India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம் முழுவதும் இன்று காலை வரை ரூ.5 கோடியே 7 லட்சத்து 93 ஆயிரத்து 295 மதிப்பிலான பணம் மற்றும் பரிசு பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதில் உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டு ரூ.2 கோடியே 53 லட்சத்து 66 ஆயிரத்து 593 ரூபாய் திருப்பி வழங்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீஸார், ஆயுதப்படை போலீஸார் உள்ளிட்டோர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதனைத்தொடர்ந்து தேர்தல் பணியில் ஈடுபடும் சீருடை பணியாளர்களான ஈரோடு மாவட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஆயுதப்படை போலீஸாருக்கு வருகின்ற 15ஆம் தேதி தபால் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தபால் வாக்களிக்க ஈரோட்டில் வேளாளர் கல்லூரி, கோபியில் ஒரு இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது
ஆசனூர் வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு தண்ணீர் தேடி யானைகள் அலைந்து வருகிறது. சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இன்று மதியம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை கூட்டம் உணவு தேடி சாலையில் உலா வந்தது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி சமத்துவ நாள் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் அனைத்து துறை அலுவலர்களும் எடுத்துக்கொண்டனர். மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் முகமது உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுமித்ரா உத்தரவின் பேரில் வருவாய் துறையினர் இன்று திருப்பூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட அந்தியூர் தொகுதி, கடுக்காம்பாளையம் கிராமத்தில் உள்ள கடைகள் விவசாய நிலங்களில் வேலை செய்யக்கூடிய விவசாயிகள் பொதுமக்கள் அனைவரும் வரும் 19ஆம் தேதி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் திருவிழா அழைப்பிதழ் வழங்கினர்.
தமிழ்நாடு காவல்துறை மூலம் பொதுமக்கள் காவல்துறையின் உதவியை விரைந்து பெறும் வகையில் 60 க்கும் மேற்பட்ட சிறப்பு அம்சங்களுடன் ‘காவல் உதவி’ செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் கூகுல் ஃப்ளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். குறிப்பாக பெண்கள் ஆபத்து நேரங்களில் உடனடியாக காவல்துறையின் உதவியை பெறுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது என ஈரோடு மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பவானியை அடுத்த காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பத்மினி. இவர் நேற்று குமாரபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக பவானி புதிய பஸ் நிலைய பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே பேருந்திற்காக காத்துக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி பத்மினி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பத்மினி உயிரிழந்தார். இதுபற்றி பவானி போலீசார் விசாரித்து வருகின்றார்.
ஈரோடு, வ.உ.சி பூங்கா பகுதியில், ரேஷன் அரிசி கடத்தி செல்வதாக ஈரோடு மாவட்ட குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறை போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த ஆம்னி வேனில் 660 கிலோ ரேஷன் அரிசி கடத்தியது தெரிந்தது. ரேஷன் அரிசி கடத்திய சுரேஷ் என்பவரை போலீசார் கைது செய்து, ரேஷன் அரிசி மற்றும் வேனை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு சூரம்பட்டி திரு.வி.க. வீதியை சேர்ந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடையை அகற்றாவிட்டால் மக்களவை தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக தங்கள் பகுதியில் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான், டாஸ்மாக் கடையை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினர்.
மக்களவை தேர்தலையொட்டி தமிழ்நாடு -கர்நாடக எல்லைப் பகுதியான தட்டைத் மற்றும் பர்கூர் ஆகிய பகுதிகளில் ஆயுதம் தாங்கிய போலீசார் மற்றும் ராணுவத்தினர் சோதனை சாவடியில் தீவிர கண்காணிப்புக்கு பின்பு அனைத்து வாகனங்களும் இரு மாநில எல்லைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. 24 மணி நேரமும் வாகனங்களை புகைப்படம் எடுத்து அதன் விபரங்களை பதிவு செய்து கொண்டு அனுப்பி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.