Erode

News May 7, 2024

ஈரோடு மாவட்டத்திற்கு எச்சரிக்கை

image

தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்குகளில் நிலவும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 7, 2024

உங்களுடன் உங்கள் எம்.எல்.ஏ நிகழ்வு

image

மொடக்குறிச்சி அடுத்த துய்யம்பூந்துறை ஊராட்சியில் உள்ள மாதேஸ்வரன் நகர் பகுதியில், நான் உங்களுடன் உங்கள் எம்.எல்.ஏ எனும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களை, மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ சரஸ்வதி நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பின் பொது மக்களின் கோரிக்கைகளை மனுக்களாக பெற்றார்.

News May 6, 2024

ஈரோட்டில் மதிய வேலை ரத்து

image

ஈரோடு மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மேலும் அக்னி வெயிலின் தாக்கம் காரணமாக வெப்ப காற்று வீசுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாநகராட்சி தூய்மை பணியாளர்களின் பணி நேரம் மாற்றம் செய்யப்பட்டு காலை 6 முதல் 11 வரையும், மாலை 4 முதல் 9 வரையும் பணி நேரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

News May 6, 2024

ஈரோடு: விஏஓ அலுவலகங்களில் ஆட்சியர் ஆய்வு

image

கொடுமுடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் கொடுமுடி வட்டத்திற்குட்பட்ட இச்சிப்பாளையம் , வெங்களூர் ஆகிய கிராம நிர்வாக அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, பட்டாமாறுதல், பல்வேறு சான்றிதழ்கள் வழங்குதல், நில அளவை போன்ற பதிவேடுகளை பராமரிக்கவும், உரிய நேரத்தில், சரியான முறையில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்றார்.

News May 6, 2024

பெருமுகை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் 

image

கோபிசெட்டிப்பாளையம் அடுத்த பெருமுகை சேட்டுக்காட்டுப்புதூரில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கால் தடயங்களை வைத்து சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறையினர் உறுதி செய்துள்ளனர். தற்போது சென்ஸார் ட்ரோன் மூலம் சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். சுற்று வட்டார பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

News May 6, 2024

ஈரோட்டில் மழைக்கு வாய்ப்பு

image

ஈரோடு மாவட்டத்தில் இன்று (மே.06) இரவு 7 மணி வரை லேசான இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிகத்து வரும் நிலையில், தற்போது மேற்கு திசை காற்றின் மாறுபாட்டால் கடந்து சில நாட்களாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 6, 2024

ஈரோடு நட்டாற்றீஸ்வரர் கோயில் சிறப்பு!

image

ஈரோடு, காங்கேயம் பாளையத்தில் காவிரி நதியின் நடுவில் அமைந்துள்ளது நட்டாற்றீஸ்வரர் கோயில். இங்குள்ள லிங்கம் மணலில் வடிக்கப்பட்டதாகும். இக்கோவிலின் தல விருட்சமாக பாறையின் மீதுள்ள அத்திமரம் உள்ளது. இங்குள்ள முருகன் நடக்கும் பாவனையிலும், இடது கையில் கிளி வைத்திருப்பது போன்றும் காட்சித் தருகிறார். ஆற்றிற்கு செல்ல பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஆற்றில் தண்ணீர் குறைவாக இருந்தால் நடந்தே கோவிலுக்கு செல்லலாம்.

News May 6, 2024

ஈரோடு அருகே விபத்தில் 13 பேர் காயம்

image

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள், பனியன் கம்பெனி தொழிலாளர்கள் ஊட்டி சென்றுள்ளனர். மீண்டும் எடப்பாடிக்கு திரும்பிக்கொண்டிருந்த போது காசிபாளையம் அருகே வந்த போது வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியது. இதில் 13 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.

News May 6, 2024

ஈரோடு : 97.42 சதவீத தேர்ச்சி

image

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு தேர்வில் ஈரோடு மாவட்டத்தில் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 97.42 ஆகும். இதில் 9,864 மாணவர்கள், 11,362 மாணவிகள் என மொத்தம் 21,226 பேர் தேர்வு எழுதினர். இதில் 9,540 மாணவர்கள், 11,138 மாணவிகள் என மொத்தம் 20,678 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்த மாணவர்கள் 96.72%, மாணவிகள் 98.03% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநிலத்தில் ஈரோடு 97.42 சதவீதத்துடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

News May 6, 2024

ஈரோட்டில் 97.42% பேர் தேர்ச்சி: இரண்டாம் இடம் பெற்று சாதனை

image

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில், ஈரோடு மாவட்டத்தில் 97.42% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் 96.72 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர்கள் 98.03 % தேர்ச்சி அடைந்துள்ளனர்.ஈரோடு இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளது

error: Content is protected !!