India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு மாவட்டத்தில் இன்று (மே.11) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பதிவாகக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. கோடையில் தமிழகத்தில் சமீபகாலமாக ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே இன்று இருசக்கர வாகனத்தின் மீது சிறிய ரக சரக்கு வாகனம் மோதிய விபத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் தற்போதைய ஊராட்சி மன்ற தலைவரின் கணவருமான அதிமுகவை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அம்மாபேட்டை போலீசார் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெள்ளோடு பறவைகள் சரணாலயம், ஈரோடு சென்னிமலையை அடுத்த வெள்ளோடு எனும் ஊரில் 77.85 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்குள்ள பெரிய ஏரிக்கு ஆண்டின் நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலத்தில், இந்திய நாட்டிலுள்ள பறவைகளான மஞ்சள் மூக்கு நாரை, கரண்டி வாயன், கூழைக்கடா, நத்தைக் குத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன் போன்றவைகள் வருகின்றன. இவை தவிர, வெளிநாடுகளிலிருந்தும் 109 வகையான பறவைகள் வந்து செல்கின்றன.
அந்தியூர் அடுத்த பூதப்பாடி, குருவரெட்டியூர், சென்னம்பட்டி, பூனாச்சி, குறிச்சி, நத்தமேடு ஆகிய பகுதிகளில் நேற்று இரவு 8.30 மணி அளவில் கனமழை தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் பெய்த கன மழையால், கோடை வெயிலின் வெப்பம் தணியும் நிலை ஏற்பட்டுள்ளது. பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்தாலும், இரவில் மழை பெய்வதால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி தாலுகா சிவகிரி அம்மன் கோயில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி 495 மதிப்பெண்களும், பிரசிதா 482 மதிப்பெண்களும் ஆர்த்தி 479 மதிப்பெண்களும் பெற்றனர்.100 மாணவிகள் தேர்வு எழுதி அனைவரும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். இப்பள்ளி 10 ஆண்டுகளாக 10, 12ஆம் வகுப்புகளில் 100% தேர்ச்சி பெற்று வருவதும், அரசு பள்ளி மாணவி 495 மதிப்பெண் பெற்றது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்நிலையில், தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மாணவர்களின் எதிர்கால நலன் கருதி 10ஆம் வகுப்பு துணைத் தேர்வை ஜூலை 2ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் இந்தக் கல்வியாண்டிலேயே உயர் கல்வி பயிலத் தகுதியுடையோராவார். இதற்கான தேர்வு அட்டவணை இன்று (மே 11) வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
தாளவாடி அடுத்த குமிட்டாபுரம் வனப்பகுதியில் கடந்த மாதம் ஆண் யானை இறந்தது தெரியவந்தது. அதனை உடற்கூறாய்வு செய்து அடக்கம் செய்தனர். இந்நிலையில் நடைபெற்ற விசாரணையில் தந்தத்திற்காக யானையை மர்ம ஆசாமிகள் கொன்றது தெரியவந்தது. இதுகுறித்து வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து தமிழக, கர்நாடக மாநிலங்களில் வனப்பகுதிகளில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் V. ஹாசினி 479/500 முதல் மதிப்பெண்கள் பெற்று முதல் இடம் பிடித்துள்ளார். மாணவிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து, மருத்துவர் ஆவது தான் எனது கனவு என அவர் தெரிவித்தார்.
பவானி நகரில் மிக சிறப்பு வாய்ந்த சங்கமேஸ்வரர் கோயில் உள்ளது. இதன் பின் பகுதியில் காவிரி, பவானி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என 3 நதிகள் சங்கமிக்கிறது . இந்நிலையில் பவானி கூடுதுறை நுழைவு வாயில் பகுதியில் உள்ள பவானி ஆற்றில், பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மக்கள் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் அப்பகுதி பவானி ஆற்றில் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது.
சமூக வலைதளங்களில் ஆன்லைன் வர்த்தகம், லோன் தருவது, கிரெடிட் கார்டு தருவது, வங்கி ஏ.டி.எம் கார்டு புதுப்பித்தல், ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குதல் போன்றவற்றை நம்பி ஏமாற வேண்டாம். ஓடிபி மூலம் மோசடியில் பணம் இழப்பு ஏற்பட்டவுடன் அல்லது 24 மணி நேரத்துக்குள் சைபர் கிரைம் உதவி எண் 1930க்கு அழைக்கலாம் அல்லது www.cybercrime.gov.in வெப்சைட்டில் புகாரளிக்கலாம் என ஈரோடு சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.