India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு தொகுதி மக்களவை உறுப்பினரும் மதிமுகவின் மூத்த தலைவருமான அ.கணேசமூர்த்தி கடந்த 28ஆம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில், இன்று
ஈரோடு – பெரியார் நகர் பகுதியில் உள்ள மறைந்த ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி இல்லத்திற்கு சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ , அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின் கணேசமூர்த்தி படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றம் இன்று (ஏப்.15) தொடங்கியது.
பவானியில் பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று (ஏப். ,15) காலை 7 மணி அளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. சங்கமேஸ்வரர் சன்னதியில் உள்ள கொடிக்கம்பத்தில் நந்தி உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது.
ஈரோடு மக்களவை தொகுதியில் 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 2843 பேர் மற்றும் ராணுவத்தில் உள்ள 3 பேர் தபால் வாக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த வாரம் வாக்கு சாவடி அலுவலர்களுக்கு நடந்த 2 ஆம் கட்ட பயிற்சியின் போது 1468 பேர் தபால் வாக்கு பதிவு செய்துள்ளனர். ஈரோடு மக்களவை தொகுதியில் மட்டும் இதுவரை 4314 பேர் தபால் வாக்கு பதிவு செய்துள்ளனர் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டம் பவானி சித்தோடு அருகே உள்ள கங்காபுரம் பிளாஸ்டிக் கம்பெனியில் பணியாற்றும் பீகார் மாநிலத்தை சேர்ந்த அஜய் யாதவ் (38) என்பவர் டெக்ஸ்ட் வேலி அருகே சாலையை கடக்க முயன்ற போது மோட்டார் சைக்கிள் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். சித்தோடு போலீஸார் அவரது உடலை மீட்டு பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் மக்களவைத் தோ்தலுக்கு 8 சட்டமன்ற தொகுதிகளிலும் 2222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவுக்கான பணி நடந்து வருகிறது. இந்நிலையில் வாக்காளா்களுக்கு சிறந்த அனுபவத்தை அளிக்க 8 தொகுதிகளிலும் தலா ஒரு வாக்குச்சாவடி மையம் மற்றும் பெண்கள் மட்டும் வாக்களிக்கும் வகையில் 8 வாக்குச்சாவடி மையம் என 16 வாக்குசாவடி மையம் அமைக்கப்பட உள்ளது என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
பி ஆர் அம்பேத்கர் அவர்களின் 133வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இலவச ரத்ததான முகாம் ஈரோடு தலைமை மருத்துமனையில் நடைபெற்றது. இதில் பல இளைஞர்கள் கலந்து கொண்டு உதிரம் வழங்கினார்கள். பிறகு உதிரம் வழங்கியவர்களுக்கு பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் வாக்குச்சாவடியில் வாக்காளர் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். அவ்வாறு வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, இந்திய கடவுச்சீட்டு, புகைப்படத்துடன் கூடிய வங்கி, அஞ்சலக கணக்குப் புத்தகங்கள் போன்ற 12 வகை ஆவணங்களை பயன்படுத்தலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் இருந்து குஜராத் மாநிலம் சூரத் – புகா் இரயில் நிலையமான உத்னாவுக்கு நாளை (ஏப்.15) ஒருவழி சிறப்பு இரயில் (எண்: 06099) இயக்கப்படவுள்ளது. ஈரோட்டில் இருந்து அதிகாலை 4.15 மணிக்கு புறப்படும் இரயில் சேலம், பங்காருப்பேட்டை,கிருஷ்ணராஜபுரம், ராய்ச்சூா், சோலாப்பூா், அஹமத்நகா், நந்தூா்பாா் வழியாக, ஏப்ரல் 16 மாலை 4.15 மணிக்கு உத்னா சென்றடையும் என தெற்கு இரயில்வே சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில், நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. எனவே ஏப்ரல் 17, 18, 19ம் தேதிகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ம் தேதி ஆகிய 4 நாள்கள் ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக்கடைகள், அதனுடன் இயங்கும் பார்கள் மூடப்படும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுங்கரா நேற்று செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில், 2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களிடம் தேர்தலில் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்தியூர் அடுத்த வெள்ளிதிருப்பூர் பகுதியில், நேற்று கிராம நிர்வாக அலுவலர் தமிழ்ச்செல்வி, தாம்பூல தட்டில் தேர்தலுக்கான அழைப்பிதழை வைத்து, கட்டாயம் வாக்களிக்குமாறு வாக்காள பெருமக்களுக்கு அழைப்பு விடுத்தார்.
Sorry, no posts matched your criteria.