India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. அதைத் தொடர்ந்து பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (15.10.24) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என செய்தி ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. தற்போது TN Fact Check தற்போது சமூக வலைதளங்களில் பரவும் செய்தி எடிட் செய்து வெளியாகியுள்ளதாக அறிவித்துள்ளது.
ஈரோட்டில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், வானிலை ஆய்வு மையம் மூன்று நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், பவானி ஆற்றில் எந்நேரத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட வாய்ப்புள்ளதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (15.10.2024) (ம) நாளை (16.10.2024) இரு தினங்களுக்கு சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி கொடிவேரி அணைக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் மழை, வெள்ளம் தொடர்பான புகார்களை தெரிவிக்க 1077, 0424-2260211 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் தொடர்புகொள்ளலாம். மேலும் ‘தமிழ்நாடு அலர்ட்’ செயலி மூலம் வடகிழக்கு பருவமழை பாதிப்பு குறித்த அறிவிப்புகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம் என ஈரோடு கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மாலை 6 மணி முதல் மழை பெய்து வருகிறது. இதில் ஈரோடு நகர், திண்டல், சூரம்பட்டி, வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளைம், செங்கோடம்பள்ளம் என பரவலாக மழை பெய்தது. மாலை தொடங்கிய மழை நின்ற போதும் தொடர்த்து தூரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. மேலும் குளிர்ந்த சீதோஷன சூழல் உருவானது.
மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கான 10வது சப்-ஜூனியர் மாணவ, மாணவியர்களுக்கான மென் பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் 2 நாட்கள் நடைபெற்றது. மாணவர் பிரிவில் 15 அணிகளும் மாணவியர் பிரிவில் 12 அணிகளும் பங்கேற்றன. ஆடவர் பிரிவில் சேலம் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. மகளிர் பிரிவில் இறுதிப் போட்டியில் திருச்சியை வென்று ராணிப்பேட்டை அணி சாம்பியன் பட்டம் பெற்றது.
சத்தி-கோபி சாலை, மீன்கடை அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக ஆம்னி வேனில் வந்துள்ளனர். வேனை ஆஸ்பத்திரி வளாகத்தில் நிறுத்திவிட்டு டாக்டரை பார்க்க உள்ளே சென்றுவிட்டனர். டிரைவர் வேன் முன் போன் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென வேனிலிருந்து புகை வெளியேறி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதைக் கண்ட டிரைவர் சத்தம் போட்டுள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து அணைத்தனர்.
வெள்ளித்திருப்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கொமரயானூர்காலனி வளைவில் 7 பேரை ஏற்றிக்கொண்டு வந்த 4 சக்கர மினி ஆட்டோ மீது எதிரே வந்த கார் மோதியதில் பரணிதரன், சாந்தி, விஜயன், தங்கா, விஜயன், நிர்மலா தேவி, மோகன்ராஜ், தினேஷ், நாகம்மாள், ஆனந்த் ஆகியோர் காயமடைந்தனர். 7 பேர் மேட்டூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். உயிர் சேதம் எதுவும் இல்லை. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகை நெருங்கி வருகிறது. இதை ஒட்டியும், நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் ஈரோடு முக்கிய வீதிகளான ஆர்.கே.வி.ரோடு, பார்க் சாலை, மணிக்கூண்டு போன்ற பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் போக்குவரத்தும் ஸ்தம்பித்தது. போக்குவரத்து காவல் துறையினர் வாகனங்களுக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தல்கள் வழங்கி போக்குவரத்தை சீர் செய்தனர்.
ஈரோடு மாநகரில் கடந்த 11ஆம் தேதி ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பூஜை முடிந்து பூக்கள், வாழை மரக்கன்றுகள், பூஜைக்காக சுத்தம் செய்யப்பட்ட தேவையில்லாத கழிவு பொருள்களை சாலையோரங்களிலும், வீதிகளிலும் பொதுமக்கள் வீசியிருந்தனர். அதனை சுத்தம் செய்யும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர், ஒரே நாளில் 300 டன் அளவு குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.
ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விடுமுறை முடிந்து நாளை (அக்.14) மீண்டும் மக்கள் பணிக்கும், மாணவர்கள் பள்ளி-கல்லூரிக்கும் செல்ல வேண்டும். எனவே விடுமுறைக்கு சொந்த ஊரான ஈரோடு வந்த மக்கள் திரும்ப வெளியூர் பணிக்கும், வெளியூர் சென்ற நபர்கள் இன்று மாலை ஈரோடு வந்தனர். இதனால் ஈரோடு பேருந்து மற்றும் இரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
Sorry, no posts matched your criteria.