Erode

News April 19, 2024

அம்மாபேட்டை: 6 மணிக்கு மேல் வாக்கு பதிவுக்கு அனுமதி

image

ஈரோடு மாவட்டத்தில் இன்று மாலை 6 மணியுடன் பல்வேறு பகுதிகளில் வாக்கு பதிவு நிறைவு பெற்றது. இந்நிலையில், ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அடுத்த ஊமாரெட்டியூர் வாக்கு சாவடி எண் 28ல் 6 மணிக்கு முன்னர் 70க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்தனர். இவர்களுக்கு வாக்குச்சாவடி தேர்தல் நடத்தும் அலுவலர் டோக்கன் வழங்கி வாக்களிக்க அனுமதியளித்தார்.

News April 19, 2024

ஈரோடு: 3 பெண்களின் ஒற்றுமை

image

ஈரோடு, கச்சேரி வீதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில், பிரியதர்ஷினி, ஜவஹாரா ருக்கையா , இலக்கிய சம்பத் ஆகிய இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த மூன்று இளம் பெண்கள் முதல் முறையாக ஆர்வமுடன் வாக்களிக்க வந்திருந்தனர். இவர்கள் வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்திய நாட்டின் பாரம்பரியத்தை பின்பற்றி, ஒற்றுமையாக மூவரும் ஒன்றாக வந்து வாக்களித்ததாக தெரிவித்தனர்.

News April 19, 2024

பொதுமக்கள் கடும் அவதி

image

ஈரோட்டில் இருந்து அந்தியூர் சொல்லுவதற்கு சுமார் 1.30 மணி நேரம் பேருந்துகள் இல்லாத காரணத்தால் பொது மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். ஈரோட்டில் இருந்து 1.20 மணிக்கு இயக்கப்படும் அந்தியூர் வழியாக சத்தி வரை செல்லும் அரசு பேருந்தும் 1.50 மணிக்கு அந்தியூர் வழியாக கோவிலூர் செல்லும் அரசு பேருந்தும் 2.15 மணிக்கு பழனியில் இருந்து ஈரோடு வழியாக அந்தியூர் செல்லும் பேருந்தும் இயக்கப்படவில்லை.

News April 19, 2024

ஈரோடு : மலைக்கிராமங்களில் நிழல் வாக்குச்சாவடிகள்

image

ஈரோடு மாவட்டத்தில் மலைப்பகுதியான தாளவாடி, கடம்பூர், பர்கூர் மலைப்பகுதிகளில் 15 வாக்குச்சாவடிகள் நிழல் வாக்குச்சாவடிகளாக உள்ளன. இங்கு இணைய வசதிகள் இல்லாததால், வெப்-கேமராக்களுக்கு பதில், வீடியோ பதிவு செய்யப்பட்ட உள்ளது. சோதனை வாக்குப்பதிவு முதல் தேர்தல் முடிந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கும் வரை முழுமையாக வீடியோ பதிவு செய்யப்படும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

News April 19, 2024

சொந்த ஊரில் வாக்களித்த முன்னாள் நீதிபதி

image

அம்மாபேட்டை அருகே உள்ள காடப்பநல்லூர் ஊராட்சியில் கிராம ஊராட்சி சேவை மையத்தில் உள்ள வாக்குசாவடியில் முன்னாள் உச்சநீதிமன்ற  முன்னாள் தலைமை நீதிபதியும் கேரள முன்னாள் கவர்னருமான பி. சதாசிவம் தனது மனைவி சரஸ்வதியுடன் வந்து வாக்களித்தார். பின்னர் அவர் கூறுகையில் “மக்களவை தேர்தலிலுக்காக முதல்முறையாக சொந்த கிராமத்தில் வாக்களிப்பது மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது” என்றார்

News April 19, 2024

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும்

image

ஈரோடு, கச்சேரி வீதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., ஈவிகேஎஸ் இளங்கோவன், வாக்களித்தார். பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும். டெல்லியில் இந்திய கூட்டணி ஆட்சி வரும். மேலும் மோடி மீண்டும் பிரதமராக வரக்கூடாது என மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பார்கள் என தெரிவித்தார்.

News April 19, 2024

84 வயது முதியவர் வீல்சேர் வந்து வாக்களித்தார்

image

திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட அந்தியூர் சட்டமன்றத் தொகுதி அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் அந்தியூர் பகுதியைச் சேர்ந்த சீதாராமன் வயது 84 என்பவர் தனது ஜனநாயக கடமை ஆற்றுவதற்காக இன்று மதியம் வீல்சேரில் வந்து தனது ஜனநாயக கடமையாற்றினார். அவர், “தான் இதுவரை நடைபெற்ற அனைத்து தேர்தலிலும் வாக்களித்துள்ளதாக பெருமையுடன் தெரிவித்தார்.

News April 19, 2024

வரிசையில் நின்று வாக்களித்த ஈரோடு ஆட்சியர்

image

ஈரோடு மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் – 2024, வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இதற்காக மாவட்டம் முழுவதும் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட, சம்பத்நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில், ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா வரிசையில் நின்று வாக்களித்தார்.

News April 19, 2024

ஈரோடு மாவட்டத்தில் 36 அதிவிரைவு படை குழு

image

ஈரோடு மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலையொட்டி, 36 அதிவிரைவுப் படை (கியூஆர்டி) குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 36 குழுவில் ஒரு ஆய்வாளர், 3 போலீசார் என 144 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவினர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு, ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக அங்கு விரைந்து சென்று நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

News April 19, 2024

வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா: 24 புகாா்கள் பதிவு

image

ஈரோடு மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிமுறை அமலானது முதல் நேற்றுவரை தேர்தல் விதிமீறல் தொடர்பாக 171 புகாா்கள் வந்துள்ளன. மேலும் வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் செய்யப்பட்டது தொடா்பான வந்த 24 புகாா்கள் பறக்கும்படை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட இடங்களில் விசாரணை நடத்தியதாகவும், விதிமீறல் நடந்த இடத்தில் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!