராப்பாடியை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு அரசு வழிகாட்டி மதிப்பீடு இல்லாததால் பல முறை மனுக்கள் கொடுத்தும் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் அப்பகுதி மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக பேனர் வைத்துள்ளனர்.

News March 30, 2024

ஈரோடு: ஏப்ரல் 7 மறக்காதீங்க

image

கங்காபுரம் டெக்ஸ்வேலி ஏப்ரல் 7ஆம் ஆம் தேதி ஒரு வயது முதல் 8 வயது உள்ள குழந்தைகளுக்கு சம்மர் ஜாய் கேம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் ஆடை அலங்கார அணிவகுப்பு, ஓவியம், நடனம், பேச்சு ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளன. முகாமில் கலந்து கொள்ளும் அனைத்து குழந்தைகளுக்கும் தொப்பி பலூன் சிற்றுண்டி ஆகியவை இலவசமாக வழங்கப்பட உள்ளது.

News March 30, 2024

ஈரோடு: ஏப்ரல் 6 கடைசி நாள்

image

தமிழகத்தில் தொடக்க கல்வி பட்டயத்தேர்வு, ஜூன் மற்றும் ஜூலை மாதம் நடைபெற உள்ளது. எனவே இத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தகுந்த மதிப்பெண் சான்றிதழ்களுடன், ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதிக்குள் பெருந்துறை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நேரடியாக சமர்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!