India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பஸ் நிறுத்துமிடத்தில் பொதுமக்களுக்கு வெயிலின் தாக்கம் இல்லாமல் இருப்பதற்காக பந்தல் அமைத்து உள்ளனர். இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாராட்டு தெரிவித்தனர்.
12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சி அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதில் சிறந்த கல்வியாளர்கள் கலந்து கொண்டு 12ஆம் வகுப்பிற்கு பிறகு உயர்கல்வியியல், கலை அறிவியல், பொறியியல், அறிவியல் தொழில்நுட்ப பிரிவுகள் என்னென்ன படிப்புகள் உள்ளன என்பது தொடர்பாக விரிவான தகவல்களை மாணவ, மாணவியருக்கு வழங்க உள்ளனர். ஈரோட்டில் மே.11 இல் கல்லூரி கனவு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 30 முதல் 40 கிமீ வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதன்படி ஈரோடு உட்பட 14 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 30 முதல் 40 கிமீ வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதன்படி ஈரோடு உட்பட 12 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தியூர் அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேளாண் விளை பொருட்கள் ஏலம் நேற்று நடைபெற்றது. இதில் 3,254 தேங்காய்கள் ரூ.20,574-க்கும், 74 மூட்டை தேங்காய் பருப்பு ரூ.2,17,125 க்கும் ஏலம் போனது. 172 மூட்டை நிலக்கடலை ரூ.3,72,176 க்கும், 22 மூட்டை எள் ரூ.1,88,034 க்கும் ஏலம் போனது. மொத்தம் வேளாண் விளை பொருட்கள் ரூ.7,97,909 க்கு ஏலம் போனதாக விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
அந்தியூர் அரசு மருத்துவமனையில் காலை முதல் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் கர்ப்பிணிகள், குழந்தைகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு எலக்ட்ரீசியன் வரவழைக்கப்பட்டு பழுது சரி செய்யப்பட்டது. வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்து வரும் நிலையில் அரசு மருத்துவமனையில் மின்சாரம் தடை ஏற்பட்டது.
ஈரோடு மக்களவை தொகுதியில் நடந்து முடிந்த தேர்தலில் பதிவான மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் சித்தோடு அடுத்த ஐஆர்டிடி பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் இந்த மையத்தில் சிசிடிவி கேமராக்கள் செயல் இழந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனிடையே மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா இன்று வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை கொடிசியாவில் இருந்து ரூ. 666 கோடி மதிப்பிலான 810 கிலோ தங்க நகைகளை கொண்டு சென்ற சரக்கு வாகனம் நேற்று இரவு சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. சமத்துவபுரம் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியது. அப்போது, வாகனத்துக்கு முன்னால் சென்ற லாரியின் மேல் மூடப்பட்டிருந்த தார்பாய் கழன்று காற்றில் பறந்து வந்து சரக்கு வாகனத்தின் முன்பகுதியில் விழுந்ததால் நிலை தடுமாறிய வாகனம் கவிழ்ந்தது.
தமிழில் முன்னணி Short News செயலியான Way2News-ல், உங்களை சுற்றி நடக்கும் உள்ளூர் நிகழ்சிகள், புகார்கள், கோரிக்கைகள், அரசியல் நிகழ்வுகளை செய்திகளாக பதிவேற்றி நீங்களும் செய்தியாளராக மாறுங்கள். ஏதேனும் சந்தேகம் இருந்தால் 9642422022, என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
ஈரோடு, சத்தியமங்கலம் அத்தானி ரோட்டில் அத்தப்பகவுண்டன்புதூர் பிரிவில் ஊட்டியில் இருந்து சென்னைக்கு பயணிகளை ஏற்றி சென்ற தனியார் சுற்றுலா பேருந்து மழை காரணமாக சாலையோரமாக நின்றிருந்த ரோடு போடும் இயந்திரம் மீது மோதி சாலையில் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த 17 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இது குறித்து சத்தியமங்கலம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.