India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோபி, கீழ்வாணியை சேர்ந்தவர் முனியன்(45). இவர் கோபி அருகே கலிங்கியம் மாகாளியம்மன்கோயில் பின்புறம் 9 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் மதுபோதையில் சில்மிஷம் செய்ய முயன்றுள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் முனியனை பிடித்து மகளிர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரித்து போக்ஸோ வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலில் மாவட்ட சிறையில் அடைத்தனர்.
ஈரோடு மாவட்டம் பவானியில், கோவை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சித்தோடு அருகே நேற்று(மே 21) லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரிக்கு பின்னால் பல கார்கள் வந்து கொண்டிருந்தன. அப்போது திடீரென லாரி டிரைவர் பிரேக் பிடித்து லாரியை நிறுத்தினார். இதை எதிர்பார்க்காத, பின்னால் வந்த 2 கார்களும் ஒன்றன் மீது ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.
கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற நிலக்கடலைக்காய் ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 63 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டுவந்தனர்.
இதில் கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ.65
00 க்கும், அதிகபட்ச விலையாக ரூ.80.26 காசுக்கும், சராசரி ரூ. 78.36 காசுக்கும் ஏலம் போனது.
மொத்தம் 2,129 கிலோ எடையுள்ள நிலக்கடலைகாய் 1 லட்சத்து 66 ஆயிரத்து 523 ரூபாய்க்கு விற்பனையானது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மாணவ-மாணவிகள் 2024-25ஆம் ஆண்டுக்கான முதுநிலை பி.எச்.டி., மற்றும் முனைவர் ஆராய்ச்சி உயர் படிப்புகளை வெளிநாடுகளில் தொடர விண்ணப்பிக்கலாம். இதற்கு https://overseas.tribal.gov.in என்ற இணைய வழியில் மே 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விவரங்களுக்கு https://overseas.tribal.gov.in இணையதளத்தில் அறியலாம் என ஈரோடு கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2024 – 2025 ஆம் கல்வியாண்டில் மாணவ மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பதிவு செய்வதற்கான கால அவகாசம் 24. 5.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி அடைந்து விண்ணப்பிக்காத மாணவர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கல்லூரி முதல்வர் முனைவர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.
பவானி பூக்கடை வீதியில் பிரசித்தி பெற்ற பாலதண்டாயுதபாணி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி விசாக
9 ஆம் ஆண்டு உலக நன்மை வேண்டி சிறப்பு சத்ரு சம்ஹார த்ரிசதி ஹோமம், சுப்பிரமணிய மூல மந்தர ஹோமம் நாளை நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து சிறப்பு கலசாபிஷேகம், சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற உள்ளது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
பெருந்துறையை அடுத்த சரளை, பொன்முடி பகுதியில் நேற்று மாலை பெய்த கனமழையால் அப்பகுதியில் உள்ள ஓடையின் கரையில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அருகில் உள்ள 45 வீடுகள் கொண்ட குடியிருப்பில் 17 வீடுகளுக்குள் முழுவதுமாக தண்ணீர் புகுந்தது. பின்னர் விரைந்து வந்த வருவாய்துறையினர் பொதுமக்களை மீட்டு அரசு பள்ளிகளில் தங்க வைத்தனர். பின் ஜேசிபி மூலம் இரவில் தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்றது.
அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதி உள்ளது. கோடை காலத்தில் பர்கூர் மலைப்பகுதியில் உள்ள மரங்கள் காய்ந்தும் , செடி, கொடிகள் கருகியும் காணப்பட்டன. கடந்த சில நாட்களாக இங்கு கோடை மழை பெய்து வருகிறது. இதனால் பர்கூர் மலைப்பகுதியில் உள்ள மரங்கள் துளிர்த்து பசுமையாக காணப்படுகின்றன. செடி, கொடிகளும் வளர்ந்துள்ளன. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மலைப்பாதையின் இயற்கை அழகை ரசித்தவாறு செல்கின்றனர்.
ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று மாலை முதல் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி முதல் இன்று காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில், ஈரோடு – 6.30 மி.மீ, பவானி – 24.00 மி.மீ, கவுந்தப்பாடி – 12.20 மி.மீ, அம்மாபேட்டை – 35.20 மி.மீ, வரட்டுப்பள்ளம் – 9.20 மி.மீ, கோபி – 9.20 மி.மீ, எலந்தகுட்டைமேடு – 14.80 மி.மீ என மொத்தமாக 318.30 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
ஈரோடு மாவட்டம், நெரிஞ்சிப்பேட்டை பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கதவணை மின் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இதனால் நெரிஞ்சிப்பேட்டை மற்றும் சேலம் மாவட்டம், பூலாம்பட்டி ஆகிய ஊர்களுக்கு இடையேயான படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் நெரிஞ்சிப்பேட்டை கதவணை பாலம் வழியாக சுமார் 8 கி.மீ. சுற்றி பூலாம்பட்டிக்கு செல்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.