Erode

News April 8, 2024

ஈரோடு அருகே விழுந்து கிடந்த காட்டு யானை

image

சத்தியமங்கலத்தை அடுத்து உள்ள கடம்பூர் வனச்சரகத்திற்குட்பட்ட குரும்பூர் கிராம வனப்பகுதியிலிருந்து நேற்று இரவு யானை ஒன்று தள்ளாடிய நிலையில் நடக்க முடியாமல் விழுந்தது. இன்று காலை அப்பகுதிக்கு சென்ற மக்கள் யானை படுத்திருந்தது கண்டு கடம்பூர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து வனத்துறையினர் மருத்துவ குழுவினருடன் அப்பகுதிக்கு சென்று உடல்நலம் குன்றிய பெண் யானைக்கு சிகிச்சை அளித்தனர்.

News April 7, 2024

50 ஆண்டுகளுக்கு பின் நெகிழ்ச்சி சம்பவம்

image

ஈரோடு, வீரப்பன்சத்திரத்தில் சிக்கய்ய நாயக்கர் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் 1974 முதல் 1977ஆம் கல்வி ஆண்டுகளில் படித்த மாணவர்கள் 50 ஆண்டுகளுக்குப் பின் கல்லூரி வந்து பழைய நினைவுகளை பகிர்ந்து கோல்டன் ஜூப்ளி விழாவை இன்று கொண்டாடினர். இதற்கு கல்லூரி முதல்வர் கமலக்கண்ணன் தலைமை வகித்தார். பின் முன்னாள் மாணவர்களுக்கு நினைவு பரிசை கல்லூரி முதல்வர் வழங்கினார்.

News April 7, 2024

ஈரோடு: 94.74 % தபால் ஓட்டு

image

ஈரோடு மக்களவை தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் 2, 201 முதியோர்களும், 800 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 3, 001 பேர் தபால் மூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்தனர். தபால் ஓட்டு வாக்களிக்க விருப்பம் தெரிவித்த 3, 001 பேரில், கடந்த 3 நாட்களிலும் மொத்தம் 2, 083 முதியோர்கள், 760 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் என மொத்தம்  94. 74 சதவீதம் தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளது.

News April 7, 2024

ஈரோடு: வீட்டுக்குள் துர்நாற்றம்: பரபரப்பு

image

சித்தோடு காளிங்கராயன்நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் கிருஸ்ணா பாய் (68). குடும்ப பிரச்னை காரணமாக, இவரது கணவர் நந்தகுமார் காளிங்கராயன்நகரில் உள்ள வாடகை வீட்டிலும், கிருஷ்ணா பாய், ஜவுளி நகரில் உள்ள வீட்டிலும் தனியாக வசித்து வந்தனர். இரவு 11 மணிக்கு, நந்தகுமார் குடியிருந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. கதவை உடைத்து சென்று பார்த்தபோது, நந்தகுமார் இறந்து கிடந்தார்.

News April 7, 2024

தாளவாடி அருகே யானை அட்டகாசம் 

image

தாளவாடி அருகே திகினாரை கிராமத்தில் நஞ்சப்பர் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்துக்குள் நேற்று இரவு புகுந்த 3 காட்டு யானைகள் 250 க்கும் மேற்பட்ட வாழைகளை , மிதித்தும் தின்றும் சேதாரம் செய்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சேதமடைந்த பயிர்களுக்கு வனத்துறையினர் உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். 

News April 7, 2024

ஈரோட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரசாரம்

image

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக சார்பில் வேட்பாளர் கே.இ.பிரகாஷ் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று  பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இன்று மாலை 4 மணி அளவில் குமாரபாளையத்திலும், 5 மணி அளவில் பி.பெ.அக்ரகாரத்திலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

News April 7, 2024

ஈரோட்டில் சதமடித்த வெயில்

image

தமிழகத்தில் பல இடங்களில் வழக்கத்தை விட ஐந்து முதல் ஒன்பது டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை உயர்ந்துள்ளது. தமிழகம்,புதுச்சேரி,காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவும். நேற்று ஈரோட்டில் அதிகபட்சமாக 105 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. அக்னி நட்சத்திரம் இன்னும் தொடங்காத நிலையில், கோடையின் கடுமையான வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

News April 7, 2024

உங்கள் தொகுதி வேட்பாளர் பற்றி தெரிந்து கொண்டு வாக்களிக்கவும்

image

உங்கள் தொகுதியில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர் முதல் சுயேட்சை வேட்பாளர்கள் வரை அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள், குற்றவழக்குகள், சொத்துமதிப்பு, கல்வித்தகுதி,வழங்கப்பட்ட குற்றத்தண்டனை போன்ற முழுதகவல்களையும் தெரிந்து கொள்ள <>https://affidavit.eci.gov.in/ <<>>என்ற தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து தெரிந்துகொள்ளலாம். அல்லது ப்ளே ஸ்டோரில் KYC என்ற செயலி மூலமும் தெரிந்து கொள்ளலாம்.

News April 7, 2024

தேர்தல் பாதுகாப்பு கலந்தாய்வு கூட்டம்

image

ஈரோட்டில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் அதிகாரிகளுடன் தேர்தல் பாதுகாப்பு கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தேர்தல்
பொது பார்வையாளர் ராஜீவ் ராஜன் மீனா இ.ஆ.ப, காவல் பார்வையாளர் ராம் கிருஷ்ணா சவார்க்கர் இ.கா.ப, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.ஜவகர் இ.கா.ப மற்றும் காவல் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

News April 6, 2024

அழுகிய நிலையில் வீட்டில் இருந்த சடலம்

image

ஈரோடு அடுத்த ஆர்.என்.புதூரை சேர்ந்தவர் நந்தகுமார் (62). இவரது மகன் மோத்தி (44) ஐ.டி.ஊழியர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இவர்கள் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. எனவே அங்குள்ளவர்கள் இன்று சித்தோடு போலீசாருக்கு தெரிவித்தனர். பின் போலீசார் வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது நந்தகுமார் கை, கால்கள் கட்டப்பட்டு சடலமாக இருந்துள்ளார். சித்தோடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!