Erode

News March 18, 2024

ஈரோடு: ரூ.1 லட்சம் பறிமுதல் செய்த அதிகாரிகள்

image

அந்தியூர் அருகே புதுப்பாளையம் படவே காட்டூர் பகுதியில் தேர்தல் அதிகாரி முத்து மற்றும் போக்குவரத்து போலீசார் மாதேஸ்வரன் கொண்ட குழுவினர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது பூலாம்பட்டியை சேர்ந்த ராஜா(22) என்பவர் தனது லாரியில் ரூபாய் 1,02,750 எடுத்து சென்றார். அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டது.

News March 18, 2024

ஈரோடு: 2000 டன் நெல் வருகை

image

ஈரோடு மாவட்ட பொது வினியோக திட்டத்துக்காக, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து 2,000 டன் நெல், தனி சரக்கு இரயிலில், நேற்று ஈரோடு வந்தது. இதனை நுாற்றுக்கணக்கான லாரிகளில் ஏற்றி நெல் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின் இவை அரைக்கப்பட்டு புழுங்கல் அரிசியாக மாற்றப்பட்டு, மாவட்டத்தில் உள்ள பொது வினியோக திட்ட குடோன்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

News March 18, 2024

ஈரோடு : 108 ஆம்புலன்சில் “குவா குவா”

image

அந்தியூர் அடுத்த பர்கூர் மலை கிராமம் – தம்முரெட்டியை சேர்ந்த தம்பதி முருகேஷ் – சிந்து (22). நிறைமாத கர்ப்பிணியான சிந்துவிற்கு, நேற்று பிரசவ வலி ஏற்பட 108 ஆம்புலன்ஸ் மூலம் பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் வழியில் பிரசவ வலி அதிகமானது. பின் 108 வாகனத்தை சாலை ஓரத்தில் நிறுத்தி மருத்துவ நுட்புனர் சிந்துவிற்கு பிரசவம் பார்த்தார். இதில்
சிந்துவிற்கு ஆண் குழந்தை பிறந்தது.

News March 17, 2024

ஈரோடு மக்களவை தொகுதியில் 15 இலட்சம் வாக்காளா்கள்

image

ஈரோடு மக்களவை தொகுதியில் மொத்தம் 15,28,426 வாக்காளா்கள் உள்ளனா். இதில் ஈரோடு மக்களவை தொகுதிக்கு உட்பட்ட குமாரபாளையம் சட்டப் பேரவைத் தொகுதியில் 2,55,717 பேர், ஈரோடு கிழக்குத் தொகுதியில் 2,30,470 பேர், ஈரோடு மேற்கு தொகுதியில் 2,95,773 பேர், மொடக்குறிச்சி தொகுதியில் 2,27,966 பேர், தாராபுரம் தொகுதியில் 2,58,819 பேர், காங்கயம் தொகுதியில் 2,59,681 பேர் என மொத்தம் 15,28,426 வாக்காளா்கள் உள்ளனா்.

News March 17, 2024

ஈரோடு: வட மாநில வாலிபர் சடலம் கண்டெடுப்பு

image

ஈரோடு ஸ்டோனி பாலம் அருகே மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. அங்கு, இன்று காலை 40 வயது மதிக்கத்தக்க வட மாநில வாலிபர் ஒருவர் உடலில் காயங்களுடன் நிர்வாணமாக இறந்து கிடந்தார். தகவலறிந்து வந்த ஈரோடு சூரம்பட்டி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அடித்து கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 17, 2024

குறைதீர் கூட்டம் ரத்து – ஆட்சியர்

image

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் உள்ளிட்ட அனைத்து குறைதீர் கூட்டங்களும் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என ஈரோடு ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News March 17, 2024

10 இடங்களில் கைத்தறி பூங்கா

image

ஈரோடு மாவட்டத்தில் 10 இடங்களில் அரசு நிதி உதவியுடன், சிறிய அளவிலான கைத்தறி பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் 100 கைத்தறிகள் அமைத்து அதற்கு தேவையான அனைத்து வசதிகளும் தயார் செய்யப்பட்டு வருகிறது. இதில் பயனடைய விரும்புவோர் www.loomworld.in என்ற இணையதளத்தில் வரும் மார்ச்.30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்

News March 17, 2024

ஈரோடு: தேர்தல் பறக்கும் படை வாகனங்கள் தொடக்கம்

image

தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல்.19 இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இந்நிலையில், ஈரோடு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேர்தல் பறக்கும் படையினரின் வாகனத்தை ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான ராஜ கோபால் சுன்கரா தொடங்கி வைத்தார்.

News March 16, 2024

ஈரோடு: அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள்

image

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையத்தில் மூப்பனாரின் சிலை உள்ளது. இன்று மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மூப்பனாரின் சிலை துணி கொண்டு மூடப்பட்டது. மேலும் பல இடங்களில் கட்சி கொடிக்கம்பங்களை கட்சியினர் அகற்றி வருகின்றனர்.

News March 16, 2024

கோபி அருகே தார் சாலை பணிக்கு பூமி பூஜை

image

கோபி தொகுதிக்கு உட்பட்ட கோட்டுபுள்ளம்பாளையம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.16 லட்சம் மதிப்பிலான தார் சாலை அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். உடன் யூனியன் சேர்மன் மௌதீஸ்வரன், மாவட்ட கவுன்சிலர் அனுராதா, ஊராட்சி தலைவர் முத்துக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!