India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோபி அடுத்த டி.என்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி பூமணி (29). கர்ப்பிணியான பூமணிக்கு நேற்று இரவு பிரசவ வலி ஏற்பட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பூமணிக்கு பிரசவ வலி அதிகமானது. எனவே 108 வாகனத்தை சாலை ஓரம் நிறுத்தி மருத்துவ உதவியாளர் பூமணிக்கு பிரசவம் பார்த்தார். இதில் பூமணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இந்நிலையில் நேற்று முதல் தேர்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவை தேர்தல் ஆணையம் கலைத்தது. ஆனால், கர்நாடகாவில் இன்னும் தேர்தல் முடியாததால் தமிழக எல்லையான அந்தியூர் அடுத்த பர்கூர் மற்றும் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபடுவார்கள் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் இன்று மகாவீர் ஜெயந்தி மற்றும் மே 1ம் தேதி மே தினம் ஆகிய தினங்களை முன்னிட்டு, மது விற்பனை இல்லாத நாளாக அனுசரிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே ஈரோடு மாவட்டத்தில் நாளை மற்றும் மே 1ம் தேதி, அரசு மதுபான கடைகள் அதனுடன் இயங்கும் பார்கள் ஆகியவை மூடப்பட்டிருக்கும் என ஈரோடு கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா, இன்று செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மக்களவை தேர்தலில், பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான சித்தோடு – ஈரோடு அரசினர் பொறியியல் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு, இன்று பாதுகாப்பு இருப்பறையில் வைத்து, சீல் வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் தேர்தல் பொது பார்வையாளர் ராஜீவ் ரஞ்சன் மீனா, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கராவுடன் அனைத்து வேட்பாளர்கள் பங்கேற்றனர்.
தாளவாடி சுற்று வட்டாரப் பகுதிகளில் இன்று மதியம் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது அப்போது, காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் பனக்கள்ளி கிராமத்தில் சாலை ஓரத்தில் இருந்த மரம் முறிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அவ்வழியாக வாகனங்கள் எதுவும் சொல்ல முடியாமல் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாக திம்பம், ஹசனூர் வன பகுதிக்குள் செல்கிறது. கடந்த சில நாட்களாக வனவிலங்குகள் போதிய உணவும், தண்ணீரும் இன்றி காட்டை விட்டு சாலையோரங்களில் தென்படும் காட்சி அதிகரித்துள்ளது. இந்த சூழலில் விலங்குகளை அச்சுறுத்தும் வகையில் புகைப்படம் எடுப்பது மற்றும் விலங்குகளுக்கு உணவளிப்பதற்க்கு வனத்துறை தடை விதித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் நெய்தாளபுரம் கிராமத்தில் இன்று காலை காட்டு யானை தாக்கியதில் காளம்மா (70) என்ற மூதாட்டி உயிரிழந்தார். உடலை கைப்பற்றி தாளவாடி வனத்துறை மற்றும் ஆசனூர் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றன. மலைப்பகுதியில் பட்டப்பகலில் காட்டு யானை தாக்கி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நேற்று செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், தொகுதி முழுவதும் வாக்குப்பதிவு தொடங்கிய பின்பு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் 1, கட்டுப்பாட்டு இயந்திரம் 2, வி.வி.பேட் இயந்திரம் 7 மட்டுமே பழுதாகி இருந்தது. அவை உடனடியாக மாற்றப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியதாக மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் விடுமுறையில் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், ஈரோடு – சூரம்பட்டி பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ஈரோடு தெற்கு போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. எனவே போலீசார் சோதனை செய்ததில் வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த குப்புசாமி (63) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 40 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே, தமிழ்நாடு அளவில் முதல் முறையாக ஈரோட்டில் 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. மேலும் கடந்த 2 மாதங்களாக வெயில் குறையாமல் நீடித்து வருகிறது. இதனால் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அதிகபட்சமாக 107.6 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியிருந்தது. இந்நிலையில் இன்று தமிழகத்திலேயே அதிகபட்சமாக, 109.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.