Erode

News May 28, 2024

பவானி : தடையின்றி குடிநீர் வழங்க ஜெனரேட்டர்கள்

image

ஈரோடு மக்களுக்கு தடையின்றி குடிநீா் வழங்க பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் பவானி அடுத்த வரதநல்லூர் நீரேற்று நிலையத்தில் 2000 கி.வா மற்றும் 1250 கி.வா திறன் உள்ள 2 ஜெனரேட்டா், சூரியம்பாளையம் மற்றும் வஉசி பூங்கா நீா்தேக்க தொட்டிகளுக்கு 1,250 கி.வா உள்ள ஜெனரேட்டா் என 4 ஜெனரேட்டா்கள் ரூ.8 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி பொறியாளா் விஜயகுமாா் தெரிவித்தார்.

News May 28, 2024

239 கடைகளில் உணவு பாதுகாப்புதுறையினர் சோதனை

image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாம்பழ குடோன்கள், மாம்பழ விற்பனை கடைகள் மற்றும் பழ குடோன்களில் கடந்த 25 நாட்களில் 239 கடைகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை நடத்தினர். இதில் செயற்கை ரசாயனம் மற்றும் கார்பைட் கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 158 கிலோ மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் 16 வியாபாரிகளுக்கு விளக்க நோட்டீஸ் வழங்கப்பட்டு ரூ.16,000 அபராதம் விதித்தனர்.

News May 27, 2024

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் பலி

image

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த லக்காபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் (70). இவர் ஈரோடு முத்தூர் மெயின் ரோட்டில் லக்காபுரம் கடையில் மருந்து வாங்க நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த அடிபட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News May 27, 2024

இளைஞர் கொலை – சாலை மறியல்

image

ஈரோடு மாவட்டம் மலையம்பாளையம் அருகே நேற்று இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும் என
கூறி உறவினர்கள் இன்று ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உறவினர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

News May 27, 2024

ஈரோடு: 722 கருவிகள் விநியோகம்

image

ஈரோடு மாவட்டத்தில் 834 ரேஷன் கடைகளுக்கு புதிய பிஓஎஸ் கருவி மற்றும் கருவிழி ஸ்கேன் செய்யும் கருவி வழங்க முடிவு செய்யப்பட்டது. இதில் 112 ரேஷன் கடைகளுக்கு சோதனை அடிப்படையில் பயன்படுத்தும் வகையில் புதிய பிஓஎஸ் கருவி மற்றும் கருவிழி ஸ்கேன் கருவி வழங்கப்பட்டுள்ளது. எனவே மீதமுள்ள 722 கருவிகள் வழங்கும் பணியானது தொடங்கி உள்ளது.

News May 27, 2024

ஈரோடு சத்தியமங்கலம் வனவிலங்கு சரணாலயம் சிறப்புகள்!

image

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் 2008இல் ஆரம்பிக்கப்பட்டு 2011இல் விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த வாழ்விடமானது மிகப்பெரிய பல்லுயிர் பெருக்கத்தைக் கொண்ட இச்சரணாலயத்தைச் சூழ்ந்து கொல்லேகால் வனக்கோட்டம், பிலகிரி ரங்கசாமி கோயில் காட்டுயிர் சரணாலயம், ஈரோடு வனக்கோட்டக் காட்டுயிர் பகுதிகள் உள்ளன. இந்த சரணாலயம் 1,411.6 ச.கி.மீ பரப்பளவு கொண்டது. இதுவே தமிழகத்தின் மிகப்பெரிய வனவிலங்கு பாதுகாப்பகம் ஆகும்.

News May 27, 2024

ஈரோடு : மேட்டூர் சாலையில் பேருந்துகள் செல்ல தடை

image

ஈரோடு பேருந்து நிலையத்திற்கு ஜி.எச் ரவுண்டானா வழியே வரும் பேருந்துகள் அகில் மேடு மற்றும் வாசுகி வீதி வழியே செல்ல வேண்டும். இந்நிலையில், நேற்று முன்தினம் மேட்டூர் சாலையில் விதிமீறி வந்த அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர். எனவே ஈரோடு ஜி.எச் ரவுண்டானா பகுதியில் இருந்து மேட்டூர் சாலை வழியே பேருந்து செல்ல அனுமதியில்லை என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

News May 27, 2024

ஈரோடு: கலைக்கூடல் விழா

image

பெருந்துறை அருகே காஞ்சிகோவில் ஸ்ரீதேவி அம்மன் தேர் திருவிழாவை முன்னிட்டு எட்டாம் ஆண்டின் கலைக்கூடல் விழாவில் காஞ்சி கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. 100 சதவீதம் பெற்று தந்த தலைமை ஆசிரியர் தங்கமுத்துவை பாராட்டி கேடயம் வழங்கப்பட்டது. 

News May 26, 2024

தேசிய சாகச விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

image

மத்திய அரசின் 2023 ஆம் ஆண்டு டென்சிங் நார்கே தேசிய சாகச விருதுக்கு ஈரோடு மாவட்டத்தில் உள்ள தகுதியான விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு https://awards.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வரும் 30 ஆம் தேதிக்குள் ஈரோடு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் சதீஸ்குமார் தெரிவித்துள்ளார்.

News May 26, 2024

ஈரோடு: 1.92 லட்சம் மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகம்

image

தமிழ்நாட்டில், கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. எனவே அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் இலவசமாக சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் 1,92,283 மாணவ, மாணவியருக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது. இவை நாளை (27ஆம் தேதி) முதல் பள்ளிகளுக்கு அனுப்பப்படும் என ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சம்பத் தெரிவித்தார்.

error: Content is protected !!