Erode

News April 17, 2024

ரூ.6.87 லட்சத்திற்கு ஏலம்

image

அந்தியூர் அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேளாண் விளை பொருட்கள் ஏலம் நேற்று நடைபெற்றது. இதில் 1,690 தேங்காய்கள் ரூ.14,704க்கும், 70 மூட்டை தேங்காய் பருப்பு ரூ.2,19,008க்கும் ஏலம் போனது. 34 மூட்டை நெல் ரூ.50,205க்கும், 129 மூட்டை நிலக்கடலை ரூ.8,02,329க்கும், 8 மூட்டை எள் ரூ.60,397க்கும், 34 மூட்டை மக்காச்சோளம் ரூ.41,247க்கும் என வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.6,87,890க்கு ஏலம் போனது.

News April 16, 2024

ஈரோடு: இன்று கடைசி நாள்

image

ஈரோடு மாவட்டத்தில், மக்களவை தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு, ஈரோடு கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டடத்தில் கடந்த 13 மற்றும் 14ஆம் தேதி தபால் வாக்கு பதிவு நடந்தது. இதில் 2,181 பேர் தபால் வாக்களித்தனர். இந்நிலையில், தபால் வாக்களிக்காமல் விடுபட்டவர்களுக்காக இன்று (16ம் தேதி), ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் தபால் வாக்கு பதிவுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு தபால் வாக்கு செலுத்தி வருகின்றனர்.

News April 16, 2024

ஈரோடு: 75 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

மக்களவை தேர்தலை முன்னிட்டு, ஈரோட்டில் சொந்த ஊர்களுக்கு மக்கள் சென்று வாக்களிக்க 75 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதன்படி, ஈரோட்டில் இருந்து நாளை (17ஆம் தேதி) மற்றும் 18ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் நாமக்கல், கரூர், சேலம், கோவை, திருச்சி, மதுரை, போன்ற ஊர்களுக்கு 75 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஈரோடு மண்டல பொதுமேலாளர் சொர்ணலதா தெரிவித்துள்ளார்.

News April 16, 2024

ஈரோடு: அனைத்தும் தயார்

image

ஈரோடு மக்களவை தொகுதியில் 146 மண்டலங்களில் 1,688 வாக்குச்சாவடிகள் உள்ளன. மொத்தம் 15.38 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் பணிக்காக 2,325 மத்திய பாதுகாப்பு படையினரும், 1,571 உள்ளூர் போலீசாரும் என மொத்தம் 3 ஆயிரத்து 896 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது என  ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News April 16, 2024

கதாநாயகன் உதயநிதி தான்

image

ஈரோட்டில் இன்று கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்த தேர்தலின் கதாநாயகன் உதயநிதி தான். அவரை தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்த தேர்தலோடு மோடி அண்ணாமலை போன்றவர்கள் காணாமல் போய்விடுவார்கள். தமிழகத்தில் பழைய வாக்கு சீட்டு முறையை கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்” என்று அவர் தெரிவித்தார்.

News April 16, 2024

கருப்பட்டி ரூ. 4. 85 லட்சத்திற்கு ஏலம்

image

ஈரோடு மாவட்ட கூட்டுறவு கருப்பட்டி விற்பனை சம்மேளனம் குன்னத்தூரில் இயங்கி வருகிறது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் தென்னங்கருப்பட்டி வரத்து 2000 கிலோவாக கொண்டுவரப்பட்டு கிலோ ஒன்றுக்கு ரூ.150 வீதம் ரூ. 300000 க்கு ஏலம் போனது. பனங்கருப்பட்டி வரத்து 1000 கிலோவாக கொண்டுவரப்பட்டு கிலோ ஒன்றுக்கு ரூ.185 வீதம் ரூ. 185000 க்கும் என மொத்தம் ரூ. 485000 க்கு ஏலம் போனது.

News April 16, 2024

ஈரோடு அருகே பேனரால் பரபரப்பு

image

ஈரோடு கொல்லம்பாளையம் பண்ணை நகர் பகுதியில் நேற்று சாலையோரம் அப்பகுதி மக்கள் மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக பேனர் வைத்துள்ளனர். அந்த பேனரில் இங்கு தனிநபர் ஒருவர் பொதுவழிப் பாதையை ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இது குறித்து பல முறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News April 16, 2024

அந்தியூரில்: ரூ.77 ஆயிரம் பறிமுதல்

image

அந்தியூர் அருகே பிரம்மதேசம் பகுதியில் நேற்று தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரி பிரபு தலைமையில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்தியூரில் இருந்து ஆப்பக்கூடல் சென்ற சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அம்மாபேட்டையை சேர்ந்த ஜாகிர் உசேன் (36), உரிய ஆவணங்களின்றி 77 ஆயிரத்து 40 ரூபாய் வைத்திருந்ததை கைப்பற்றி உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி கவியரசுவிடம் ஒப்படைத்தனர்.

News April 15, 2024

குடுகுடுப்பைக்காரர் வேடத்தில் நூதன பிரச்சாரம்

image

ஈரோடு இளைஞர் அணி நிர்வாகி முஹம்மத் அர்ஷத் கான் தலைமையில், சேலம் திமுக பேச்சாளர் சதீஷ்குமார் குடுகுடுப்பைக்காரன் வேடமணிந்து நூதன முறையில் ஜக்கம்மாள் சொல்றா… ஜக்கம்மாள் சொல்றா… இந்த தொகுதியில் மு.க.ஸ்டாலின் சொல்கின்ற எம்.பிக்கு வாக்களியுங்கள் ஜக்கம்மாள் சொல்றா… ஜக்கம்மாள் சொல்றா என வாக்கு சேகரித்தார். 

News April 15, 2024

அரசு அலுவலர்களுக்கு விளக்க பயிற்சி

image

சித்தோடு அடுத்த அரசினர் பொறியியல் கல்லூரியில் மண்டல அலுவலர்கள் மற்றும் வாக்கு சேகரிப்பு மைய அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் இதர பொருட்களை தேர்தல் நாளன்று பாதுகாப்பாக வைக்கும் பணிக்கான பயிற்சி இன்று நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சியில், தேர்தல் நாளன்று மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

error: Content is protected !!