Erode

News April 10, 2024

ஈரோடு : தேர்தல் புறக்கணிப்பு பேனரால் பரபரப்பு

image

ஈரோடு அருகே சூரம்பட்ட, திரு.வி.க. வீதியில் டாஸ்மாக் கடை (கடை எண் : 3561) உள்ளது. இந்நிலையில் இந்த டாஸ்மாக் கடையை கண்டித்தும், டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தியும் அப்பகுதியினர் அதிகாரிகளிடம் பல முறை தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. எனவே இதனை கண்டித்து வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அப்பகுதியில் மக்கள் பேனர் வைத்துள்ளனர்.

News April 10, 2024

ஈரோட்டுக்கு தனி இரயிலில் வந்த 2000 டன் நெல்

image

ஈரோடு மாவட்ட பொது வினியோக திட்டத்துக்காக நாகப்பட்டினத்தில் இருந்து 2000 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 42 பெட்டிகள் கொண்ட தனி சரக்கு ரயில் மூலம் ஈரோடு இரயில் நிலையத்திற்கு நேற்று வந்தது. பின் நெல் மூட்டைகளை சுமைதூக்கும் தொழிலாளர்கள் இரயிலில் இருந்து இறக்கி லாரிகளில் ஏற்றினர். இந்த நெல் அரவைக்கு அனுப்பப்பட்டு, அரிசியாக்கப்பட்டு ஈரோடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

News April 10, 2024

ஈரோட்டில் நாளை விடுமுறை அறிவிப்பு

image

ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள், ஈரோடு மற்றும் கோபி கூட்டுறவு விற்பனை நிலையம் என 4 இடங்களில் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மஞ்சள் ஏலம் நடைபெறும். இந்நிலையில், வருகின்ற 11 ஆம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, மஞ்சள் மார்க்கெட்டிற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 9, 2024

ஈரோடு: அடிமை இனம் உருவாகிக் கொண்டிருக்கிறது

image

ஈரோடு மக்களவை தொகுதியில் நாதக சார்பில் கார்மேகம் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த சீமான், பாஜகவை கடுமையாக விமர்சித்து பேசினார். அப்போது, “தமிழ் மக்களிடையே அநீதி, லஞ்சம், ஊழல், இயற்கை சுரண்டல் ஆகியவற்றை சகித்துக் கொண்டதால் இங்கே அடிமை இனம் உருவாகி வருகிறது” என்றார்

News April 9, 2024

ஈரோடு அருகே குவிந்த மக்கள்

image

பவானி நகரம் 16 ஆவது வார்டு திருநீலகண்டர் வீதியில் முறையாக குடிநீர் வழங்கப்படாததை குறித்து பலமுறை அப்பகுதியினர் நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்திருந்தனர். பலமுறை கோரிக்கை அளித்தும் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.இதனால் ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் இன்று காலை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News April 9, 2024

வனத்துறையினர் கடும் எச்சரிக்கை

image

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதிகளில் வெயிலின் காரணமாக கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி சாலை ஓரங்களில் உலாவுகிறது. எனவே வனப்பகுதி சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும். வன விலங்குகளுக்கு தொந்தரவு தர கூடாது. சாலை ஓரங்களில் உள்ள வன விலங்குகளை புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

News April 9, 2024

ஈரோட்டில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து ரம்ஜான் மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாளை (ஏப்.10) முதல் 5 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதன்படி ஈரோட்டில் இருந்து கோவை, திருச்சி, மதுரை, சென்னை, திருச்செந்தூர், இராமேஸ்வரம், திருவண்ணாமலை, பழனி போன்ற ஊர்களுக்கு கூடுதலாக 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என ஈரோடு மண்டல பொதுமேலாளர் சொர்ணலதா தெரிவித்துள்ளார்.

News April 8, 2024

அந்தியூர்: ஓய்வெடுக்கும் அம்மன்

image

அந்தியூர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் பங்குனி குண்டம் மற்றும் தேர் திருவிழாவை முன்னிட்டு அந்தியூர் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை ஆகிய நான்கு நாட்கள் தேரோட்டம் நடைபெற்றது. இன்று நிலை நிறுத்தப்பட்டது. தேரில் பவனியில் மக்களுக்கு அருள் பாவித்த பிறகு இன்று தேர் நிலை சேர்ந்து பின்னர் ஆலயம் வந்து அம்பாள் ஒய்வு எடுக்கும் காட்சி வெளியானது. 

News April 8, 2024

ஈரோடு: பலத்த சூறைக்காற்று

image

தாளவாடி அருகே பாரதிபுரம் கிராமத்தில் குப்புசாமி என்பவருக்கு சொந்தமான வாழைத்தோட்டத்தில் இன்று பலத்த சூறைக்காற்று வீசியது. இதில், அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 300க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தது. பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகள், உரிய நிவாரணம் வழங்க கோரி அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

News April 8, 2024

ஈரோடு : ஏப்ரல் 15க்குள் இணையதள வசதி

image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 2,222 வாக்குச்சாவடிகளில், 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த பதற்றமான வாக்குச் சாவடிகள் மற்றும் 1,125 வாக்குச் சாவடிகளில் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. மேலும் வாக்குச் சாவடிகளில் இணையதள வசதிகள் ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் ஏற்படுத்தப்படும் என ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!