Erode

News October 16, 2024

சென்னிமலை அருகே சிறுத்தை நடமாட்டமா?

image

சென்னிமலை அருகே மர்ம விலங்கின் கால் தடம் ஆட்டுப்பட்டி அருகே பதிந்துள்ளதால் சிறுத்தை நடமாட்டமா? என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர் சென்னிமலை அடுத்துள்ள சில்லாங்காட்டு வலசு குட்ட காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் குமாரசாமி விவசாயியான இவரது தோட்டத்தில் ஆட்டுப்பட்டி அருகே மர்ம விலங்கின் கால் தடம் பதிந்துள்ளது.இதை வனத்துறையினர் ஆய்வு செய்து சென்றனர்.

News October 16, 2024

ஈரோட்டில் அமைச்சர் நேரில் ஆய்வு

image

ஈரோடு மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் ஈரோடு மாநகரம் 44வது வார்டு புதுமை காலனி, நாடார் மேடு பகுதிகளில் மலை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் சென்று கால்வாய்கள் தூர்வாரும் பணியினை பார்வையிட்டார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜகோபால் சுன்கரா, மாநகராட்சி கமிஷனர் , ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் ,உடன் சென்றனர்.

News October 16, 2024

கன மழையால் ஈரோடு வரும் ரயில் ரத்து!

image

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்நிலையில், சென்னையில் பெய்து வரும் கனமழை பெய்து வருகிறது. இதனால், சென்னை – பேசின் பிரிட்ஜ், வியாசர்பாடி இரயில் நிலையம் இடையே தண்டவாளங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. எனவே சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இருந்து இன்று இரவு 11 மணிக்கு புறப்பட்டு ஈரோடு செல்ல இருந்த ஏற்காடு எக்ஸ்பிரஸ் இரயில் ரத்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News October 16, 2024

ஈரோடு மக்களுக்கு மழை பற்றிய அறிவிப்பு

image

ஈரோடு மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு, மழை வெள்ளம், தொடர்பான புகார்களை தெரிவிக்க 1077/0420-2260211 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது. தமிழ்நாடு அலர்ட் என்ற செயலி மூலம் வானிலை பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். மேலும் வடகிழக்கு பருவமழை பாதிப்பு குறித்த தகவல்களும் தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

News October 16, 2024

பொதுவினியோக திட்டத்திற்கு 2,000 டன் நெல் வருகை

image

திருவாரூர் மாவட்டத்தில் இருந்து ஈரோடு மாவட்ட பொது விநியோக திட்டத்திற்காக 2,000 டன் நெல் மூட்டைகள் தனி சரக்கு ரயிலில் ஈரோடு இரயில்வே கூட்ஸ் செட்டிற்கு நேற்று வந்தடைந்து. இதனை சுமைதூக்கும் லாரிகளில் ஏற்றி நெல் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த நெல் மூட்டைகள் அரிசியாக மாற்றப்பட்டு, ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

News October 15, 2024

புதிய பேருந்து நிலையம் நவம்பரில் திறப்பு

image

ஈரோடு அடுத்த சோலாரில் ரூ.63.50 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி நடந்து வருகிறது. இப்பணிகள் முடிவடையும் நிலையில், பேருந்து நிலைய திறப்பது குறித்து மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு ஈரோடு ஆணையாளர் மனிஷ் தலைமை வகித்தார். இதில் வட்டார போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். நவம்பர் இறுதியில் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது.

News October 15, 2024

ஈரோடு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவில் ஒரு இடத்தில், அக்டோபர் 19ம் தேதி (சனிக்கிழமை) பொது விநியோகத் திட்ட குறைதீர் நாள் முகாம் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் புதிய ரேசர் கார்டு பெற மனுக்கள், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம், அலைபேசி எண் மாற்றம் போன்ற கோரிக்கைகளை மனுவாக அளித்து தீர்வு பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News October 15, 2024

ஈரோட்டில் வேலை வாய்ப்பு முகாம்

image

ஈரோடு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டு மையம், வேளாளர் பொறியியல், தொழில்நுட்ப கல்லூரி இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் 19/10/2024 காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. கல்வித் தகுதி 8 ஆம் வகுப்புமுதல் பட்ட படிப்பு வரை அனைவரும் கலந்து கொள்ளலாம்.

News October 15, 2024

தொழிற்சாலை உரிமம் புதுப்பிக்க அறிவுறுத்தல்

image

ஈரோடு மாவட்டத்தில் தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற அனைத்து தொழிற்சாலைகளும் 2025ஆம் ஆண்டுக்கான உரிமத்தை புதுப்பிக்க வேண்டும். இதற்கு https://dish.tn.gov.in என்ற இணையதளத்தில் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் அக்டோபர் 31-பின் விண்ணப்பித்தால் தாமத கட்டணம் செலுத்த வேண்டும் என ஈரோடு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் துறை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

News October 15, 2024

ஈரோட்டிற்கு விடுமுறை: பரவும் வதந்தி

image

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. அதைத் தொடர்ந்து பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (15.10.24) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என செய்தி ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. தற்போது TN Fact Check தற்போது சமூக வலைதளங்களில் பரவும் செய்தி எடிட் செய்து வெளியாகியுள்ளதாக அறிவித்துள்ளது.