Erode

News April 6, 2024

ஈரோட்டில் 41.2 டிகிரியை தொட்டது வெயில்

image

ஈரோட்டில் வெப்பம் 41.2 டிகிரி செல்சியஸை தொட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்னி நட்சத்திரம் இன்னும் தொடங்காத நிலையில், கோடையின் கடுமையான வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிகளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும், வரும் நாட்களில் 2 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

News April 6, 2024

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 47 அடியாக சரிவு

image

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 47.50 அடியாக சரிந்துள்ளதால் மாதவராய பெருமாள் கோவில் முழுவதும் காட்சியளிக்கிறது. இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறும்போது, பவானிசாகர் அணை நீர்மட்டம் தற்போது 47 அடியாக சரிந்துள்ளதால் மாதவராய பெருமாள் கோவில் வெளியே தெரிகிறது. நீர்மட்டம் 35 அடியாக குறையும் பட்சத்தில் சோமேஸ்வரர், மங்களாம்பிகை கோவில்கள் மற்றும் பீரங்கி திட்டு பகுதிகள் வெளியே தெரியும் என்றனர்.

News April 6, 2024

பதற்றமான சாவடி எண்ணிக்கை வெளியீடு

image

ஈரோடு மக்களவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 172 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

News April 6, 2024

உணவு,தண்ணீரை தேடி அலையும் யானை கூட்டம்

image

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை, மான்கள் உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் கிராமத்துக்குள் வருவதும்,விளை நிலங்களை சேதப்படுத்துவதும், சாலை வரும் வாகனங்களை நிறுத்தி உணவு இருக்கிறதா என்று தேடிவருகிறது.

News April 6, 2024

ஈரோட்டில் இன்று போக்குவரத்து மாற்றம்

image

ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களில் கம்பம் பிடுங்குதல், மஞ்சள் நீர் விழா இன்று நடைபெற உள்ளது. எனவே இன்று மதியம் 2 மணிக்கு ஈரோடு நகரில் சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. இதில் ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில்-பி. எஸ்.பார்க்-ஈஸ்வரன் கோயில் வீதி, ஜி. எச் ரவுண்டானா, ஸ்வஸ்திக் ரவுண்டானா, மணிக்கூண்டு, ஆர்கேவி ரோடு, அக்ரஹாரம் வீதி வழியே இன்று போக்குவரத்து தடை செய்யப்பட உள்ளது.

News April 5, 2024

தாளவாடி அருகே பயங்கர தீ விபத்து

image

தாளவாடி அடுத்து அண்ணா நகர் பகுதியில் இளங்கோ என்பவருக்கு சொந்தமான மட்டை மில் இயங்கி வருகிறது. இன்று மதியம் திடீரென இந்த மட்டை மில்லில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் அங்கிருந்த அனைத்து இயந்திரங்களும் நார்களும் முற்றிலும் எரிந்து நாசமானது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறை வாகனம் வராததால் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.

News April 5, 2024

பாஜக வேட்பாளர் மிரட்டல் – அமைச்சர் கண்டனம்

image

அதிகாரியை மிரட்டிய வீடியோவிற்கு டி.ஆர்.பி.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். ‘அதிகார போதையில் பாஜகவினர் அதிகாரிகள் மட்டுமல்ல, மக்களையே மதிப்பதில்லை. இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்களின் நிலைமை,அதிகாரிகளின் நிலைமை என்னவாகும்? எனது வாகனம் தினந்தோறும் சோதிக்கப்படுகிறது. அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பது நமது கடமை. எந்த அதிகாரியையும் இப்படி மிரட்டுவது ஒருபோதும் சரி அல்ல’ என x தளத்தில் பதிவு செய்துள்ளார்.

News April 5, 2024

பாஜக வேட்பாளர் மீது கலெட்டர் அதிரடி நடவடிக்கை

image

கோபிசெட்டிபாளையத்தில் தனது காரை சோதனை செய்த தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகளுக்கு திருப்பூர் பாஜக வேட்பாளர் ஏ.பி. முருகானந்தம் மிரட்டல் விடுத்த வீடியோ வெளியாகி இருந்தது. இதையடுத்து, திருப்பூர் மாவட்டம் குன்னாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

News April 5, 2024

ஈரோடு: 40 ஆயிரம் பேலட் பேப்பர் அச்சடிக்கும் பணி தீவிரம்

image

வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களுக்கு தெரியும்படி முன் பகுதியில் வேட்பாளர் பெயர் சின்னங்களுடன் கூடிய பேலட் பேப்பர் பார்வைக்கு வைக்க வேண்டி உள்ளதால், 40 ஆயிரம் பேலட் பேப்பர்கள் அச்சடிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 50 சதவீதம் பேலட் பேப்பர்கள் அச்சடிக்கப்பட்டுவிட்டதாகவும், முழுமையாக அச்சடிக்கப்பட்ட பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பொருத்தும் பணி தொடங்கும் என தெரிவித்தனர்.

News April 5, 2024

ஈரோடு : முதல் நாளில் 966 தபால் வாக்குகள் பதிவு

image

ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகள் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி நீங்களாக 5 தொகுதிகளில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து
தபால் வாக்கு சேகரிக்கும் பணி நேற்று தொடங்கியது. முதல் நாளில் 775 முதியவர்கள், 191 மாற்றுத்திறனாளிகள் என 966 பேர் தபால் வாக்குகளை பதிவு செய்தனர். இவை ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது.

error: Content is protected !!