Erode

News May 20, 2024

கஞ்சா விற்பனையில் இருவர் தலைமறைவு ஒருவர் கைது

image

பங்களாபுதூர் போலீசார் கே.என்.பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கொண்டப்பநாயக்கன் பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதயடுத்து அப்பகுதியில் சோதனை செய்ததில் 1200 கிராம் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. விசாரணையில் சுரேஷ், மொட்டையன், பெரியசாமி ஆகியோரில் பெரியசாமியை கைது செய்தனர். தலைமறைவான மற்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

News May 19, 2024

யானையை கொன்று தந்தத்தை வெட்டியவர் கைது

image

தாளவாடி கும்டாபுரம் மலைகிராமம் அருகே உள்ள காப்புக்காடு பகுதியில் ஏப்ரல் 22 ஆம் தேதி மர்மமான முறையில் ஆண் யானை ஒன்று இறந்து கிடந்தது. இந்நிலையில் யானையைக் கொன்று தந்தத்தை வெட்டிக் கடத்திச் சென்ற,கர்நாடக மாநிலம் எத்தேகவுடன் தொட்டியைச் சேர்ந்த பொம்மன் என்பவரை தாளவாடி வனத்துறையினர் இன்று கைது செய்தனர்.மேலும் அவரிடமிருந்த யானையின் 2 தந்தங்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 19, 2024

ஈரோடு: காட்டுப்பன்றி தாக்கி படுகாயம்

image

கடம்பூரை அடுத்த குன்றி பகுதியை சேர்ந்தவர் பொம்மன் (வயது 64), ஆடு, மாடு மேய்த்து வரு கிறார் பண்ணந்தூர் பகு தியில் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு புதருக்குள் இருந்து காட்டுப்பன்றி வேகமாக ஓடிச்சென்று பொம்மனை திடீரென தாக்கியது. இதில் அவர் காயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக் கத்தினர் மீட்டு சிகிச்சைக் காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்

News May 18, 2024

எமிஸ் சேகரிப்பு பணியில் ஆசிரியர்கள் தீவிரம்

image

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கல்வி மேலாண்மை தகவல் மையம் திட்டத்தில் (எமிஸ்) மாணவர்களின் அனைத்து வகையான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் எமிஸ் விவரங்கள் அப்டேட் செய்யும் பணியில் ஈரோடு மாவட்டத்தில் ஆசிரியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாணவர்களின் பெற்றோர்களது செல்போன் எண்ணிற்கு ஓடிபி அனுப்பபட்டு தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

News May 18, 2024

நம்பியூர் அருகே லாரி கவிழ்ந்து விபத்து

image

நம்பியூர் வி.பி.என். கான்ட்ராக்டர் நடராஜன் என்பவருக்கு சொந்தமாக ரெடிமிக்ஸ் லாரி உள்ளது. இந்த லாரி ஒப்பந்த பணிகளுக்காக நம்பியூரிலிருந்து கலவை ஏற்றிகொண்டு கோபி வந்தது. வாகனம் குருமந்தூர்மேடு ரவுண்டானா கோபி மெயின் ரோட்டில் திரும்பியபோது நிலை தடுமாறி சாலையில் இருந்த மையத்தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. ஓட்டுநரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

News May 18, 2024

ஆபத்தை உணராமல் காட்டாற்று வெள்ளத்தை கடந்த மக்கள்

image

சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் 50 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் குரும்பூர் பள்ளம் மற்றும் சர்க்கரைப் பள்ளம் என 2 காட்டிற்குள் கடந்து செல்ல வேண்டும். இரு காட்டிற்குள் குறுக்கே உயர் மட்ட பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் கடம்பூர் மலைப்பகுதியில் பெய்த கனமழையால் ஆபத்தை உணராமல் காற்றாற்று வெள்ளத்தை கிராம மக்கள் கடந்து சென்றனர்.

News May 18, 2024

ஈரோடு: ரயிலில் சிக்கிய கஞ்சா பொட்டலங்கள்

image

ஜார்கண்ட் மாநிலம் டாடா நகரில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று
ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தது. ஈரோடு ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா சாய் ஸ்ரீ தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். முன்பதிவு பெட்டியில் கேட்பாரற்று கிடந்த ஒரு பையை கைப்பற்றி போலீசார் சோதனையிட்டனர். அந்த பையில் 90 கிலோ கஞ்சா பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

News May 17, 2024

வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு

image

ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் சித்தோடு ஐஆர்டிடி கல்லூரியில் சீலிடப்பட்ட அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த அறைகளில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

News May 17, 2024

ஈரோடு: நாளை கனமழைக்கு வாய்ப்பு

image

ஈரோடு மாவட்டத்தில் நாளை (மே.18) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாளை ஈரோட்டில் கனமழை பதிவாகக்கூடும். சமீபமாக தமிழகத்தின் மழைப் பொழிவின் அளவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 17, 2024

ஈரோட்டில் புதியதாக 8 பேருந்துகள்

image

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், ஈரோடு மண்டலத்துக்கு ஏற்கனவே 20 பேருந்துகள் வழங்கப்பட்டு, அவை பயன்பாட்டில் உள்ளது. தற்போது புதிதாக 8 பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இவை ஈரோட்டில் நகர பேருந்துகளாக முதல் பயணத்தை தொடங்கியுள்ளது. இந்த பேருந்துகளில் டிஜிட்டல் வழித்தட பலகை மற்றும் அதிக இடைவெளியுடன் கூடிய இருக்கைகள் உள்ளது. இந்த பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!