Erode

News October 18, 2024

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

image

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அக்டோபர் 23ஆம் தேதி முதல் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ (பிரிலிம்ஸ்) போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்கள் விவரங்களை https://forms.gle/13skgPbY9TZk5Zf18 என்ற லிங்க்கில் பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு 0424-2275860, 9499055943 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

News October 17, 2024

ஈரோடு மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு 

image

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள செவித்திறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகள் (காதுகேளாதவர்கள்) ஓட்டுனர் உரிமம் பெற்றுக்கொள்ள வரும் அக்டோபர் 19ஆம் தேதி (சனிக்கிழமை) சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் செவித்திறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகள் உரிய ஆவணங்கள் மற்றும் ஆதார் உடன் இணைந்த அலைபேசியுடன் பங்கேற்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News October 17, 2024

ஈரோட்டில் 93 தற்காலிக பட்டாசு கடைகளுக்கு அனுமதி

image

தீபாவளி வரும் அக்டோபர் 31 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஈரோட்டில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க உரிமம் கோரி ஆன்லைனில் 236 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பங்களின் அடிப்படையில் அதிகாரிகள் ஆய்வு செய்து தற்போது வரை 93 தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி அளித்துள்ளனர்.

News October 17, 2024

ஈரோட்டில் உலக தர நாள் கருத்தரங்கு 

image

இந்திய தர நிர்ணயம் அமைப்பின் கோவை அலுவலகம் சார்பில் உலகத் தர நாள் கருத்தரங்கு நேற்று ஈரோட்டில் தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கே.இ. பிரகாஷ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் 150-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களைச் சார்ந்தவர்களும் கல்லூரி மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.

News October 17, 2024

ஒரத்துப்பாளையம் அனை ஒரே நாளில் 16 அடி உயர்வு

image

சென்னிமலையில் உள்ள ஒரத்துப்பாளையம் அணையானது ஒரே நாளில் 16 அடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. அணையை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பெய்த மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகமாக காணப்பட்டது. இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என பொதுப்பணித்துறையினர் ஆற்றங்கரை ஓரம் இருக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டனர். மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லவும் என கூறினர்.

News October 17, 2024

கொடிவேரி அணைக்கு செல்ல 3ஆவது நாளாக தடை

image

ஈரோடு, கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் இன்று (17.10.2024) பவானி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி இன்று (17.10.2024) சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணைக்கட்டில் குளிக்க தடை செய்யப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News October 17, 2024

ஈரோடு: பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி

image

ஈரோடு, கொல்லம்பாளையத்தில் உள்ள கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில், பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி வகுப்பு வரும் அக்டோபர் 24ம் தேதி முதல் நவம்பர் 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. பயிற்சி, சீருடை, உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் 0424-2400338, 8778323213, 7200650604 என்ற எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 16, 2024

டெக்ஸ்வேலியில் தீபாவளி சிறப்பு விற்பனை

image

ஈரோடு, கங்காபுரம் – டெக்ஸ்வேலி ஜவுளி விற்பனையின் ஒருங்கிணைந்த வளாகம் உள்ளது. இங்கு தீபாவளியை முன்னிட்டு ‘பிக் தீபாவளி பிக் டெக்ஸ்வேலி’ என்ற தீபாவளி விற்பனை தொடங்கியுள்ளது. இதில் அக்.2 முதல் 31 வரை டெக்ஸ்வேலி வரும் அனைவருக்கும் கூப்பன் வழங்கப்பட்டு ஒரு மணி நேரத்துக்கு, 10 பேர் என்ற அடிப்படையில் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் டெக்ஸ்வேலி வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

News October 16, 2024

ஈரோட்டில் தக்காளி விலை உயர்வு

image

ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு தாளவாடி, தாராபுரம், தர்மபுரி, ஓசூர் ஆகிய ஊரிலிருந்தும், கர்நாடகா மாநிலத்திலிருந்து தக்காளிகள் விற்பனைக்கு வருகின்றன. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் ஈரோடு தினசரி மார்க்கெட்டின் தக்காளி கிலோ 80-க்கு விற்பனையாகிறது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

News October 16, 2024

பட்டாசு கடை அமைக்க 236 பேர் விண்ணப்பம்

image

ஈரோடு மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தற்காலிக பட்டாசு கடை அமைக்க, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் கால அவகாசம் முடிவந்துள்ளது. இந்நிலையில் மாவட்டம் முழுவதும் மொத்தம் 236 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 93 விண்ணப்பங்களை தீயணைப்பு துறையினர் ஆய்வு செய்து ஆர்.டி.ஓ.,வுக்கு அனுப்பியுள்ளனர். மீதியுள்ள விண்ணப்பங்கள் ஓரிரு நாட்களுக்குள் ஆய்வு செய்து அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.