Erode

News April 25, 2024

பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு

image

பவானி மூன்ரோட்டிலுள்ள முனியப்பன் கோவிலில் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து தயாரிக்கப்படும் காளமாடு கண்ணுபட்டது என்ற சினிமா பட பூஜை விழா இன்று
நடந்தது. அந்தியூர், கள்ளிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் படமாக்க திட்டமிடப்பட்டு எடுக்கப்பட்டு வருகிறது. இதில் கதாநாயகனாக அறிமுகமாகும் அச்சு, கதாநாயகி தேஜாஸ்ரீ இருவரும் புதுமுகங்கள். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து காமெடி, காதல் கலந்த கதையாக எடுக்கப்படுகிறது.

News April 25, 2024

ஈரோடு : போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது

image

பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடக் கோரி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க விவசாயிகள் நேற்று இரவு திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்றும் 2வது நாளாக போராட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

News April 24, 2024

மிஸ் கூவாகம் பட்டம் பெற்ற ஈரோடு திருநங்கை

image

விழுப்புரத்தில் தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் சமூக நலத்துறை, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் மிஸ் கூவாகம் 2024 நிகழ்ச்சி நடந்தது. இதில் திருச்சி, சேலம், சென்னை, துாத்துக்குடி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, ஈரோடு, கோவை பகுதிகளை சேர்ந்த 27 திருநங்கைகள் பங்கேற்றனர். இதில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த, ரியா மிஸ் கூவாகமாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது.

News April 24, 2024

ஈரோட்டில் வசூல் வேட்டை ஆரம்பம்

image

ஈரோடு மாநகராட்சியின் 2023-2024 நிதியாண்டுக்கான சொத்து வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரிகள் மற்றும் நிலுவை வரிகளை கடந்த மார்ச் 31ம் தேதிக்குள் வசூலிக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் நாடாளுமன்ற தேர்தலால், வரி செலுத்த மக்களை கட்டாயப்படுத்தவில்லை. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் நிறைவின் காரணமாக தற்போது மாநகராட்சி அலுவலர்கள், வரி பாக்கி வைத்துள்ள வீடுகளில் வரி வசூலிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

News April 24, 2024

3ஆம் இடத்தை பிடித்த ஈரோடு

image

ஈரோடு மாவட்டத்தில் ஒவ்வொரு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.அதன்படி நேற்றைய வெயில் நிலவரத்தை இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டது.அதில் 109 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்துடன் இந்தியாவிலேயே அதிகபட்ச வெப்பநிலை பதிவான இடங்களில் ஈரோடு 3ஆம் இடத்தை பிடித்துள்ளது.

News April 24, 2024

ஈரோடு: 3 நாட்கள் விடுமுறை

image

கர்நாடகா மாநிலத்தில் வரும் 26ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு – கர்நாடகா எல்லையான, ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட தாளவாடியில் உள்ள அரசு மதுபான கடை (கடை எண் : 3948) மற்றும் அதனுடன் இயங்கும் பார் ஏப்ரல் 24, 25 மற்றும் 26 ஆகிய 3 நாட்கள் மூடப்படும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார்.

News April 24, 2024

ஈரோடு: மாயமான எழுத்துக்கள்

image

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தீரன் சின்ன மலை என்று எழுத்துகளால் பொறிக்கப்பட்டு பெருத்துறை சாலையில் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகம் என்ற வரிகளில் உள்ள எழுத்துகள் காணாமல் போனதாக புகார் எழுந்துள்ளது.  சரியான எழுத்துகளை அமர்த்தி ஆட்சியர் அலுவலகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

News April 24, 2024

ஈரோடு ஆட்சியர் அழைப்பு

image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மெட்ரிக், சுயநிதி, துவக்க மற்றும் மழலையர் பள்ளியில், குழந்தைகளுக்கான இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதற்காக இன்று (ஏப்ரல் 22ஆம் தேதி) முதல் மே 20ஆம் தேதிக்குள் rte.tnschools.gov.in என்ற இணைய தளத்தில், தகுந்த ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம் என ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News April 24, 2024

மே 1 முதல் சம்பல்பூர் – ஈரோடு சிறப்பு இரயில் இயக்கம்

image

ஒடிசா மாநிலம், சம்பல்பூரிலிருந்து மே 1 முதல் ஜூன் 26ஆம் தேதி வரை வாரந்தோறும் புதன்கிழமை காலை 11.35 மணிக்கு புறப்படும் இரயில் (எண்:08311) மறுநாள் இரவு 8.30 மணிக்கு ஈரோடு வந்தடையும். பின் மறுமாா்க்கமாக இந்த இரயில் (எண்:08312) மே 3 முதல் ஜூன் 28 வரை வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 11.15 மணிக்கு சம்பல்பூா் சென்றடையும் என தெற்கு இரயில்வே சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

News April 22, 2024

ஈரோடு: தேடும் பணி தீவிரம்

image

ஈரோடு மாவட்டம், புஞ்சைபுளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் (27). இவர் நேற்று மாலை நண்பர்களுடன், முடுக்கன்துறை – பவானி ஆற்றில் குளித்த போது நந்தகுமார் தண்ணீரில் மூழ்கி இழுத்து செல்லப்பட்டார். உடனடியாக தகவல் அறிந்த பவானிசாகர் தீயணைப்புதுறையினர் நந்தகுமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவாகியும் நந்தகுமார் கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்று காலையும் நந்தகுமாரை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

error: Content is protected !!